சனி, 17 ஆகஸ்ட், 2019

வள்ளலாரும் சுந்தரசுவாமிகளும் !

 வள்ளலாரும் சுந்தரசாமிகளும்.!

வள்ளலார் சிதம்பரத்தில் தங்கி இருந்தார்.அதே நாளில் கோடகநல்லூர் சுந்தரசாமிகளும் ஓர் இடத்தில் தங்கி இருந்தார்.இருவரும் சிதம்பரத்தில் தங்கி இருப்பது சீடர்கள் மூலம் இருவருக்கும் தெரிந்த்து.

சுந்தரசுவாமிகளை சந்திக்க வள்ளலார்  நேரம் கேட்டுவர தன் அன்பர்களை அனுப்பி வைத்தார்.அதை அறிந்த சுந்தரசுவாமிகள் ஐயோ! அவர் இங்கு வரவேண்டாம் நாமே அவர் இருக்குமிடம் செல்வோம் என்று தன் சீடர்களுடன் வள்ளலார் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.

இருவருக்கும் ஆசனங்கள் எதிர் எதிரே போட்ப்பட்டன.வள்ளலார் நேர் முகமாக உட்கார்ந்தார்.சுந்தரசுவாமிகள் வள்ளலாருக்கு நேரே உட்காராமல் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தார்.

இருவரும் இறைவனைப் பற்றியும்.ஆன்மீகத்தைப் பற்றியும்.அருளைப்பற்றியும்.மனித வாழ்க்கை முறை பற்றியும்.ஒருநாள் முழுவதும் உரையாடிக் கொண்டே இருந்தார்கள்.சீடர்கள் ஆனந்தமாக மகிழ்ச்சியுடன் ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

சுந்தரசுவாமிகளின் சந்தேகங்களுக்கு வள்ளலார் பதில் அளித்துக் கொண்டே இருந்தார்.சுந்தரசுவாமிகள் வள்ளலாரின் அருள் ஆற்றலைக் கண்டு நீங்கள் உலக மகா ஞானி என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.
அவர் முகமும் வாடிப்போயிற்று..

அவற்றை உணர்ந்த வள்ளலார்.தன்னைத் தாழ்த்தி அவரை உயர்த்தி விட்டுக்கொடுத்து பேசினார்.அவற்றை உணர்ந்த சுந்தரசுவாமிகள் எனக்காக விட்டுக் கொடுத்து பேசுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்றார்..

பிறகு சுந்தரசுவாமிகள் உங்கள் கரங்களால் எனக்கு விபூதி வைத்து விடுங்கள் என்று கேட்க வள்ளலார் மறுத்துவிட்டார்.சுந்தரசுவாமிகளே வள்ளலார் நெற்றில் விபூதி வைத்து.அதை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டார்.

இருவரும் விடைப்பெற்று பிரிகிறார்கள்.

சுந்தரசுவாமிகளின் சீடர்கள் வள்ளலார் முன் நேரே உட்காராமல் தள்ளிப்போட்டு உட்கார்ந்தீர்கள் என்ன காரணம் என்று கேட்க...அதற்கு சுவாமிகள் அவர் முகத்தை நேரே பார்த்து பேசமுடியாது. அவ்வளவு அருள் ஆற்றல் உள்ளவர். மற்றவர்கள் உள்ளங்களை எண்ணங்களை கிரகித்து கொள்ளும்  கூறிய கதிர் நலம் உள்ள கண்களை உடையவர். அதனால் தள்ளி உட்கார்ந்தேன் என்றார்.

கருணையே வடிவான வள்ளலார் விடைப்பெற்று திரும்பும் போது கண்களில் நீர் சுரக்க வருத்தமுடன் சென்றார்.அந்த காரணத்தை அன்பர்கள் கேட்டார்கள்..
அதற்கு வள்ளலார் சொன்ன பதில்.

சுந்தரசுவாமிகள் சிறந்த அறிவு மேதை எல்லா மொழிகளையும் அறிந்தவர்.வேதங்களை நிறைய கற்றவர் சித்துக்கள் கைவரப்பெற்றவர்.இறைவன் அருள் பெற்றவர்..இருந்தாலும் அவருக்கும் மரணம் வந்துவிடுமே என்று அவரை நினைந்து கண்களில் நீர் பெருகின என்று பதில் உரைத்தார்..

அதேபோல் அவர் 1878 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்21 ஆம் தேதி முக்தி அடைந்தார்.அதாவது மரணம் அடைந்தார்.என்பது வரலாற்று உண்மை.

வள்ளலாரை சந்தித்த பிறகு...தன் தலையில் விட்டிருந்த கட்டுக்குடுமியும்.தான் அணிந்திருந்த பூணூலும் எடுத்துவிட்டார் என்பதும் வரலாற்று உண்மை.

அதேபோல் வள்ளலாரின் சீடரான ஆடூர் சபாபதி குருக்கள் சமய ஆச்சாரங்களான பூணூல் எல்லாம் கழட்டிவிட்டுத்தான் வள்ளலாரின் சீடரானார்.

எனவே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை மரணத்தை வெல்ல வேண்டும் என்பதேயாகும்...

வள்ளலார் பாடல் !

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன் அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகில்

கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண்கின்றீர்
கரணம் எலாம் கலங்கவரும் மரணமும் சம்மதமோ

சற்றும் இதை சம்மதியாது என் மனந்தான் உமது
தன் மனம்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்

இற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடு சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே !

என்னும் பாடலை ஞானசரியை என்னும் தலைப்பில் பதிவு செய்கிறார்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு