புதன், 30 மார்ச், 2016

வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்து எறிந்தார் !

வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்து எறிந்தார் !


இந்த உலகத்தில் சாதி,சமயம்,மதம் என்ற பொய்யான கற்பனை கலைகளை கதைகளாகக் கற்பித்து,மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி
விட்டார்கள்

மக்களின் குழப்பம் தீராமல் புற்று நோய்போல் தொற்றிக் கொண்டு  உள்ளது .

பொய்யான கற்பனைக் கடவுள்களை அறிமுகப்படுத்தி யாராலும் திறக்கமுடியாத பூட்டை போட்டு மறைத்து வைத்து விட்டார்கள்..

அந்த வல்லவன் பூட்டிய பூட்டை திறக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தார்கள் இருக்கின்றார்கள் .

அந்த வள்ளவன்  தான் ''வேத வியாசர்'' என்பவர்... அவர்தான் பொய்  சொன்னாலும் பொருத்தமாக சொல்லியவர் .

வள்ளல்பெருமான் வந்து கருணை என்னும் கருவியைக் கொண்டு அந்த பூட்டை உடைத்து எரிந்து விட்டு,அன்பு ,தயவு,கருணை என்னும் பூட்டை போட்டுள்ளார் .

ஒழுக்கம், அன்பு ,தயவு,கருணைக் கொண்டு,அருளைப் பெற்று யார் வேண்டுமானாலும் அந்த பூட்டை திறந்து உள்ளே போகலாம் என்று உலக மக்களுக்கு அனுமதி வழங்கி உள்ளார் .

இப்போது உலக மக்களுக்கு சர்வ சுதந்திரம் கிடைத்து உள்ளது ,அவைதான் ஆன்ம சுதந்திரமாகும்.

இந்த மாயை உலகில் கொடுத்துள்ள தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் ,போன்ற மூவகை சுதந்திரங்களையும், தூக்கி எரிந்து விட்டு.கருணை நன் முயற்சியால் ஆன்ம சுதந்திரம் பெற்று .
மெய்ப் பொருளான இறைவனை மறைத்துள்ள, அருள் கோட்டையின் திரைகளை  கிழித்து  எரிந்து விட்டு ,மேல் வீட்டின் கதவைத் திறந்துக் கொண்டு ,நமது தந்தை அருட்பெருஞ்ஜோதியின் இல்லத்திற்கு செல்வோம் .வாருங்கள்.

இனிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல எந்த தடைகளும் இல்லை,தடை இல்லா மார்க்கம்தான் வள்ளலார் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''என்னும் உலகப் பொது மார்க்கமாகும்

கருணை ஒன்றினால் மட்டுமே கதவை திறந்து உள்ளே போக முடியும் என்ற உண்மையை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

தடையற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை கடைபிடித்து செல்வோம் வெல்வோம் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

காட்டை எலாம் கடந்து விட்டேன் நாட்டை அடைந்து உனது
கடிநகர்ப் பொன் மதிற்காட்சி கண்குளிர கண்டேன்
கோட்டை எலாம் கொடிநாட்டி கோலம் இடப் பார்த்தேன்
கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிந்தேன்
சேட்டை அற்றுக் கருவி எலாம் என்வசம் நின்றிடவே
சித்தி எலாம் பெற்றேன் நான் திருச் சிற்றம்பலம் மேல்
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே
பலன் தரும் என் உளந்தனிலே கலந்து நிறைந்து அருளே !

அடுத்த பாடல் ;--

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
''கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்''
அடர் கடந்த திரு அமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்ககினவே
இத்தனையும் பொது நடஞ் செய் இறைவன் அருட் செயலே !

மேலே கண்ட பாடல் வாயிலாக திறக்க முடியாது இருந்த அருள் கதவைத் திறந்து விட்டேன் இனிமேல் உலகில் உள்ள எவரும் வருத்தம் அடைய வேண்டாம்.

இனி மேல் அருள் பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை. உண்மையான இறைவன் யார் என்பதை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் நமது வள்ளலார் .

இனிமேல் தத்துவக் கடவுள்களை நம்பி வழிப்பட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம்.

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தான் ''அருட்பெரும்ஜோதி ஆண்ட்வராகும்'' அவரை உண்மை அன்புடன் தொடர்பு கொள்ளுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்...
9865939896.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

1 கருத்துகள்:

28 ஜூலை, 2020 அன்று AM 2:47 க்கு, Blogger கணேசன் இளங்கோவன் கூறியது…

உலகம் உய்ய பெருமான் கொடுத்த வழியே நிதர்சனமான வழி. தங்கள் முயற்சி என்னைப்போன்ற மதில் மேல் பூனைகளுக்கு தெளிவை உண்டாக்கும் என்பதைல் ஐயம் இல்லை ஐயா! நன்றிகள் பல!!

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு