புதன், 30 மார்ச், 2016

கல்வி இரண்டு வகை !

கல்வி இரண்டு வகை !ஒன்று சாகும் கல்வி
ஒன்று சாகாக் கல்வி

உலகில் தோன்றிய ஆன்மீக அருளாளர்கள்,போதகர்கள் ,சித்தர்கள்,, மத வாதிகள், சமய வாதிகள்,அருவியல் வல்லுனர்கள் மற்றும் அனைவரும் சாகும் கல்வியைக் கற்றுத் தந்துள்ளார்கள் .

சாகும் கல்வி என்பது மரணம் அடைந்து மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பது.

சாகாக் கல்வி என்பது பிறப்பு இறப்பு இல்லாமல் அருள் பெற்று வாழ்வதாகும்.

வள்ளல்பெருமான் மட்டுமே சாகாக் கல்வியைத் கற்றுத் தந்துள்ளார்கள் !

உலகியல் வாழ்க்கை வாழ்வதற்கு சாகும் சல்வித் தேவைப் படுகின்றது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சென்று அருள் வாழ்க்கை வாழ்வதற்கு சாகாக் கல்வித் தேவைப் படுகின்றது. ,

உலக வாழ்க்கை வாழ்வதற்கு அழிந்து போகும் பொருள் தேவைப்படுகின்றது.

பேரின்ப வாழ்க்கை வாழ்வதற்கு அழியாத அருள் தேவைப்படுகின்றது.

இரண்டும் இவ்வுலகிலே உள்ளது.

பொருள் தேவையா ? அருள் தேவையா ? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

பொருள் மாயை இடம் பெறுவதாகும்.

அருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பெறுவதாகும்.

இரண்டும் பெறுவதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் இறைவன் கொடுத்துள்ளார்..

அழியும் வாழ்க்கையா ? அழியா வாழ்க்கையா ? உங்கள் வாழ்க்கை உங்கள் அறிவில் உள்ளது .,உங்கள் விருப்பம்..எதுவோ அதை நீங்களே தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு நீங்கள் தான் எஜமான் ...நீங்கள் தான் நீதிபதி....உங்களுக்கு நீங்கள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்....உங்கள் தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்;--

சாகாத கல்வித் தரம் அறிதல் வேண்டும் என்றும்
வேகாத கால் உணர்தல் வேண்டும்.உடன்--சாகாத்
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை
நிலை அடைதல் வேண்டும் நிலத்து....

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல் அருளால்
நானே அருட்சத்தி அடைந்தேன் --நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு...

உண்மை வழி தெரியாமல் வாழ்ந்து அழிந்து போன, போகின்ற  உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், சித்தர்களுக்கும் யோகிகளுக்கும், ஞானிகளுக்கும்,ஆன்மீக போதகர்களுக்கும்,

மேலும் மதவாதிகளுக்கும்,சமயவாதிகளுக்கும் உண்மையான வழியைக் காட்டி உள்ளார் நமது அருட்தந்தை அருட்பிரகாச வள்ளலார்..

உண்மைநெறி;--

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்

சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு

வருநெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து

வல்லப சத்திகள் எல்லாம் வ்சங்கிய ஓர் வள்ளல்

பெரு நெறியில் சித்தாடத் திருவுளம் கொண்டு அருளிப்

பெருங் கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்

கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே....

உண்மையான  நெறியும் உண்மையான கடவுளையும் காட்டி உள்ளார்...அருள் பெரும் வழியும் காட்டி உள்ளார்.

முயற்சி செய்வது உங்கள் விருப்பம்....

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு