ஆணும அல்ல ,பெண்ணும் அல்ல ,!அலியும் அல்ல!
ஆணும அல்ல ,பெண்ணும் அல்ல ,!அலியும் அல்ல!
ஆண்கள் பெண்கள் அலிகள், என்ற பேதம் என்பது இல்லை எல்லாம் அணுக்களால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களாகும் புன்னால் ஆன உடம்பாகும் ஒரு உயிரை உண்டாக்க இருவரும் தேவைப்படுகிறது உருவங்களைப் பார்த்து உணர்ச்சிக் கொள்வது அறியாமையாகும் ,நம் உணர்வுகளை நம்மைப் படைத்த இறைவனிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் அதுவே இந்த மனித பிறவியில் நாம் செய்யும் கடமையாகும் ,நாம் அனைவரும் பெண்கள்தான்,இறைவன் மட்டும்தான் ஆணாகும் நாம் இறைவனை காதலிக்க வேண்டும் இறைவனிடம் சேரும்போது இறைவன் கொடுப்பது அருள் என்னும் திரவமாகும் அதை அனுபவித்தால் அதில் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை,அதுவே பேரின்பமாகும், அவை என்றும் அழியாதது,மனித தேகம் படைத்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய மெய் இன்பம் அதுவேயாகும்,மற்றவை யாவும் பொய் இன்பமாகும் ,அதனால்தான் அறிது,அறிது மானிடராய் பிறப்பது அறிது என்றார்கள் அருளாளர்கள் ,நாம் அழிவதற்கு இந்த பிறவி கிடைக்கவில்லை ,என்றும் அழியாமல் வாழ்வதற்கு கிடைத்தது இந்த மானிடப் பிறவியாகும்,--வள்ளலார் இறைவனைக் காதலித்து அருள் அமுதம் உண்டு மரணத்தை வேன்றவராகும் ,அவர் காட்டிய பாதையில் நாமும் செல்வோம் ,அன்புடன் -உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு