வியாழன், 1 செப்டம்பர், 2011

கடவுள் ஒருவரே !


கடவுள் ஒருவரே !


சிவம் என்பதும் அருட்பெரும்ஜோதி எனபதும் ஒன்றுதான் ,இந்த உலகத்தை இயக்கிக் கொண்டு இருப்பது அந்த மாபெரும் அருள் சோதிதான்என்பதை மக்கள் உணர்ந்தால்உண்மை தெரியும். தத்துவங்களை கடவுளாக பாவிக்க மாட்டார்கள் .அந்த ஜோதியான ஒளிக்கு உருவம் இல்லை,பிறப்பு இறப்பு இல்லை,அதை யாரும் உருவாக்க முடியாது.அவை எல்லா அணுக்களிலும் காரிய காரணமாக செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றன.காரணமாக அணுக்களிலும், .காரியமாக உயிர்களிலும்,செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றன.
கடவுள் என்பதும் ,சிவம் என்பதும்,அல்லா என்பதும் ஏசுகிருஸ்துஎன்பதும் ,அருட்பெரும்ஜோதியின் மறு பெயர்களாகும் .அனைத்துக்கும் பொதுவான ஜோதியை பலபேர் பலவாறாக பெயர் வைத்துள்ளார்கள் .
அந்த ஜோதியான கடவுள் வேறு எங்கும் இல்லை,எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார்.அதனால்தான் எந்த உயிர்களையும் அழிக்க நமக்கு உறிமை இல்லை ,
மனிதனுக்குகாக அனைத்தும் படைக்கப் பட்டது என்பது அறியாமையாகும் .ஒரு உயிரை அழித்துதான் மனிதன் உண்பானேயானால்,மனிதப்பிறவி உயர்ந்தது என்று எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் .

மனிதனுக்கு மனமும் அறிவும் ,சிந்திக்கும்திறனும்,செயல்படும் திறனும் பேசும்திறனும், இறைவனால் எதற்காக கொடுத்தது என்பதை உணர்ந்தால் எந்த உயிர்களுக்கும் துன்பம் தரமாட்டார்கள், மற்ற உயிர்களுக்கு துன்பம் தருவதால் அந்ததுன்பம் வேறு வகையில் நமக்கு திரும்பி வருகிறது ,ஆதலால் மனிதனாக பிறந்தவர்கள் கடவுளின் கட்டளைபடி அறிவு தெளிவுடன் வாழவேண்டும் .

கற்பனைக் கதைகளை நம்பி ஏமாற்றம் அடையக் கூடாது.மூட நம்பிக்கையை விட்டு அறிவு பூர்வமாக சிந்தித்து வாழவேண்டும் கடவுள் ஒருவரே அவர் அருட்பெரும்ஜோதியாக உள்ளார் என்பதை அறிந்து
அவர் எல்லா உயிர்களிலும் உள்ளார்,என்பதை உணர்ந்து எந்த உயிர்களுக்கும் துன்பம் தராமல் வாழ்வதே மனித வாழ்க்கையாகும் .

அன்புடன் .கதிர்வேலு.,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு