புதன், 16 அக்டோபர், 2024

ஒன்று முதல் ஆறு திருமுறை விளக்கம்!

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் 

ஒருவேலை வடலூரில் திருவருட்பா பாடசாலை அமையப் பெற்றால் 

முதல் 5 திருமுறைகளை பாடம் சொல்லித் தருவதா வேண்டாமா என்ற ஒரு மிகப் பெரிய சர்ச்சையுண்டாகும் என அறிய முடிகின்றது. 

இப்போது விஷயத்திற்கு வருவோம்.
ஏன் 
சுத்த சன்மார்க்கத்தில் 
இரு பெரும் பிரிவினராக பிளவுபட்டு நிற்கின்றனர் .என ஆராய்ந்தோமேயானால் .

காரணம் .ஒருவகையில் வள்ளல் பெருமான்தான் என்றாலும் நம்மவர்கள் புரிதலில் கருத்து வேறுபாடே முக்கிய காரணமாகும்.
ஆம் 

 *1-5 திருமுறை மறுத்து 6-ம் திருமுறை மட்டும் ஏற்பவர்கள்* 
திருவருட்பா -6 திருமுறைகளாக தொகுக்கப்பட்டு 
முதல் 5திருமுறைகள் வரை சமயம் சார்ந்தது எனவும் 
6-மதிருமுறை சமயம் கடந்தது எனவும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது .
ஆம் பெருமானாரும் அவ்வாறே பேருபதேசத்தில் கூறுவதாவது :- அப்போது சைவ சமயத்தில் நான் வைத்திருந்த பற்று இவ்வளவு என்று அளவிட முடியாது அதற்கு எனது தோத்திரப்பாடல்களே சாட்சி அதனை சபைக்கு கொண்டு வந்து மற்ற அடியார்களின் பாடல்களையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நான் எவ்வளவு தீவிரமாக சைவ சமய பற்றுடையவனாக இருந்துள்ளேன் என்பது தெரிய வரும் .

எனவும் ஏன் எனக்கு அப்போது அவ்வளவு அழுத்தமா பற்றிருந்ததென்றால் அப்போது எனக்கு சிறிது அறிவு விளஙகாத காலம் எனவும் குறிப்பிடுகின்றார் .
இப்போது எனது அறிவு அண்டாண்டங்களுக்கும் மேல் செல்கிறது இதற்கு அந்த சமய மதப் பற்று காரணமில்லை தயவுதான் என்னை தூக்கிவிட்டது .

மேற்கண்ட இந்த இரண்டு ஆதாரங்களே நம்மவர்கள் 1-5 திருமறைகளை நிராகரிப்பதற்குக் காரணமாகும் .

 *1-5 திருமுறைகளையும் ஏற்று 6-ம் திருமுறைகளையும் ஏற்பவர்கள்* 
இவர்களின் புரிதல் 
பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அத்துணைப் பாக்களும் அருளால் பாடப் பெற்றவை இதில் 5,6 என வேறுபடுத்திப்பார்க்கக் கூடாது .
நாம் படியேறி கடைத்தேற வேண்டிய படிநிலைதான் இந் 1-5,6 ஆகும் என கூறுகின்றனர் .
மேலும் எந்ப் பேருபதேசத்தில் எல்லா மந்திரங்களையும் சமய மதங்களையும் விட்டுவிட்டு 
மகாமந்தித்தை கொடுத்து தயவினை பின்பற்றக் கூறியுள்ளாரோ 

அதே பேருபதேசத்தில் பாருங்கள் மகாமந்திரத்தின உண்மைப் பொருளாகிய அன்பு தயவு கருணை இவற்றினை எவ்வாறு சாதனமாக பயிலுவது என்பதைக் கூறாமல் அதனை மத சன்மார்க்கியான தாயுமாண சுவாமிகளின் சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் என துவங்கி  கருணாகரக்கடவுள் என்று முடியும பாடலின் பிரமாணத்தால் கண்டு உணர்க என கூறியுள்ளார் .
இதுதான் கேள்வி சமய மதத்தை கைவிட்டவர்தானே ஏன் மத சன்மார்க்கப்பாடலில் பிரமாணம் காட்ட வேண்டும்.

மாகாமந்திரம் உண்மைப் பொருள் வைக்கப்பட்ட பூட்டு என்றால் அதன் சாவி தாயுமாணவரின் கருணாகரக்கடவுள் பாடலில் உள்ளது என கூறியதன் காரணம் .சமய மதங்களின் உண்மைப் பொருளை ஏற்கிறார் என்றுதானே அர்த்தம் 
இது இவர்களின் வாதம் .



இதில் வேடிக்கை என்னவெனில் 

இருபிரிவினர்க்கும் 
வள்லார்தான் குரு 
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான்கடவுள் 
திருவருட்பாதான் வழிபடுநூல்
மகாமந்திரம் தான் தாராக மந்திரம் 
ஜீவகாருணியம்தான் கடவுள் வழிபாடு 
இப்படியிருக்க எப்படி இந்த பிளவு வேற்றுமை வந்தது என்று நாம் உற்று நோக்க வேண்டும .

முதலில் நம் பெருமானார் ஆண்டவரால் திட்டமிடப்பட்டே வருவிக்கவுற்ற ஓர் ஆன்மா 

எதற்கக வருவிக்க உற்றார் 
ஆண்டவர் வள்ளலாருக்கு இட்ட கட்டளை என்ன ❓
உலகில் மனித குலம் 
சாதி
சமயம்
மதம்
இனம்
மொழி
தேசம்
நிறம்
பண்பாடு
கலாச்சாரம்
அந்தம்
சாதனம் என பல்வேறு கருத்துடையவர்களாக அதனதன் ஆசாரக் கட்டுப்பாட்டினால் பிரிவினை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் போரிட்டு வீணாக மாண்டு போகின்றனர்.
எனவே மகனே நீ இந்த பூலோகத்திற்குச் சென்று அவர்களையெல்லாம் எல்லா சமய மதங்களையும் முதலில் சமரசம் செய்வாயாக அதாவது ஓர் புள்ளியில் இணைப்பாயாக 
இணைத்து உலகில் மனித குலம் போரிட்டு வீணே மாண்டுபோவதைத் தடுப்பாயாக என்று கூறி கட்டளையி்ட்டு திட்டமிட்டே ஆண்டவர் வள்ளலாரஎனுமஆன்மாவை இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்கின்றார்.
 *இதுதான் முதல் கட்டளை* 

அடுத்து இரண்டாவது கட்டளையாதெனில் 
இதுவரை தோன்றிய சமய மத மார்க்கங்களை தோற்றுவித்த அருளாளர்களும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயமதங்களை பின்பற்றுபவர்களுக்கும் வழிகாட்டும்படிாக மரணமில்ராப் பெருவாழ்வை அடையும் பொருட்டு அனைவருக்கும் மெய்ப்பொருளினை நன்கு உணர்த்தி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை அடையச் செய்வாயாக என இரண்டாவது கட்டளையை பிறப்பிக்கின்றார் ஆண்டவர் .

ஆக முதல் கட்டளை- *சமரசம்* 
2-ம் கட்டளை- *சுத்தம்*

இதி் ல் சமரசம் வந்தால் உலகில் மனித குலம் போர் பகையின்றி ஒற்றுமையாய் 
புலைகொலை தவிர்த்த புனிதர்களாய்  வாழ்வர் .

சுத்தம் வந்தால் மனித தேகம் பெற்ற ஆன்மாககள் மரணமில்லாப் பெருவாழ்வு அடைவர்.

இவ்வுலகில் இப்போது தேவை சமரச சன்மார்க்கமே 
அதாவது சமய சன்மார்க்கம் 
மத சன்மார்க்கம் இவையெல்லாம் சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானதல்ல நட்புடையவையே 
அந்நியமல்ல அநந்நியமே என்கிறார் நம் பெருமானார்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் 
விஷயத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா 🤣
வந்துவிடுவோம்.
1-5 ஏற்பதா மறுப்பதா  என்பதுதானே .

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்வோம் 
வள்ளலார் குரு 
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கடவுள்
திருவருட்ப வழிபடு நூல் என்று முடிவாகிவிட்டால் 

நமக்கு சாதனம் 2 தான் 
1.ஜீவகாருணியம்
2.சத்விசாரம்

அவ்வளவுதான் இதில 
ஜீவர்களுக்கு 
பசி
 பிணி
கொலை
தாகம்
இச்சை
எளிமை
பயம் என்ற அவஸ்தைகளையெல்லாமநீக்கி ஜீவர்களின் முகத்தில் தத்துவமலர்ச்சியை கடவுள் வழிபாடாக செய்வதே ஜீவகாருணியம்.

அடுத்து சத்விசாரம்
இது 
உலகம்
உடல்
உயிர் 
இறைவன் முதலியவற்றின் தோற்றமென்ன விரிவென்ற ஒடுக்கமென்ன 
மரணம் ஏன் வருகிறது என்றெல்லாம் ஊன்றி விசாரித்து வருகையில் திருவருள் காரியப்பட்டு முதலில் கண்டமாக (பகுதியாக)பின்பு  பிரம்ம இரகசியம் 
சிவ இரகசியம் என அகண்டமாக (முழுவதையும்) தெரிவிக்கும் .

இதுதான் சாதனம்.

இதில் இந்த இரண்டு சாதனத்தை மட்டுமே சுத்த சன்மார்க்க சாதனமாக ஏற்றுக்கொண்டு பயிலுபவர்களுக்க 1-5 படிக்கலாமா வேண்டாமா என்ற வினாவே எழாது ஏனெனில் இவர்கள் எது படித்தாலும் அவற்றினை அறிவுக்கண் கொண்டு  விசாரமாகத்தான் பார்ப்பார்களேயன்றி அச்சமய மத ஆசாரங்களை சாதனமாக அனுஷ்டிக்கமாட்டார்கள் .இவர்கள் 1-6 வரை படித்தாலும சுத்தசன்மார்க்கத் தெளிவுடனே பயணிப்பார்கள் .

ஆனால் மேற்கண்ட சுத்த சன்மார்க்க சாதனமாகிய 1.ஜீவகாருணியம் 2.சத்விசாரம் இவ்விரு சாதனகளன்றி வேறு வேறு சமய மத ஆசார அனுஷ்டானங்களை சாதனமாக கடைபிடிப்பவராயின் இவர்கள் 1-5 திருமுறை படித்தால் இங்குதான் சிக்கல் உண்டாகின்றது இவர்கள ஆண்டவரிடத்தில் இலட்சியம் போய் 
அற்ப சித்திகளுக்குண்டான சாதனங்களை மேறகொள்ள முற்படுகின்றனர் .

உதாரணத்திற்க 
சைவ சமயச் சின்னங்கள் 
விபூதி
ருத்ராட்சம்
காவி
லிங்க வழிபாடு இன்னும் பற்றபல இவற்றை சாதனமாக பின்பற்றினால் சுத்த சன்மர்க்க லட்சியம் தடைபடும் .

இதனை அதன் தத்துவ தாத்பர்யம் என்ன என்று அறிவால் ஊடுறுவி பார்த்து அதனதன் உண்மையை அவ்வச் சமய மத ஆசார அனுட்டானங்களில் சத்திய உணர்ச்சி கொள்ளாது  சுத்த சன்மார்க்க 
ஞானசாதனமாகிய 
கேட்டல்
சிந்தித்தல்
தெளிதல்
நிஷ்டை கூடல் என்று படியேறினர்களேயானால் அது தானாக சுத்த சன்மார்க்கமெனும் இலக்கை அடையச் செய்யும்.

           அடியேனுக்கு திருவருள் உணர்த்தியவாறு குறிப்பிட்டுள்ளேன் .
            -சாதுஹரி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு