ஞாயிறு, 11 ஜூலை, 2021

அருளாளர்கள் மகாசபை அவசரக்கூட்டம் !

 *அருளாளர்கள் மகாசபை அவசரக் கூட்டம்* ! 


*30-01-1874 ஆம் நாள் அன்று அருட்பெருவெளியில் நடக்க இருக்கும் அருளாளர்கள் மகாசபை அவசரக் கூட்டத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அண்டங்கள் உலகங்கள் எங்கும் உள்ள அருளாளர்களுக்கு  அழைப்பு விடுகிறார்.*


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைப்பை ஏற்று அனைத்து அருளாளர்களும் *அருட்பெருவெளிக்குள் வந்து அவரவர்கள் தகுதிக்கு தகுந்தவாறு அமைக்கப்பட்டு இருக்கும் மூன்று அடுக்கு வரிசையின் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்*.


*(மூன்று அடுக்கு என்பது *ஞானதேகம்*.

*பிரணவதேகம்*.

*சுத்ததேகம் கொண்டவர்கள் அமரும் வட்டம் கொண்ட வரிசையாகும்)*


அண்டகோடிகள் எல்லாம் அருள்ஆட்சி செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *ஞானசிங்காதன பீடம் என்னும் சிம்மாதனத்தின் மத்தியில் வந்து அமர்ந்து கொண்டார்*.


அருளாளர்கள் யாவரும் என்ன நடக்கப்போகிறது என்ற உண்மைத்தெரியாமல் அவரவர்களும் பேசிக்கொண்டும். விழித்துக்கொண்டும் உள்ளார்கள்.


*திரு அருட்பிரகாச வள்ளலாரை அழைக்கிறார்* 


*அருளாளர்கள் மத்தியில் *திடீர்என* *வள்ளலாரை அழைத்து* *ஆண்டவர் அறிமுகம் செய்து வைக்கிறார்*.

எல்லோரும் அதிசயமாக ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.


*வள்ளலார் பாடல்!*


பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொது நடங்கண்டு உளங்களிக்கும் போது மணவாளர்


மெய்பிடித்தாய் வாழிய நீ சமரசசன் மார்க்கம்

விளங்க உல கத்திடையே விளங்குக என்று எனது

கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்

களித்திடுக இனியுனை நாம் கைவிடோம் என்றும்


*மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண*

*மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.!* 


மேலே கண்ட பாடலின் விளக்கம் யாதெனில்?   கடவுள் யார் ?  என்ற உண்மையை மக்களுக்குச் சொல்லாமல் உண்மைக்கு புறம்பான பொய்யான கற்பனைக் கதைகளை உருவாக்கி அதில் வரும்  தத்துவக் கதாபாத்திரங்களை கடவுளாக படைத்து. உண்மையாக இருப்பது போலவே சொல்லி.இடம் வாகனம். ஆயுதம். வடிவம். ரூபம் முதலியவைகளை ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து மக்களை நம்ப வைத்து பொய்சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்.


ஆதலால் *ஒளிவு மறைவு இல்லாமல் மக்களுக்கு உண்மையை ஆழமாக எடுத்து உரைத்து இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை மக்களுக்கு காட்டி அவற்றைத் தெரிந்துகொள்ள   ஜீவகாருணய ஒழுக்கத்தை தெரியப்படுத்தி.தானும் அதேபோல் வாழ்ந்து வழிகாட்டி. மக்களை வாழவைத்துக் கொண்டு இருக்கும்  வள்ளலாருக்கு*.


*உங்கள் முன்பு* 

*மெய்பிடித்தாய் வாழிய நீ என்று வாழ்த்துகிறேன்* 


 சமரச சுத்த சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளக்குக என்று வள்ளலாரின் கையைப்பிடித்து களித்திடுக என்றும் *அருள்ஆட்சி அதிகாரங்களை வழங்கி மணிமுடியும் சூட்டி கையிற் பொற்கங்கனமும் கட்டி* *அருள் மாலை அணிவித்து*. பொய்பிடித்த விழி உலகர் எல்லோரும் காண ஆட்சி பீடத்தில் வள்ளலாரை அமரவைத்து அழகுபார்க்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.


*தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே*!


*தன் கையில் பிடித்த தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என்தனித் தந்தையே!*


மீண்டும் பொய் பிடித்த அருளாளர்கள் மத்தியில் ஆண்டவர் சொல்கிறார். நீங்கள் பொய்மட்டும் சொல்லவில்லை. இந்த  

*ஞானசிங்காதன

பீடத்தில்*  அமரும் தகுதியும் பொருத்தமும் உங்களில் ஒருவருக்கும் இல்லை என்கிறார்*.


*வள்ளலார் பாடல்!*


பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொதுநடங் 

கண்டு வந்துநிற்கும் போது தனித் தலைவர்


திருத்தமுற அருகணைந்து *கைபிடித்தார்* நானும்

தெய்வ மல ரடிபிடித்துக் கொண்டேன் 

சிக்கெனவே


வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் *அழியா*

*வாழ்வுவந்த துன்தனக்கே* *ஏழுலகும் மதிக்கக்*

*கருத்தலர்ந்து* *வாழியஎன் றாழிஅளித்து* *எனது*

*கையினில்பொற் கங்கணமும்* *கட்டினர்காண் தோழி.!*


என்னும் பாடல் வாயிலாக அருளாளர்கள் முன்னாடி மேலும் வள்ளலாரை புகழ்ந்து பாராட்டி வாழ்த்துகிறார்.


அருளாளர்கள் யார் யார் என பட்டியல் இடுகிறார் வள்ளலார்.


*பாடல்*


உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி


பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்


திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ


வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.!


*அனுபவமாலை* என்னும் தலைப்பில் வள்ளலார் தம் அனுபவத்தை 100 பாடல்களில் தெரிவிக்கின்றார். 


நாம் போற்றும் வணங்கும் வழிபடும் அருளாளர்கள் மத்தியில் தான் வள்ளலாருக்கு அருள்ஆட்சி வழங்கி உள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


*வள்ளலார்பாடல்!*

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு

மரணம் 

தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு.!  


*உலகம் எங்கும் இனி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வழிபடவேண்டும் என்பதே உண்மையான கடவுள் வழிபாடாகும்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு