வெள்ளி, 19 ஜூன், 2020

மரணபயம் தவிர்த்த வாழ்க்கை !

மரணபயம் தவிர்த்த வாழ்க்கை.!

வள்ளலார் பாடல் !

அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே

கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே

எமன் எனும் அவன் இனி இலை இலை மகனே
எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே

சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

*உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் மரண பயத்துடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன*. மரணம் என்பது இயற்கையானது.ஆறிலும்  சாவு.நூறிலும் சாவு என்பது. என்றும் உள்ள வழக்கச் சொல்லாகும்.

*மரணம் வரும் என்பது தெரிந்தும்.மரண பயத்துடன் மனிதன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளான்*.

மரணத்தில் இரண்டு வகை உள்ளன. *இயற்கை மரணம்.செயற்கை மரணம்*.வயது முதிர்ந்து நோய்வாய்பட்டு உயிர் பிரிவதை இயற்கை மரணம் என்றும்.தற்கொலை செய்து கொள்வது. பலவகையான ஆபத்துகளால் அகால மரணம் வருவதை செயற்கை மரணம் என்றும் சொல்லப்படுகிறது.

மரணம் என்பது பலவழிகளில் வருகிறது.ஐந்து பூதங்களாலும்..கிரகங்களாலும்..கொலைக் கருவிகளாலும். பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலும்.கொரோனோ
வைரஸ் போன்ற அணுக்களாலும்.அணு ஆயுதங்களாலும்.உடம்பைவிட்டு உயிர்கள் பிரிந்து விடுகின்றன.

 *உடம்பை விட்டு உயிர் பிரிவதை மரணம் என்கிறோம்*. *மரணம் வருவதை எமன் வந்து உயிரைப் பறித்துவிட்டான்* என்பது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள செய்திகளாகும்*.

*எமன் என்பதை வள்ளலார் மறுக்கவில்லை.*

மரணம் தானாக வருவதில்லை.அஜாக்கிரதையாலும்.அறியாமையாலும் *செயற்கையால் மரணம் வருகிறது* என்கிறார் வள்ளலார்.

மனிதவாழ்க்கைக்கு வேண்டிய எல்லா அறிவியல் ஆராய்ச்சி மூலமாகவும்.செயற்கை வசதிகளையும் கொண்டு கண்டுபிடித்த உயர்ந்த  அறிவுள்ள மனிதன்.உடம்பைவிட்டு உயிர் பிரியாமல் இருக்கும் *அருள் அறிவியல்* உண்மையைக் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள்.

மரணத்தை வெல்லும் வழியை கண்டுபிடிக்க ஆன்மீக அருளார்களும்  அறிவியல் மேதைகளும் மற்றும் விஞ்ஞான வல்லுனர்களும் முயற்சி செய்து மரணத்தை வெல்லும் *சூழ்ச்சி* அறியாமல்.தோல்வியைக் கண்டார்கள்.

வள்ளலார் வந்துதான் மரணத்தை வெல்லும் வழியையும் அதன் சூழ்ச்சியும் கண்டுபிடித்தார்.எமன் என்னும் கூற்றுவன் தன்னை அனுகாமல் பயந்து ஓடும் வழியைக் கண்டுபிடித்து வாழ்ந்து காட்டியுள்ளார்.

அவற்றிற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும்.முத்தேக சித்தி என்றும். பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும்  பெயர் வைத்துள்ளார்.

உயர்ந்த அறிவுள்ள மனித்தேகம் கொடுக்கப்பட்டதே மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வதற்கே என்பதை அழுத்தமாக ஆணித்தரமாக அறிந்து உணர்ந்து தெரிந்து வாழ்ந்து வழிக்காட்டி உள்ளார் வள்ளலார்.

*மரணத்தை வெல்லுவது என்பது ஏதோ மாயாஜால வேலை அல்ல*.

அணுக்களால் உருவான பின்னப்பட்ட ஊன  உடம்பை அருள் ஒளி உடம்பாக மாற்றுவதே மரணத்தை வெல்லும் வழியாகும்.

அருள் வழங்கும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.அவரைத் தொடர்பு கொள்ள நான்கு ஒழுக்கங்களை மனிதன் கடைப்பிடித்து வாழவேண்டும்.

*அவை இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்பவைகளாகும்*.

நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடிப்பவர்களை நோக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரிடையாக வந்து அருள் வழங்குவார்.

நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடித்து அருளைப் பூரணமாகப்பெற்று *மரணத்தை வென்ற ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே* !

வள்ளலார் பாடல் !

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி அருட்

சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை

ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.!

என்னும் பாடலிலே.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இரவு 12 மணிக்கு நேரிலே வந்து வள்ளல்பெருமானை எழுப்பு உள்ளத்திலே நுழைந்து கலந்து அருளை வழங்கி்.ஊன்  உடம்பை ஒளிஉடம்பாக மாற்றி எனக்கு என்றும் அழியாத *பேரின்ப நிதியாகிய அருளை* வழங்கியதை சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் ஆனந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளேன்.

எனக்கு அளித்தது மட்டும் போதாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என. *ஆன்மநேய ஒருமைப்பாட்டு* உரிமையுடன். பொது நோக்கத்தோடு விண்ணப்பம் செய்கிறார்.

மரணம் பயம் வராமல் இருக்க எமன்எனும் கூற்றுவனை நெருங்கவிடாமல் வாழ்வதே மனித வாழ்க்கையாகும்.

மரணபயம் வராமல் வாழவேண்டும்!

வள்ளலார் பாடல் !

கரணம்மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்

மரணபயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே

திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்
சித்திபுரம் எனஓங்கும் உத்திர சிற் சபையில்

சரணம் எனக் களித்து எனையும் தானாக்க எனது
தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.!

கடல் உலகம் வானம் போன்றவற்றை ஆளுகின்ற ஆதிபதிகளாக இருந்தாலும் மரண பயத்தோடு வாழ்வதால் எந்த பயனும் இல்லை.

பட்டம் பதவி புகழ் அதிகாரம் எல்லாம் புறம் புறத்தில் உள்ள இந்திரியங்கள் கரணங்கள் மட்டுமே மகிழ்ச்சி அடைகின்றது. அகத்தில் உள்ள ஆன்மாவோ.அகப்புறத்தில் உள்ள ஜீவன் என்னும் உயிரோ மகிழ்ச்சி அடைவதில்லை..

இந்திரியம்.கரணம்.
ஜீவன்.ஆன்மா என்னும் நான்கு ஒழுக்கங்களும் ஒன்றுசேர பூரணமாக முழுமைப் பெற்றால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து அருளை வழங்கி மகிழ்ச்சி அடைய செய்விப்பார்.

வள்ளலார் சொல்லி உள்ள இந்த உண்மை தெரியாமல் பலபேர் பலவிதமாக சொல்லி மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள். *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே துணையாக இருந்து அனைவருக்கும் நல்வழிகாட்ட வேண்டும்.*

எனவே எமனை நெருங்கவிடாமல்  மரணம்பயம் இல்லாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே  உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.கருணை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு