செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மரணத்தை வென்ற மகான் வள்ளலார் !

மனிதன் மரணத்தை வெல்ல
முடியுமா? முடியாதா? என்ற வினா மக்களிடையே பல்லாண்டு காலமாக உள்ள சந்தேகங்களாகும். 

இதற்கு பதில் ஆன்மீகவாதிகளாலும், அறிவியல் வல்லுனர்களாலும் அணுக்களை ஆராய்ச்சி செய்யும், ஆணு ஆராய்ச்சியாளர்களாலும்,
விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களாலும், மற்றுமுள்ள பகுத்தறிவுவாதிகளாலும், பொதுச் சிந்தனையாளர்களாலும்
இன்றுவரை {வள்ளலாரைத் தவிர}
யாராலும் பதில் சொல்ல, பதில் காண
முடியாமல் விழிக்கிறார்கள்.

★ஒரு சிலர் உலகில் தோன்றியது எல்லாம் அழிந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார்கள். ஒருசிலர் எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டேதான்
இருக்கும், அதுவே இறைவனுடைய
திருவிளையாடல் என்கிறார்கள். 

உலகில் படைக்கப்பட்ட  உயிர்கள் அனைத்தும் மனிதர்களுக்காகத்தான் ஆதலால் அனைத்தையும் அழித்து தின்று ஏப்பம் போட்டுவிட்டு மனிதனும்
அழிந்துவிட வேண்டியது தான்
என்கிறார்கள். 

ஒருசிலர் மனிதன் ஒழுக்கமுள்ளவனாக வாழ்ந்து  சொர்க்கம், சிவலோகம், வைகுண்டம் என்னும் இடத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்கிறார்கள். அதற்கு முக்தி என்று பெயர் வைத்துள்ளார்கள்

★ஒருசிலர் உடம்போடு சமாதி நிலை அடைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள், ஒருசிலர் காசி ராமேஸ்வரம், இமயமலை, கைலாயமலை, போன்ற புண்ணிய
தீர்த்தங்களை தரிசித்து ஆலய
வழிபாடு போன்ற கர்மங்கள் செய்வதால் கர்மம் தொலைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்்்

. ஒருசிலர் உயிர்களின் பரிணாமவளர்ச்சி தோற்றமும மாற்றமும் இயற்கையாகும். அதலால் கடவுள் என்பது ஒன்றும் இல்லை எல்லாம் அணுக்களின் சேர்க்கையாகும் என்கிறார்கள். ஒருசிலர் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரம போன்றவைகளை படித்து அதன்படி வாழ்ந்து வருபவைகள் மட்டும்தான் இறைவனையே அடைய முடியும் என்கிறார்கள், ஒருசிலர்
உயிர்களுக்கு தொண்டு செய்தால்போதும், பிறஉயிர்களை வதைக்காமல் இருந்தால்போதும், இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.

★இப்படி எண்ணற்ற வழிமுறைகள், என்பன போன்ற கருத்துக்கள் மனித
வாழ்க்கைக்கு பலபேர் பல வழிகளில்
வகுத்து வைத்துள்ளார்கள். ஒரு சிலர் எல்லா வற்றிற்கும் ஆசைதான் காரணம் ஆசையை அழித்தால் இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் ஒரு சிலர் துறந்தார்க்கும், துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை என்கிறார்கள் அவர்களே இறைவனை அடையமுடியும் என்கிறார்கள்.

இப்படி மக்கள் மனநிலையை குழப்பி வைத்துள்ள நிலையில் மக்களும் குழம்பிக்கொண்டு உள்ளார்கள். எவை உண்மை, எவை பொய் என்பது தெரியாமல், மலத்தில் புழுத்த புழுக்களைப் போல் மக்கள் தவித்துக் கொண்டு உள்ளார்கள் இதற்கெல்லாம்
ஒரு முடிவு கட்ட, இறைவனால் இந்த
உலகிற்கு வருவிக்கப் பட்டவர்தான்
திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

★உடம்புடன் செல்ல முடியுமா ? உடம்பை அழித்து விட்டு செல்லமுடியுமா ? மரணம்
வந்து விட்டால் செல்ல முடியுமா?

★சாமாதி நிலையில் செல்ல
முடியுமா ? என்றால் இந்த வழிமுறைகளில் செல்லமுடியாது. இதற்கு இறைவன் அனுமதியும்
கிடையாது. இதற்கு வள்ளலார் என்ன
சொல்கிறார் என்பதை பார்ப்போம்,
கல்வி இரண்டு வகைப்படும்!

★ஒன்று சாகும் கல்வி! ஒன்று சாகாக்
கல்வி! சாகும் கல்வி என்பது மாயையால் உண்டாக்கிய ஐம்பூதப் பொருள்களை பலவழிகளில் சம்பாதித்து அனுபவித்து அதனால் வரும் துன்பங்களினால் அச்சம் பயம், பருவமாற்றம், பின் முதிர்ச்சி, பிணி, துன்பம் அடைந்து பின் மரணம் அடைவது சாகும் கல்வியாகும்.

உலகில் உள்ள அனைத்துக் கல்விகளும் பொருள் ஈட்டுவதற்கு பயன்படும் கல்வியாகும். இதனால் என்ன பயன் என்றால், நம் உடம்பில் உள்ள கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் உடம்பு, போன்ற இந்திரியங்களும்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம், என்னும் கரணங்களும் மட்டும் தான் மகிழ்ச்சி அடைகின்றன, ஜீவனும் ஆன்மா என்னும் உள்ஒளி மகிழ்ச்சி அடைவதில்லை.

★கடலையும், உலகையும் நாட்டையும்
ஆளும் அதிபதிகளாக இருந்தாலும், உங்களுக்கு வரும் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ளமுடியுமா? மரணத்தை தவிர்த்துக்கொள்ளாத
வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்று கேட்கிறார் வள்ளலார். அப்படி வாழ்வதால் என்ன பயனடைந்து உள்ளீர்கள்.? உங்கள் வாழ்க்கையில் இந்திரியங்களும், கரணங்களும் மட்டும் மகிழ்ச்சி அடைகிறது, ஜீவனோ, ஆன்மாவோ மகிழ்ச்சி அடைவதில்லை, ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடையாத வாழ்க்கை மிருக வாழ்க்கையாகும் மிருகங்களும் உண்ணுகின்றன உறங்குகின்றன பின் இறந்து விடுகின்றன. அது போலத்தான் மனிதன் வாழ்க்கையா? மனிதன் அறிவு படைத்தவன் இல்லையா ? சிந்திக்க வேண்டாமா? உணர வேண்டாமா? மனிதப்பிறப்பு உயர்ந்த பிறப்பு என்பது எல்லாம், பொய்யா? அறிவை பயன்படுத்த வேண்டும், அதுவே மனித பண்பு என்பதாகும் .

★சாகும் கல்வி:
உண்ணுவதும் உறங்குவதும் பின்
இறப்பதும் சாகும் கல்வியாகும். நாம்
உண்ணுகின்ற உணவு இரைப்பையில்
சென்று ஐந்து நாழிகையில் பால்
போன்று அரைத்து பிரித்து ஊட்ட வேண்டிய அனைத்து உறுப்புகளுக்கும்.
நரம்புகளின் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது, அதனால் 72,000 நாடிகளும் அக்கிரமமின்றி நிலை பெறுகிறபடியால் உடல் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதை விரிக்கில் பெருகும். நாம் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்தை பிரித்து ரசாயன மாற்றம்போல் ரத்தமாகவும் அதில் இருந்து சத்தை பிரித்து ஜீவவித்து குழம்பாக மாற்றம் செய்து குண்டலினிப் பைக்குள் அனுப்பிவைக்கிறது.

★இவை பதினாறு வயதுக்கு மேல் அதன் வேலையை தொடங்குகிறது. இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான செயல்களாகும், இந்த ஜீவவித்து நாம் உண்ணும் உணவுக்கு தகுந்தாற் போல் சுரக்கும். ஜீவவித்தின் ஆதிக்கத்தால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், துணிவையும் உணர்வையும், ஊக்கத்தையும் கொடுப்பது. ஜீவ வித்து என்னும் திரவம்தான், உலகில் உண்டாகும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரண காரியமாக உள்ளது மனிதனின் ஜீவவித்து விளக்கமே யாகும். இது தான் எல்லா வற்றிற்கும் காரண காரியமாகும். இதுதான் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற ஆசைகளை உருவாக்குவதாகும்.

★இந்த மூன்று ஆசைகளினால் மனிதன் அழிந்து விடுகிறான், சுக்கிலத்தை கட்டுபடுத்தி வெளியே விடாமல் இருந்தால் அருள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் உணவைக் குறைத்து வாழத் தொடங்கினார்கள். இதுவே மரணத்திற்கு காரணமாகும். இதை அறிந்தவர்கள் ஆசையைத் துறக்கவேண்டும் என்கிறார்கள். ஆசையைத் துறந்தாலும் பசியைத் துறக்கமுடியவில்லை.

★அவற்றை துறந்தவர்கள் துறவிகள், சந்நியாசிகள், சித்தர்கள் யோகிகள், ஞானிகள் எனப்படுபவர்களாகும்,
மேலே கண்டவர்கள் சரியை, கிரியை, யோக ஞானம் என்னும் படி நிலைகளில் இருந்து இறைவனை அடையலாம் என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு வழியைக் கடைபிடித்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

★அவர்கள் முயற்ச்சிக்கு தகுந்தாற் போல் சில, பல சித்துக்கள் கிடைத்து இருக்கிறது. அதனால் அவர்கள் அந்த சித்தை வைத்துக் கொண்டு எல்லாம்
கிடைத்து விட்டது போல் இறுமாப்பு அடைந்து, நீண்ட நாள் வாழ்ந்து, மரணத்தை வெல்ல முடியாமல் அழிந்து போய் விட்டார்கள். மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்ற ரகசியத்தை யாரும் கண்டு பிடிக்கவில்லை.

★ஏன் என்றால் மரணம் என்பது இயற்கை என்று நினைத்துக்கொண்டு உள்ளார்கள், அதனால் உடம்போடு இறைவனை அடையலாம், என்பது அனைவருடைய கொள்கைகளாகும், ஆதலால் ஆசைதான் எல்லா வற்றுக்கும் காரணம் ஆசையை ஒழித்து விட்டால், இறைவன் அருளைக் கொடுத்து விடுவார், இறைநிலையை அடைந்து விடலாம், என்பது சமய மதக் கொள்கைகளின் கோட்பாடுகளாகும். இவை முற்றிலும் தவறானது என்பதை வள்ளலார் விளக்குகிறார், உடம்பின்
ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல்,
"கண்டதே காட்சி, கொண்டதே கோலம்"
என்று வாழ்ந்து, கதைகளாகவும், கற்பனைகளாகவும், தத்துவங்களை உண்மைபோல் அமைத்து வைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழம்ப
வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அதனால் இன்றுவரை மக்கள்
உண்மை என்ன வென்று தெரியாமல், பொய்யையே உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

மரணம் இயற்கை அல்ல அவை செயற்கை என்பதை வள்ளலார்
""தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்''
என்பார் இவை இன்று நேற்று அல்ல
என்றும் உள்ளதால் இந்த நோவை நீக்க
வேண்டும் என்கிறார்.

★மரணம் என்னும் நோவை நீக்குவது எந்த கடவுளாலும் முடியாது. உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாமல் அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் மரணத்தை வெல்ல முடியாது.

★மனம் என்பது உலக போகத்திலே இட்டுச்செலவது, அது பேய் குரங்கு போன்றது அதை வசப்படுத்த தெரியாமல், வழி துறை தெரியாமல்
பொய்யான வாழ்க்கை வாழ்ந்து இன்பம், துன்பம் என்ற அற்ப செயல்களால் அனுபவித்து பின் எண்ணி எண்ணி இளைத்துக்கொண்டு உள்ளீர்கள், உலகில் உள்ள அனைவரும் ஏழைகள்தான், ஒருவரும் பணக்காரன் அல்ல, மரணத்தை வேல்லுகிறவன் யாரோ அவனே பணக்காரன் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்.

★சாகாக் கல்வி !
மரணத்தை வெல்ல முடியும் !
முடியும் ! அதற்கு சாகாக்கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்ளார்.

★சாகாதகல்வி என்பது ஒன்று உண்டு என்பதை முதன் முதலில் கண்டு பிடித்து உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர்
வள்ளலார், கல்வி என்பது மரணத்தை
வெல்லும் கல்வியைக் கற்றுக் கொள்வதே சாகாக் கல்வி என்பதாகும்
கடவுள் ஒருவர் என்பதை அறிவதே உண்மை அறிவாகும். ஐந்து மலமான ஐந்து பூதங்களின் தொடர்பு இல்லாமல்
அதை வென்று வாழ்வதே பூரண
வல்லபம் என்பதாகும். என்றும் அழியாமல் வாழ்ந்து அனைத்துப்
பொருள்களையும் உருவாக்கும் தொழிலே உண்மையான தொழிலாகும். கல்வி, அறிவு, வல்லபம், தொழில் போன்ற என்றும் அழிவில்லாத செயல்களை செய்யும் செயல் பெற்றதே என்றும் அழியாத இன்பமாகும். மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் மேலே கண்ட செயல்களை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

★எப்படி கண்டு பிடித்தார் ? என்பதைப்
பார்ப்போம்.!

இவ்வுலகில் உள்ள அனைத்தும், உயிர்கள் வாழ்வதற்காக இறைவனால் படைக்கப் பட்டதாகும். படைக்கப் பட்ட எந்த பொருளையும் அனுபவிக்கலாம், அழிக்கக்கூடாது, சேர்த்து வைக்ககூடாது, அளவுக்கு அதிகமாக அனுபவிக்கக் கூடாது. எங்கும் எடுத்து செல்லக்கூடாது, என்பதை அறிந்த வள்ளலார்.

★அதற்கு மேல் இந்த உடம்பு ஏன்
வந்தது?

உயிர் எப்படி வந்தது என்பதை அறிய
தொடங்குகிறார். அப்படி அறியும்
போது, உயிர்களுக்கு இந்த உலகத்தில்
வாழ்வதற்கு மூன்று சுதந்திரம்,
இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்கிறார்,
அந்த சுதந்திரத்தை மனிதன்
எப்படி வேண்டுமானாலும் பயன்
படுத்திக் கொள்ளலாம், அந்த
சுதந்திரத்தை பயன்படுத்தி வாழும்
வாழ்க்கையில் இன்பம் துன்பம்
தொடர்ந்து கொண்டே வரும்
என்பதை உணருகிறார். நல்லது செய்தால் நல்வினையாகவும், தீயவை செய்தால் தீவினை யாகவும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது, இதுவே பிறப்பு இறப்புக்கு காரணகாரியமாக இருந்து கொண்டு உள்ளது என்பதை அறிந்த வள்ளலார் இந்த உலகத்தில் உள்ள எதையும் அனுபவிக்காமல் வாழ்வது எப்படி என்பதை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, அவருடைய அறிவுக்கு அதிகமான வேலைக் கொடுக்கிறார், அறிவை அறிவாலே அறிகின்ற போது உண்மையான அறிவு பதில்சொல்கிறது.

★அருளைப் பெற்றால் மரணத்தை வெல்லமுடியும் என்பதை அறிந்த
வள்ளலார், அருளைப்பெறுவதற்கு எவை தடையாக இருக்கிறது என்றால், இறைவன் நமக்குக்கொடுத்த சுதந்தரத்தை, நாம் உபயோகப்படுத்தக் கூடாது, வேண்டாம் என்று திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்.

★இந்திரியம் கரணம் என்னும் கருவிகள் செயல்படாமல் ஜீவனும் ஆன்மாவில் அடங்கும் போதுதான் அருள் என்னும் அமுதம் சுரக்கும். அதாவது ஆபரேஷன் செய்யும்போது வலி தெரியாமல் இருக்க, மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் இருப்பது போன்று} அமுதம் சுரக்கும் போது உடம்பின் மாற்றங்கள் என்னவாக மாற்றம் அடையும் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார், ஊண் உடம்பு #ஒளி #உடம்பாக மாற்றுவதுதான் மரணத்தை வெல்லும் வழியாகும். அதாவது வேதியல்மாற்றம் போல். உடம்பு மற்றம் அடைவதைப்பற்றி வள்ளலார் சொல்லுகிறார்.

★இந்த உலகத்தில் யாராவது என்னைப் போல், மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று இருக்கிறார்களா என்பதை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் கேட்கிறார்.

""நோவாது நோன்பு எனைப்போல்
நோற்றவரும் மெஞ்ஞான்றும் சாகா வரம் எனைப் போற் சார்ந்தவரும் தேவா நின்பேர் அருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் யார் உளர் நீ சற்றே யறை!

★மரணத்தை வென்ற மாபெரும் மகான்
நமது வள்ளல்பெருமான் அவர்கள், அருட்பெரும்ஜோதி ஆண்டவரைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு ஆண்டவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

★உலகம் இதுவரையில் உண்மை அறியாமல் இருந்தது, ஆதலால்
எனக்கு துன்பம் இருந்தது, அந்த
துன்பங்கள் யாவும் உன்னால் தீர்ந்து விட்டது, நீ ஒருவன் தான்என்னுடைய செல்வப் பிள்ளை, நல்லப்பிள்ளை, தாவரங்களும் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உனக்கு, உன் மன நினைப்பின் படியே அன்பையும் அருளையும் பெற்று, நீடுழி காலம் விளையாடி மகிழ வேண்டும். ஆதலால் என்னுடைய ஆட்சியை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று, அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
வள்ளலார் வசம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறார்.

★உனை என்றும் கைவிடாமல்
உன்னுடனே இருப்பேன் இது நம்
இருவருடைய ஆணையாகும் என்று மகிழ்ச்சியுடன் வாக்களித்து உள்ளார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .

இதைவிட பெரிய பேறு உலகத்தில்
யாருக்காவது கிடைத்தது உண்டா ?
மரணத்தை வென்றால் மட்டும்போதாது அதற்கு உண்டான தகுதியும் வேண்டும். "அருளாட்சி பெரும்'' அந்த தகுதியை வள்ளல் பெறுமான் பெற்று உள்ளார் .

நமது உடம்பு தாயின் கருப்பையில்
அணுக்களின் கூட்டு சேர்க்கையால்
பூத காரிய அமுதத்தினால் {அணுவை ஒட்டும் பசையால்} பின்னப் பட்டதாகும், அந்த உடம்பை பிரிக்க வேண்டும், வேறு எதைக் கொண்டும் பிரிக்க முடியாது. அருட்பெரும்ஜோதி ஆண்டவர், நம் ஆன்மாவில் உள்ள அமுதத்தை எப்போது வெளிப்படுத்துகிறாரோ அப்போதுதான், அந்த அருள் அமுதத்தால்-பூத காரிய அமுதத்தால் பின்னப்பட்ட அணுக்களை பிரிக்கமுடியும், அப்போது ஊண் உடம்பு ஒளி உடம்பாக மாறும். இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும்.

★மரணத்தை வெல்ல முடியும் இதில்
எந்தவித சந்தேகமும் தேவை இல்லை. மனிதர்களாக பிறந்தவர்கள் மரணத்தை வென்று இறைவனை அடைவது தான் மனிதர்களின் இறுதி நிலையாகும். அதைத்தான் வள்ளலார்:

"கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பார்! மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பார்! பேரின்ப பெருவாழ்வு என்பார் ! பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பார் ! மனிதனாக வாழ்ந்து பின் மரணத்தை வெல்வோம்"

வள்ளலார் பாடல் ! 




இந்த ஒருபாட்டே போதும் வள்ளலார் மரணத்தை வென்றதின் அடையாளம்...

மரணம் அடையாமல் வாழும் ஓளி உடம்பை எவற்றாலும் அழிக்க முடியாது என்பதற்கான பாடல் !



மரணத்தை வென்ற மகான் ஒருவரே ! அவரே வள்ளலார்..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896. 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு