கிளிப்பிள்ளை வாழ்க்கை !
*கிளிப்பிள்ளை வாழ்க்கை !*
*மனித வாழ்க்கை என்பது அறிவு சார்ந்த அருள் சார்ந்த புனிதமான ஒப்பற்ற உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கே எடுக்கப்பட்ட. கொடுக்கப்பட்ட. படைக்கப்பட்ட தேகமே
மனித தேகமாகும்*
*தன்னுடைய அகத்தில் உள்ள ஆன்ம அறிவை அருள் அறிவைப் பயன்படுத்த தெரியாமல் மற்றவர்கள் எழுதி வைத்துள்ள கலைஉரைத்த கற்பனைக் கதைகளின் மூடநம்பிக்கையில் சிக்கி அவற்றில் உள்ள கருத்துக்களை சிற்றறிவான மனம் புத்தி சித்தம் அகங்காரங்களை மட்டும் பயன்படுத்தி பின்தொடர்ந்து படித்து கேட்டு சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளைப் போல் மனிதர்கள் தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக வீண்வாழ்க்கை வாழ்ந்து மரணம் அடைந்து கொண்டே வந்துள்ளார்கள்*
*உலகில் தோன்றிய ஞானிகளில் பலர் மனித உடம்பின் உள்ளே இயங்கும் தத்துவ உருப்புக்களை கலைகளாக பாவித்து பல உருவங்களாக படைத்து பல கடவுள்களாக சித்தரித்து. பல பெயர்களை வைத்து. பல கோணங்களில் பலவிதமான கற்பனை காவியங்களாக கற்பனை கதைகளாக படைத்திருக்கிறார்கள் அதிலே முக்கியமானது வேதங்கள். ஆகமங்கள். புராணங்கள். இதிகாசங்கள் சாத்திரங்கள் என்பவைகளாகும்*
*இவைகள் யாவும் உண்மைக்கு புறம்பானவைகளாகும்.உண்மைக்கு புறம்பான சொற்பொருள்கள் மற்றும் இலக்கண இலக்கியங்கள் மற்றும் காவியங்கள் கதைகள். காவியங்களினால் புனைக்கப்படும் கற்பனைக் கதைகள்.அக்கதைகளில் படைக்கப்பட்ட*
*கதாபாத்திரங்கள் யாவும் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளாகும்*
*அந்த பொய்யான காவியங்களையும் கதைகளையும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் யாவையும். உண்மையாக இருந்தது போலவும் நடந்தது போலவும் வாழ்ந்தது போலவும் சித்தரித்து படைத்துவைத்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்*
*அதற்கு தகுந்தாற்போல் புறத்தில் இடம். வாகனம். ஆயுதம். வடிவம். ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.*
*ஆதலால் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம். ஆகமம். புராணம். இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று மிகவும் அழுத்தமாக சொல்கிறார் வள்ளலார்*
*கற்பனை காவியங்கள் படைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் இரண்டு முனிவர்கள். மகாபாரதம் எழுதிய வேதவியாசர் என்கின்ற முனிவர் ஒருவர்*
*இராமாயணம் எழுதிய வால்மீகி என்கின்ற முனிவர் ஒருவர்*மற்றும் சிறிய பெரிய சித்தர்கள் யோகிகள் மற்றும் ஏசு.நபிகள்.புத்தர் போன்ற ஆன்மீக போதகர்கள் குருமார்கள் அவர்களுடைய சீடர்கள் மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் போன்றவர்களும் மற்றும் மன்னர்கள் அரசர்கள் மந்திரிகள் ஆட்சியாளர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான கற்பனை கதைகளை நிலை எனக் கொண்டாடி மகிழ்ந்து உலகம் முழுவதும் விதைத்து மக்களை நம்பும்படி செய்துவைத்து விட்டார்கள் இன்னும் உலகம் முழுவதும் விதைத்து கொண்டே உள்ளார்கள்*
இதைத்தான் வள்ளலார் சொல்லுகிறார்.
*ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை*
*அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார்*
*அதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால் பொய்யர்களின் புழுகு மூட்டைகளை உடைத்து எரிந்துவிட்டேன் என்பதாகும்*
*உயர்ந்த மெத்த படித்தவர்கள் முதல் படிக்காத மாமரர்கள் வரை தங்களுடைய அறிவையும் அருளையும் பயன் படுத்த தெரியாமல் மனம் புத்தி சித்தம் அகங்காரத்தின் துணைகொண்டு குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் செம்மரி ஆடுகளின் கூட்டம்போல் மந்தை மந்தைகளாக சாரை சாரைகளாக பலபல பிரிவுகளாக தனித்து தனித்து கூட்டங்களாக பிரிந்து வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்*
*இன்று சாதி சமயம் மதம் போன்ற தீராத தொற்று நோய்கள் அதாவது கொரோனோ மற்றும் ஒமேக்கிறான் தொற்று போல் உலகம் முழுவதும் மக்களை பிடித்துக் கொண்டு்ம் பேயாட்டம் ஆட்டிக்கொண்டும் வதைப்பதற்கு காரண காரியமே உலகில் உள்ள கற்பனை கதைகளினால் உருவான சாதி சமயம் மதங்களேயாகும்*
*கதைகளில் வரும் தெய்வங்கள் உண்மை என்றால் உலகத்தையே ஆட்டி படைத்து பிடித்துக் கொண்டு இருக்கும் கிருமித் தொற்றை உலகை விட்டு அகற்றி மக்களைக் காப்பாற்றி இருக்கவேண்டும்*
இப்போது எல்லோரும் பொய்யான கதைகளைச் சொல்லியும் எழுதியும் மேலும் மக்களை குழப்பிக்கொண்டே வருகிறார்கள்.
*வள்ளலார் பாடல்!*
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்
*கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக*
மலைவறு *சன் மார்க்கம் ஒன்றே* நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதி *யருள் வழங்கினைஎன் தனக்கே*
உலைவறும் இப் பொழுதே நல் தருணம் என நீயே
உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநாயகனே.!
என்றும் மேலும்
வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
*ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி*
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன் வீண் போதுகழிப் பதற்கோர்
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்
சித்தசிகாமணியே என் திருநடநா யகனே.!
என்றும் மேலும்
வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் -
*சூதாகச்*
*சொன்னவலால்*உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை*
என்ன பயனோ இவை.!
*மேலே கண்ட பாடல்களில் வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் இவை முதலான அனைத்தும் சூதாக சொல்லி உள்ளதே தவிர உண்மையை வெளிப்படையாக எவையும் சொல்லவில்லை* *ஆகையினால் இவைகளால் மக்களுக்கு எந்த வகையிலும் லாபமும் இல்லை. பயனும் இல்லை இவைகளை இனிமேலும் விட்டு வைத்தால் உலகத்தையே அழித்துவிடும் அதனால் இவைகளை வரண்டுபோன புன்செய் நிலத்தில் ஆழமான குழியைத் தோண்டி இருக்கும் இடம் தெரியாமல் புதைத்துவிட வேண்டும் என்கிறார் வள்ளலார்.*
*வள்ளலார் பாடல்!*
*இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை*
*இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு*
*மருட்சாதி சமயங்கள்* *மதங்கள் ஆச்சிரம*
*வழக்கெலாம்* *குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்*
தெருட்சாருஞ் *சுத்தசன் மார்க்க நன்னீதி*
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதி என் ஆண்டவர் நீரே!
மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் சாதி சமய மதங்களை தோற்றுவித்த பொய்யர்களின் சூதுகளையும் சூழ்ச்சிகளையும் வெளிச்சம் போட்டு முகமூடிகளை கழட்டி எரிந்துள்ளார் வள்ளலார்.
இனி உலகமக்கள் யாவரும் வெளிப்படையான உண்மையை தெரிந்து அறிந்து புரிந்து. மனித நேயத்தையும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையையும் கடைபிடித்து எக்காலமும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு பொதுவான புதிய தனிநெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* எனும் இயற்கை உண்மை நெறியைப் பின்பற்றி இயற்கை இன்பத்தை தருகின்ற இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வோம்*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு