சனி, 18 டிசம்பர், 2021

பிறவுச் சட்டத்தை கிழித்தவர் !

 *பிறவிச் சட்டத்தை கிழித்தவர்!* 


வள்ளலார் பாடல்! 


கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்

கலக்கமும் தீர்ந்தனன் *பிறவிச்*


*சட்டமும் கிழித்தேன்* தூக்கமும் துறந்தேன்

*சாவையும் நோவையும் தவிர்ந்தேன்*


சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்

*செல்வமெய்ப் பிள்ளை* என் றொருபேர்ப்


பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்

பண்ணிய தவம்பலித் ததுவே.! 


*மேலே கண்ட பாடல் மிகவும் முக்கியமான பாடலாகும்.  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று தூக்கத்தை துறந்தேன் மேலும் நரை திரை பிணி மூப்பு பயம் நீங்கி ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வென்றுவிட்டேன்* ஆதலால் எனக்கு செல்வ மெய்பிள்ளை என்று ஓர் பட்டமும் பெற்றேன் என்கிறார்

எனக்கு மட்டும் கிடைத்தால் போதாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என்கிறார்.


*அதற்காக பழைய சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை படைக்கிறார் வள்ளலார்*


*ஆன்மாக்கள் இவ்வுலகிற்கு வந்த காலம்முதல்  தொடர்ந்து பிறந்து பிறந்து இறந்து இறந்து பலகோடி பிறவிகள் தொடர்ந்து  எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதுவரையில் எவராலும் தீர்வுகாண முடியாத சட்டமாக இருந்த்து* *இந்த சிக்கலான தீர்வு காணமுடியாத பிறவிச் சட்டத்தை  கிழித்தவர் நமது வள்ளல்பெருமான் ஆவார்கள்*


*உடல் உயிர் ஆன்மா மூன்றும்  மனித உடம்பின் முக்கிய அம்சமாகும் இதைத்தான் பதி பசு பாசம் என்பார்கள்* *பதி என்னும் கடவுளுக்கு சமமான ஆன்மாக்கள்  ஆணவம் மாயை மாமாயை பெருமாயை  கன்மம் என்கின்ற ஐந்து மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசு என்று சொல்லப்படுகிறது*


*ஆன்மாக்கள் அருள் பெற்று வாழ்வதற்கு வசதியாக  இவ்வுலகிற்கு வந்து உயிர் உடம்பு எடுத்து வாழ்கின்றது.* * இயற்கையில் தயவுள்ள ஆன்மா  தான்வாழ்வதற்கு வசதியாக  பஞ்சபூத அணுக்களால் பின்னப்பட்ட வீடான அசுத்த பூதகாரிய உடம்பையும். தமக்கு முற்றிலும் சரியான  துணையாக இருந்த சுத்த பூதகாரிய உயிரையும் அழிக்கவோ அவற்றை பிரிந்து விட்டுவிட்டு செல்வதோ ஆன்மாக்களின் இயற்கை உண்மை தயவுக்கு விரோதமானது என்பதை ஒவ்வொரு ஆன்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.


*ஆன்மா உயிரையும் உடம்பையும் இழந்து விடுவதால்  அதற்கு மரணம் என்று பெயர் சூட்டப்பட்டது தான்வாழ்ந்து வந்த உடம்பு என்னும் வீட்டை இழந்துவிடுவதால் இவ்வுலகிலேயே வேறு ஒரு அசுத்த பூதகாரிய தேகம் எடுத்து வாழவேண்டுமேத் தவிர இவ்வுலகை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாது இதுதான் இவ்வுலகின் சட்டதிட்டமாகும்* 


*அருள் பெற்று ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டால் மட்டுமே எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பது அருள் சட்டமாகும்*


*உயிரையும் உடம்பையும் அழிக்காமல் வாழும் வழியை கண்டு பிடித்தவர் வள்ளலார்* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*ஆன்மாக்களை படைத்து  இவ்வுலகிற்கு அனுப்பிய இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற வேண்டும்* அருளினால் மட்டுமே தேகம் மாற்றம் உண்டாக்க முடியும்.


*நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த அசுத்த பூதகாரிய தேகத்தை அழிக்காமல் சுத்த  பிரணவ ஞான தேகமாக மாற்ற வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சட்டதிட்ட கொள்கையாகும*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதிலும் அருளைப் பெறும் வழிகளிலும் ஆன்மாக்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது* அதாவது  அசுத்த பூதகாரிய திரைகளால் ஆன்மா மறைக்கப் பட்டுள்ளது. அச்சிக்கலை உடைக்கவும் நீக்கவும் வந்தவரே வள்ளலார் 


அருள்பெறும் *உண்மைத் தன்மை தெரியாமல் தவறான சிக்கலை உருவாக்கி ஆன்மாக்களை அலைய விட்டவர்கள் சாதி சமய மதக் கொள்கைகளை உருவாக்கியவர்கள் ஆன்மீக குருமார்கள் போதகர்கள் கர்த்தாக்கள் மற்றும்  சித்தர்கள் யோகிகள் ஞானிகள் என்பதை நூற்றுக்கணக்கான பாடல்கள் வாயிலாகவும் உரைநடைப்பகுதிவாயிலாகவும் தெளிவாக ஆறாம் திருமுறை திருஅருட்பா நூலில் பதிவு செய்து உள்ளார்* 


செயற்கையான மரணச் சட்டத்தை மாற்றி புதியதான சுத்த சன்மார்க்க இயற்கை சட்டத்தை படைத்துள்ளார்.


*புதிய சட்டத்தில் முதலில் சாதி சமய ம் மதம் சார்ந்த  பற்றுதல்கள் முழுவதையும் பற்று அற விட்டுவிட்டு சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் 


*சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி !* ( அகவல்)

*சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி!* (அகவல்)


*சாதி சமய மதச் சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார்* இயற்கை *உண்மையான  கடவுளைத் தொடர்பு கொள்வதற்கும் அருளைப் பெற்று மரணத்தை வெல்வதற்கும்  பொய்யான சாதி சமய மதக் கொள்கைகளே காரண காரியமாக உள்ளதால்* 


*பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐயரைக் கண்டேன் என்று தெளிவாக தெரியப்படுத்துகின்றார்* 


*மரணத்தை வெல்வதற்கு உலகியல் படிப்பு பட்டம் பதவி வசதியானவாழ்க்கை  பணம் புகழ்  எதுவும் தேவையில்லை* இந்திரிய கரண ஜீவ ஆன்ம 

ஒழுக்கமே மனித தேகத்திற்கு முக்கியமானதாகும்* 


*பழைய பொய்யான   கல்விமுறை சட்டத்தை மாற்றி புதிய கல்விமுறை சட்டத்தை கொண்டு வந்தவர் வள்ளலார்*


*வள்ளலார் கற்றுத்தருவது சொல்லிக்  கொடுப்பது புதிய அருள்பெறும்  கல்விமுறை கொள்கையாகும் அதுவே  சாகாக்கல்வி என்பதாகும்* *ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமானால்தான் சாகாக்கல்வி கற்க முடியும் என்பதே வள்ளலார் சொல்லும் உண்மையாகும்.*


வள்ளலார் பாடல்! 


சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்தான் என அறிந்தஅறிவே

தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே

தனித்த பூரண வல்லபம்


வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்

விளைய விளை வித்ததொழிலே

மெய்த் தொழிலதாகும் இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம் எல்லாம்


மாகாதலுற எலாம் வல்ல சித்தாகி நிறை

வானவரமே இன்பமாம்

மன்னும்இது நீபெற்ற *சுத்தசன் மார்க்கத்தின்*

மரபென் றுரைத்தகுருவே


தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்

தேற்றி அருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே

தெய்வநட ராஜபதியே.! 


சுத்த சன்மார்க்க மரபு என்ன என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவாக எளிய தமிழில் பதிவு செய்துள்ளார்.


சுத்த சன்மார்க்க மரபை பின்பற்றுவதற்கு எவை எவை தடையாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் தூக்கி எரிந்து விடவேண்டும். 


வள்ளலார் பாடல்! 


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால்* அதனை


எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்


*பற்றியபற் றனைத்தினையும்* *பற்றறவிட்டு அருள் அம்*

*பலப்பற்றே பற்றுமினோ* *என்றும்இற வீரே.!* 


*இந்த மனிதப்பிறப்பு போனால் மீண்டும் மனிதப்பிறப்பு கிடைக்கும் என்பது உறுதி அல்ல* ஆதலால் காலம் தாழ்த்தாமல் சாதி சமய மதப் பற்றுகளையும் மற்றும் உலகியல்  பற்றுகளையும் மேலும் பற்றிய பற்றுகள் அனைத்தினையும்  பற்றுஅற விட்டுவிட்டு  அம்பலத்தாடும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி கொள்ள வேண்டும். 


பழைய சட்டமான சாதி சமய மதக் கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு வள்ளலார் வகுத்துதந்த சுத்த சன்மார்க்கத்தின்  புதிய சட்டதிட்டத்தின் கொள்கைபடி அதன் மரபுப்படி வாழ்க்கை அமைத்துக்கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு