மானிட பிறப்பு உயர்ந்தது !
*மானிட பிறப்பு உயர்ந்தது* !
*தாவரம் முதல் ஊர்வன பறப்பன நடப்பன அசுரர் தேவர் இறுதியாக மனிதர் என ஏழுவகையான பிறப்புக்கள் ஆன்மாவிற்கு கொடுக்கப்படுகிறது*
எல்லா பிறப்பு உடம்புகளிலும் மனிதப்பிறப்பு உடம்பு மட்டுமே உயர்ந்தது என்பதற்கு காரணம் என்ன? என்பதை ஒவ்வொரு மனித தேகம் எடுத்த ஆன்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
*மனித தேகத்தின் தனிச்சிறப்பு !*
*மனிதபிறப்பிற்கு மட்டுமே சிந்திக்கும்திறன் செயல்படுத்தும் திறன் பேசும்திறன் மற்றும் உண்மைஅறியும் அறிவுத்திறன் மேலும் தன்னை அறியும்திறன் தன்னைப்படைத்த தலைவன் யார்? என்பதை தெரிந்துகொள்ளும் திறன்* மற்றும் கற்றல் கேட்டல் சிந்தித்தல் உணர்தல் தெளிதல் செயல்படுதல் போன்ற உயர்ந்த செயல்பாட்டு கருவிகள் அகத்திலும் புறத்திலும் கண்களுக்குத் தெரியாமல் யாவும் பொருத்தப்பட்டுள்ளன
*மேலும் மீண்டும் பிறப்பு இறப்பு எடுக்காமல் இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்றும் உயர்ந்த அருளைப்பெறும் தகுதியும் என்றும் அழியாத சித்திபெற்று இறைவனுடன் கலந்து பேரின்பசித்தி அடைந்து வாழும் தகுதி உடைய உடம்பே மனித தேகமாகும்*
மேலும் ஆன்மாவின் துணைக்கருவிகளான ஜீவன் கரணங்கள் மற்றும் இந்திரியங்கள் யாவும் அழகாக மிகவும் அற்புதமாக பொருத்தப்பட்டுள்ளன.
*இந்த உயர்ந்த அறிவையும் ஆற்றலையும் அருளையும் பெற்று உலகம் எங்கும் தடை இல்லாமல் செல்லும் தகுதி உடையதால் மனித தேகம் எல்லாத் தேகத்தையும் விட உயர்ந்த அறிவுள்ள தேகம் என்று சொல்லப்படுகின்றது*.
*எனவே ஆன்மா மனிததேகத்தை பெற்றதினால் "உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய உயர்ந்த அறிவுள்ள மனிததேகத்தைப் பெற்ற நண்பர்களே என்று வள்ளல்பெருமான் நம்மை எல்லாம் பார்த்து அன்புடன் அழைக்கின்றார்*
*ஆதலால் உயர்ந்த தெளிவான அறிவுள்ளவர்கள் மனிதர்கள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.*
*ஆன்மாக்கள் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்நிதியே ஞான நடத்தரசே என்உரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலியீர் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திட்டலாம்* கண்டீர் என்றும்
*மேலும் புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே என்றும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் சொல்லுகிறார்*
*மனித தேகப் படைப்பு*
*மனித தேகம் மற்ற தேகங்களைப் போல் லேசில் கிடைத்தது அல்ல.இத்தேகம் போனால் மறுபடியும் இத்தேகம் கிடைப்பது உறுதி அல்ல என்கிறார்*
*ஆதலால் இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்*
*இந்த உலகத்தில் மனித உடம்பு கட்டுவதற்கு (கிடைப்பதற்கு) அதாவது அணுக்களை இணைப்பதற்கு அதிக கவனம் அதிக அக்கரை அதிக முயற்சி அதிக காலத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எடுத்து கொள்ளப்பட்டதாகும். அதனால் மனித தேகம் தனித்தன்மை வாய்ந்ததாகும்*
*மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை குணம் தயவு அதேபோல் ஆன்மாவின் இயற்கை குணம் தயவாகும். தயவை வெளிப்படுத்தும் விதமாக மனித உடம்பு அமைக்கப்பட்டுள்ளது* *என்பதை உணர்ந்து ஒவ்வொரு ஆன்மாவும் தயவை வெளிப்படுத்த வேண்டுவது அவசியமாகும்*
*மனித தேகத்தில் பின்னப்பட்ட அணுக்கள் சுத்த பூதகாரிய அணுக்களாகும் மிகவும் உயர்ந்த தத்துவ ஜடப்பொருள்களைக் கொண்டு பிண்ணப்பட்ட அணுக்களாகும்*
*மனித உடம்பின் தலைப்பாகம் மிகவும் அதிசயமான அற்புதமான வியக்கத்தக்க செயல்களைச் செய்யும் அறிவும் ஆற்றலும் வெளிப்படுத்தும் விதமாக சிறு மூளையும் பெரிய மூளையும் கொண்ட பகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன* *மூளையின் மத்தியில் சிற்சபை என்னும் ஓர் வெற்றிடம் உண்டு அங்குதான் ஆன்மா தனிமையில் இயங்கும் பகுதியாகும்*.
*ஆன்மாவின் உள்ளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உயர்ந்த சக்தி வாய்ந்த பொன் நிறமான அருளை நிரப்பி வைத்துள்ளார்*
*அவ்வருளைப் பெறவே உயர்ந்த அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.*
*கீழ் பிறவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து மேல் பிறவியான மனிதப்பிறவி எடுத்துள்ள ஆன்மா மீண்டும் கீழ்பிறவிக்கு செல்லக்கூடாது என்பதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை நியதியாகும்*
*உயர்ந்த அறிவும் பிறப்பும் எடுத்த ஆன்மா மீண்டும் மேல்நோக்கி செல்ல வேண்டும்*மேல் நோக்கி செல்ல வேண்டுமானால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழும் வாழ்க்கையே மேல்நோக்கி செல்லும் வாழ்க்கையாகும்*
*எனவே மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள் எல்லா உயி்ர்களிடத்தும் உயிர் இரக்கமான ஜீவகாருண்யமும் ஆன்மநேயமும் கொண்டு வாழ்வதோடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் உண்மையான இடைவிடாத அன்பை செலுத்தி அறிவை பெருக்கி அருளைப் பெற்று ஊனினை உருக்கி உள்ஒளி பெற்று ஒளிதேகமாக்கி வாழ்வாங்கு வாழவதே உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தின் லட்சியமாகும்*
எல்லா உயி்ர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு