சுத்த மெய் அறிவு !
*சுத்த மெய் அறிவு !*
*மனிதபிறப்பு என்பது கீழ் அறிவு நிலையில் இருந்து மேல் அறிவு நிலைக்கு ஏற்றப்படும் பிறப்பாகும்*
*அதனால் உயர்ந்த அறிவுள்ள மனிதப்பிறப்பு என்று சொல்லப்படுகிறது.*
சாதி சமயம் மதம் சாத்திரம் என்ற குப்பைகளை மனித குலத்தில் வீசப்பட்டதால் மனித குணத்தின் மெய் அறிவு வெளிப்படாமல் மழுங்கிபோய் விட்டது.
*இந்த பாவச்செயலை உலகம் எங்கும் விதைத்து மனிதர்களின் சுத்த மெய் அறிவை ஆதியிலே மழுங்கச் செய்தவர்கள் சாதி சமயம் மதத்தை தோற்றுவித்த போலியான ஆன்மீக தலைவர்கள் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்*
*அவர்களின் போலியான முகமூடிகளை கழட்டி உலக மக்களுக்கு தெரியப்படுத்தவே "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை" 1872 ஆம் ஆண்டு வடலூரில் தோற்றுவிக்கிறார்*
*இந்த உண்மையை ஈரோடு கதிர்வேல் ஆகிய நான் சொல்லவில்லை* *வள்ளலார் பதிவு செய்கிறார்*
வள்ளலார் பாடல்!
பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
*பவநெறி* இதுவரை பரவிய திதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்
*செறிஇருள்* அடைந்தனர் ஆதலின் இனி நீ
*புன்னெறி தவிர்த்தொரு* *பொதுநெறி* எனும்வான்
புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!
என்று மிகத் தெளிவாக பதிவு செய்கிறார் மேலும்
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே *கோத்திரச்சண் டையிலே*
*ஆதியிலே* அபிமானித் தலைகின்ற உலகீர்
*அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே*
*நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே* நிறுத்த
நிருத்தமிடும் *தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே*
*வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய*
மேவுகின்ற தருணம்இது *கூவுகின்றேன்* உமையே.!
*மேலே கண்ட பாடல்கள் போல் நூற்றுக்கணக்கான பாடல்களிலே சாதி சமயம் மதவாதிகளின் சூதுகளை தோல்உரித்து வெளிச்சம் போட்டு திருஅருட்பாவில் காட்டுகிறார்*.
*அதனால் அவர் அடைந்த எதிர்ப்புக்கள். பிரச்சனைகள். கேவலமான பேச்சுக்கள். தேவையற்ற வாதங்கள் அளவில் அடங்காது* மேலும் *அவர்மீது வழக்கு தொடர்ந்து நீதி மன்றம் வரை சென்று பார்த்தார்கள் ஆனாலும் வள்ளலாரை யாராலும் அசைக்க முடியவில்லை அழிக்கமுடியவில்லை* *எல்லா தரப்பிலும் வள்ளலாரே வெற்றி பெற்றார்*.
*அதற்கு என்ன காரணம் ?*
*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்* *சுத்த மெய் அறிவால் ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று செயற்கையான ஊன் உடம்பை இயற்கையான ஒளி உடம்பாக்கி மரணத்தை வென்றவர் அதனால் வள்ளலாரிடம் எவராலும் நெருங்க முடியாத தொடமுடியாத அழிக்கமுடியாத அளவிற்கு அவர் உடம்பு ஒளி தேகம் பெற்றவர்* ஆகையினால் அவரால் எல்லாவற்றையும் வெற்றியுடன் வெல்ல முடிந்தது.மேலும் உலக மக்களுக்காக உண்மையை வெளிப் படுத்தியவர்
உலகம் எங்கும் நிறைந்துள்ள *சாதி சமய மதங்களை அழித்து ஒழித்து இருக்கும் இடம் தெரியாமல் நிறுவி அதன்மேல் உலக பொது நெறியாக விளங்கும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்து உள்ளார்.*
*அச்சங்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் இறைவன் குடியிருக்கும் ஆலயமான மனித உடம்பின் அகத்தையும் புறத்தையும் தூய்மை படுத்தும் ஒழுக்கத்தை போதித்து மனித குலத்தை அழிக்காமல் அதாவது மரணம் அடையாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே வள்ளலாரின் முக்கிய நோக்கமாகும் புதிய பொதுக் கொள்கையாகும்*
*மரணத்தை வென்றவனே சாகாதவன்* *மீண்டும் பிறப்பு இறப்பு அற்றவன்*. *சாகாதவனே சன்மார்க்கி என்று பட்ட பெயர் சூட்டியுள்ளார்.* *மரணத்தை வென்றவனையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்*
சன்மார்க்கத்தை பின்பற்றும் அன்பர்கள் இன்னும் வள்ளலார் கொள்கையை முழுமையாக சரியாக முறையாக தெளிவாக புரிந்து தெரிந்து அறிந்து கொள்ளாமலும் அகம் புறம் முதலிய ஒழுக்கத்தை கடைபிடிக்காமலும் இருப்பதால் *சுத்த மெய் அறிவு* வெளிப்படாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும் முடியாமல் அருளைப் பெறவும் முடியாமல் அழிந்து கொண்டே உள்ளார்கள்*
*ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மாவின் உள் இருக்கும் சுத்த மெய் அறிவு வெளிப்பட வேண்டும்* *சுத்த மெய் அறிவு வெளிப்பட்டால் மட்டுமே வள்ளல்லாரைப்போல் உண்மையை உணர்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்லமுடியும்*
மனிதர்கள் இந்திரிய கரணங்களில் உள்ள *மனம் புத்தி சித்தம் அகங்காரத்தில்* வாழ்ந்து கொண்டுள்ளார்கள். *ஜீவன் ஆன்மாவில் உள்ள சுத்த மெய் அறிவைத் தொடர்புகொண்டு வாழ்வதில்லை*.
*அதனால் உண்மை வெளிப்பட வாய்ப்பில்லாமல் பொய்யை நம்பி பொய்யிலே வாழ்ந்து அழிந்துகொண்டு உள்ளார்கள்*
*எனவே சன்மார்க்கத்தை பின்பற்றும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய சகோதரர்கள் இனிமேலாவது ஆன்மாவின் உள்ளே உள்ள சுத்த மெய்அறிவைத் தொடர்புகொள்ள வேண்டும்*
*சுத்த மெய்அறிவை தொடர்புகொள்ள தடையாக இருப்பது என்ன என்பதை சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் தெளிவுப்படுத்துகிறார். அவற்றை பின்பற்றினால் மட்டுமே உண்மை வெளிப்படும்.*
*அவற்றை ஊன்றி கவனித்து படித்து உணர்ந்து கொள்ள வேண்டும் !*
*எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !*
*இதுதொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்*
*வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும். எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செயதல் வேண்டும்*
*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும் என மனித குலத்திற்கு சொல்லிக்கொடுக்கிறார் வள்ளலார்.*
*வள்ளலார் பாடல் !*
அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !
*ஆன்ம அறிவைக் கொண்டு சுத்த மெய்அறிவைத் தொடர்பு கொள்ளும் போது அருளின் உருவம் தெரியும்*
*அடுத்த பாடல்*
அருளாலே அருள்இறை அறிகின்ற பொழுது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திருநட இன்பம் என்று அறியாயோ மகளே !
அருளைக் கொண்டு அருளை அறிகின்ற போதுதான் இறைவனின் திருநட இன்பத்தை காணமுடியும் என்கிறார்
*என்று இப்படி ஒரு உயர்ந்த அனுபவத்தை உலகத்தில் எவராலும் சொல்ல முடியாது*
*ஆன்ம அறிவை அறிதலே சுத்த மெய் .அறிவு என்பதாகும்*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு