வெள்ளி, 5 மே, 2023

இதுவரையில் எவரும் தேரவில்லை !

 *இதுவரையில் எவரும் தேரவில்லை !* 


*வள்ளலார் உலகிற்கு வகுத்து தந்த பொது நெறியான சுத்த சன்மார்க்க தனிநெறிக் கொள்கைகளை  இதுவரை ஒருவரும் பின் பற்றியதாக தெரியவில்லை.அவரவர் விருப்பம்போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.ஆதலால் இதுவரையில் ஒருவரும் தேரவில்லை.* 


*வள்ளலார் காலத்திலும் எவரும் சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பின் பற்றவில்லை.இன்று வரையிலும் ஒருவரும் பின் பற்றவில்லை* 


*நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்றார் வள்ளலார்!*


*சன்மார்க்க சங்கத்தின் தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*வள்ளலாரே சொல்கின்றார்!*


செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்

சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - 


*சுத்தசிவ*

*சன்மார்க்க சங்கத் தலைவனே* நிற்போற்றும்

என்மார்க்கம் நின்மார்க்கமே !.


என்றும் மேலும்!


உலகமெலாம் போற்ற ஒளி வடிவனாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன் என


*நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.!


*என்றும், சுத்த சன்மார்க்கத்திற்கு தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும்.சுத்த சன்மார்க்க சங்கத்தை வழிநடத்தும் பொருப்பை நானே( வள்ளலார்) நடத்துகின்றேன் என்றும் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்*


*ஆனால் நாம் ஒவ்வொருவரும் சன்மார்க்க சங்கத்தை தாமே நடத்துவது போலவும், தாம் இல்லை என்றால் சன்மார்க்க சங்கம் செயல்படாது  என்பது போலவும்,அவரவர் ஆணவத்தின் செயலால், கற்பனையில் வாழ்ந்து செயல்பட்டு கொண்டுள்ளோம் என்பதை நன்கு சிந்தித்து செயல் பெறல் வேண்டும்.மேலும் உண்மை விளக்கம் பெறல் வேண்டும்*


*நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லுகின்றார் !*


*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டிராதீர்கள் என்று மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்*  


*நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக்கொண்டிருக்கின்ற அழுத்தமான அசுத்த மாயா திரைகள்,மற்றும் சுத்த மாயாதிரைகள் நீங்க வேண்டும் என்கின்ற நன் முயற்சியுடன் இருங்கள் என்கின்றார்.திரைகள் நீங்கினால்தான் அறிவு விளக்கமும், அருள் விளக்கமும் வெளிப்படும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்*


*அப்படிப்பட்ட அழுத்தமான திரைகள் நீங்க வேண்டும் என இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் இடமான நமது சிரநடு ஆன்ம சிற்சபையின் கண்ணே நமது மனத்தை இடைவிடாது தொடர்பு கொண்டு, ஸ்தோத்திரத்தும்,தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக,இருக்கின்ற போதும்,படுக்கின்றபோதும் இடைவிடாது இவ் விசாரத்தோடு,,,ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற நன் முயற்சியுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் என்கின்றார்*


*மேலே கண்டவாறு வள்ளலார் சொல்லியவாறு இதுவரையில் சன்மார்க்கிகள் யாராவது கடைபிடித்தது உண்டா? உண்மையைத் தெரிந்து கொண்டது உண்டா ? ஆன்மாவைக் கண்டதுண்டா ? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்*


*ஆன்மாவைத் தொடர்பு கொள்வதற்கும்  அருளைப் பெறுதற்கும் எவை எவை தடையாக இருக்கின்றது என அறிந்து அவற்றை எல்லாம் விட்டு விலகவேண்டும் என்கிறார்*


*வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனிக்க வேண்டும்!*


*சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.* 


*அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் ? நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன்*


*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.*


*ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்?*


*தயவு,தயவு என்னுங் கருணைதான்  தூக்கிவிட்டது என்கிறார், தயவு தானே வராது*


*அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்..* 


*ஒருமை என்றால் என்ன ?*


*ஆன்மாக்கள் எல்லாம் ஒரேத் தன்மையுடையது,இயற்கை உண்மை யேக தேசங்கள் என்னும் சகோதரர்களாதலாலும், ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் உண்மையை உணர்ந்து கொள்வதே ஒருமை என்பதாகும்* 


*நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்ம லாபமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அன்றி வேறில்லை.*


*அருளைப் பெறுவதே சுத்த சன்மார்க்க கொள்கை யாகும்,அருள் பெற்றால் மட்டுமே சுத்ததேகம், பிரணவதேவம்,ஞானதேகம் என்கின்ற மூன்று வகையான தேக மாற்றம் உண்டாகும், அருள் தேகம் என்னும் ஞானதேகம் பெறுவதே,பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்,அதுவே ஆன்ம இன்ப லாபம் என்பதாகும்*


*உண்மை சொல்ல வந்தன்னே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை என்று வள்ளலார் மிகவும் வேதனைப் படுகின்றார்.*


*வள்ளலார் பாடல்!*


சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே


வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்

விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்


செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே

தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்


ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.! 


*என் வார்த்தைகள் யாவும்  உண்மையானது என்கின்றார்*


*மேலும் இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.ஆதலால் நாம் எல்லவரும்,இதுவரையில் இருந்தது இனியும் வீண்காலம் கழிக்காமல், இப்போதே விசேஷ நன் முயற்சியுடன் இருந்தால், ஆண்டவர் வருகின்ற போது ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கின்ற திரைகள் யாவும் விலகிவிடும்.திரைகள் நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான் (ஐந்தொழில்)*


நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்!


*இப்போதே நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவாய், உண்மை அனுபவமாய் விசாரம் செய்து கொண்டிருங்கள்,அவசியம் இதற்குக் காரணமான தயவு இருக்க வேண்டியது,அந்த தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும்.இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள்*


*இது சத்தியம்,சத்தியம்,சத்தியம் இது ஆண்டவர் கட்டளை*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளைபடி வாழ்க்கையில் கடைபிடிப்பவர்களே சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பெறும் தகுதி பெற்றவர்களாவார்கள்.மரணத்தை வெல்லும் தேர்ச்சி பெற்றவர்களாவார்கள்*


*வள்ளலார் பாடல்!*


ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்

*அகங்காரப் பேய்பிடித்தீர்* ஆடுதற்கே அறிவீர்


கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ

கூற்றுதைத்த சேவடியைப் போற்ற விரும் பீரே


வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்

வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்


சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற

தருணம்இது சத்தியஞ் சிற் சத்தியைச்சார் வதற்கே.! 


*சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள்!*


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*


*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.*


*எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!*


*தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!*


தொடரும்....


எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா* ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு