வியாழன், 14 ஜூலை, 2022

உயிர்ப்பிணி !

 *உயிர்ப்பிணி!*


*வள்ளலார் வரிகள்!*


உடற்பிணி யனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையு

மடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே! (அகவல்)


உடலுறு பிணியால் உயிர் உடல் கெடாவகை

அடலுறக் காத்தருள் அட்பெருஞ் ஜோதி!(அகவல்)


மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே! (அகவல்) 


*உடற்பிணியை போக்க மருந்து கண்டுபிடித்து உள்ளார்கள் .உயிர்பிணியைப் போக்கும் மருந்தை வள்ளலாரைத் தவிர வேறு எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை*


ஞானசரியை!


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

*மரணமெனும் பெரும்பாவி* வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை*


எற்றிநின்று தடுக்கவல்லார் *எவ்வுலகில் எவரும்*

*இல்லைகண்டீர்* சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்


பற்றியபற் றனைத்தினையும் பற்றற

விட்டு *அருள அம்பலப்பற்றே* பற்றுமினோ எற்றும்இற வீரே.! 


மேலும் 


இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


*சிறந்திடுசன் மார்க்கம் ஒன்றே *பிணிமூப்பு மரணம்*

*சேராமல் தவிர்த்திடுங்காண்* தெரிந்துவம்மின் இங்கே


பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 

  

*மேலே கண்ட பாடல்கள்போல் ஆயிரக் கணக்கான பாடல்களைத் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்* *அப்பாடல்களில்,, எவற்றை விட வேண்டும்,எவற்றை பின்பற்ற வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார்*


*சட்டத்தை கிழித்தவர்!*


*பிறந்தவர் இறந்துதான் ஆகவேண்டும் இறந்தவர் மீண்டும் பிறந்துதான் ஆகவேண்டும் என்ற ஒரு சட்டம் இவ்வுலகில் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளன. அது இயற்கையான சட்டம் அல்ல, செயற்கையான சட்டம் என்பதை தெரிந்து கொண்ட வள்ளலார், அந்த சட்டத்தையே மாற்றி திருத்தி அமைக்கின்றார்*


*வள்ளலார் பாடல்!* 


கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்

கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்


*சட்டமும் கிழித்தேன்* *தூக்கமும் துறந்தேன்*

*சாவையும் நோவையும் தவிர்ந்தேன்*


சிட்டமும் அடைந்தேன் *சிற்சபை உடையான்*

*செல்வமெய்ப் பிள்ளை* என்று ஒரு பேர்ப்


*பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்*

*பண்ணிய தவம்பலித் ததுவே.!*


*என்ற பாடல் வரிகளிலே பிறவிச் சட்டத்தை கிழித்து,புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளேன் என்பதை தெளிவாக எளிய தமிழில் தெரியப் படுத்தியுள்ளார்*


*மரணம் வருவதற்கு அடிப்படை காரணம், மனித வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய  ஒழுக்கத்தை ஒருவரும் கடைபிடிக்காமல் வாழ்ந்து வருவதால் உடம்பிற்கும் பிணி தொற்றி,பின்பு உயிருக்கும் பிணிதொற்றி, அப்பிணியை தீர்க்க முடியாமல் இறுதியில் உயிரும் உடம்பும் தனித்தனியே பிரிந்து விடுவதே மரணப் பெரும் பிணியாகும்*


*இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இயற்கை விளக்கம் என்னும் அருள் சத்தியால் அதாவது அருள் ஆற்றலால், ஆன்மாவிற்கு தேவையான உயிரைக் உண்டாக்கி, உயிர் இயங்குவதற்குண்டான அணுக்களால் பிண்ணப்பட்ட உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக்கொடுத்து, உடம்பு உயிர் ஆன்மா மூன்றும் பிரியாமல் வாழ்வதே இயற்கை இன்பம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்* 


*பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்ட பூதகாரிய உடம்பில் நீண்ட காலம் வாழ்வது மரணம் இல்லாப் பெருவாழ்வு அல்ல.*  


*அழியும் உடம்பை, சுத்த, பிரணவ, ஞான தேகம் என்று சொல்லப்படும் ,  என்றும் அழியாமல் இயங்கும் அருள்தேகமாக (ஒளிதேகம்) மாற்றி வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்*


*இந்த உண்மை தெரியாமல் ஆன்மீக அருளாளர்கள்,மனித குலத்திற்கு தவறான வழிகளைக் காட்டியதால், அவற்றை பின்பற்றி மனிதகுலம் வாழ்ந்து கொண்டு உள்ளதால், மரணம் என்னும் பெரும் பிணி,பெரும்பாவி பற்றிக்கொண்டு மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள், மீண்டும் மீண்டும் எதாவது ஒரு பிறவி எடுத்துக் கொண்டே உள்ளார்கள்.*


*மருந்து கண்டு பிடித்தவர் வள்ளலார்*!


*வள்ளலார் பாடல்!*


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி


நோவது இன்று புதிதன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி


ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.! 


சாவதும் பிறப்பதும் தொடர்ந்து கொண்டே இருப்பது பெரும் பாவச்செயல் என்கிறார் வள்ளலார். அந்த பாவச்செயலை அகற்றுவதற்காகவே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் வள்ளலார் தோற்றுவித்துஉள்ளார்.*  


*சங்கத்தின் தலைவரான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் என்னும் ஞானமருந்தை பெற்று உட்கொண்டால் மட்டுமே மரணப் பெரும்பிணியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார். மற்றைய இறைவர்களை (கடவுள்களை) நம்பினால் அருள் பெறும் வாய்ப்பை இழந்து இறப்பும் பிறப்பும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார் வள்ளலார்*


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்* *மேன்மை நிறைந்த*

*ஜீவகாருண்ய ஒழுக்கமான* இந்திரிய,கரண,ஜீவ,ஆன்ம ஒழுக்கங்களையும், *அவற்றின் கொள்கைகளையும், சட்ட திட்டங்களையும் முழுமையாக பின்பற்றாமல் வாழ்வதால் மரணம் வந்து கொண்டே உள்ளன.*


தவத்திரு ஊரன் அடிகளுக்கும் மரணம்!


*மேலும் மக்களுக்கு நீண்ட காலமாக சன்மார்க்க ஆன்மீகத்தை  வெளிநாடுகளிலும் உள் நாட்டிலும், மேடைகள் தோறும் மக்களுக்கு போதித்து வந்து கொண்டிருந்த   வடலூர் தவத்திரு* 

*ஊரன்அடிகள்  போன்ற மூத்த சன்மார்க்கிகளும். மற்றைய சன்மார்க்க அன்பர்களும் உயிர் அடக்கம் கொண்டு மாண்டு கொண்டேதான் உள்ளார்கள்.* 


*முத்தியும் பெறவில்லை,*சித்தியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.* 


*முத்தி என்பது முன்னுறு சாதனம்,சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்பார் வள்ளலார்*


சன்மார்க்கத்தை பின்பற்றும் இவர்கள் *ஏன் ? எதனால் இவர்கள் உயிர் அடக்கம் கொண்டு மாண்டுபோனார்கள் என்பதை சிந்தித்து உற்று நோக்கி, உலகயலில் உள்ள பற்றுகளை அகற்றி, விட வேண்டியதை விட்டு விலக வேண்டும், ஆண்டவரிடத்தில் இடைவிடாது தொடர்பு கொண்டு பெற வேண்டியதைப் பெற்று கொள்ள வேண்டும்.* 


அவற்றை எல்லாம் பின்பற்ற தவற விட்டதினால்,

ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாமலும்  அருள் பெற முடியாமலும் மரணம் வந்து விடுகிறது. 


*வள்ளலாரே சொல்கின்றீர்!*


உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன் அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்


*கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்*

*கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ*


சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


*இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்*

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!


*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்பதை மிகவும் அழுத்தமாக சொல்கின்றார்*


மேலும் சொல்லுகிறார்! 


*முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்*

முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே


*இயன்றஒரு சன்மார்க்கம்* *எங்குநிலை பெறவும்*

*எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்*


துயின்றுணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்ற எழு கின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்


*பயின்றறிய விரைந்து வம்மின் *படியாத படிப்பைப்*

*படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!*


*இதுவரையில் படியாத படிப்பை படித்து உணர்ந்து தெளிந்து வாழ்ந்து பூரண அருள் பெற்று தேர்ச்சி பெற்று மரணத்தை வெல்லலாம் வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்* 


*பற்றிய பற்று அனைத்தினையும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்ற உண்மையைப் போட்டு உடைக்கின்றார்* 


மேலும் சொல்கின்றார்! 


*கண்டதெலாம் அநித்தியமே* *கேட்டதெலாம் பழுதே*

*கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே*


உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் *இதுவரையும் உண்மையறிந் திலிரே*


விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

*மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து* *மெய்ப்பொருள்நன் குணர்ந்தே*


*எண்டகுசிற் றம்பலத்தே* *எந்தைஅருள் அடைமின்*

*இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!* 


*இன்பமுற்று வாழ்வதற்கு எல்லாம் வல்ல இயற்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். அவரைத் தொடர்பு கொண்டு பூரண அருள் பெறல் வேண்டும். அருள் பெறுவதற்கு ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.*

 *அருளைப்பெற்றால் மட்டுமே உடற்பிணி அனைத்தையும் உயிர்பிணி அனைத்தையும் நீக்கி, நரை திரை பிணி மூப்பு பயம் இல்லாமல் மரணத்தை வெல்லலாம் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்*


அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை

அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு