செவ்வாய், 24 மே, 2022

தருமச்சாலையின் உண்மை விளக்கம் !

 *தருமச்சாலையின் உண்மை விளக்கம் !*


*வள்ளலார் பாடல்!*


என்பாட்டுக் கெண்ணாதது எண்ணி இசைத்தேன் என் தன் பாட்டைத்ச் சத்தியமாத் தான் புனைந்தான் முன்பாட்டுக்


காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்சாலையிலே வா என்றான் தான்! 


*என்ற பாடலின் உண்மை விளத்தினைத் தெரிந்து கொள்வோம்.*


 *உலக மக்களை திருத்தி உண்மையை போதிப்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்  வள்ளலார்.*


*வள்ளலார் இவ்வுலகிற்கு வந்ததும் மக்களுக்கு உண்மையை போதிக்க வேண்டியது தானே என்று கேட்கலாம்! ஆனால் எடுத்தவுடனே உண்மையை போதிக்கவில்லை போதித்தால் மக்கள் ஏற்றுக். கொள்ள மாட்டார்கள்.*


*ஏன் என்றால்? மக்கள் சாதி சமய மதங்களிலே அளவில்லா பற்று வைத்து பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள்.  அவ்வாறு வாழ்ந்து வருபவர்களிடம் எடுத்தவுடனே உண்மையை எடுத்துச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற சூழலை அறிந்து கொண்ட வள்ளலார் அவர்கள் பின்பற்றிய சாதி சமய மதங்களில் தானும் பின்பற்றுவது போல் எல்லோரையும் நம்ப வைத்து அவர் பின்னாடி மக்கள் சுற்றும் அளவிற்கு வள்ளலார் தன்னுடைய 40 ஆண்டுகளாக சமய மத வாதியாகவே நடித்துக் கொண்டு வந்துள்ளார்.* 


வள்ளலார் பாடல்!


*படித்தேன்பொய் உலகியனூல்* எந்தாய் நீயே

படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை


ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்

உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்


பிடித்தேன் மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்

பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல


*நடித்தேன்* எம் பெருமான் ஈ தொன்றும் நானே

நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ! 


*மேலே கண்ட பாடலில் நடித்தற்கு உண்டான விளக்கம் தருகிறார்*


*மேலும் சமய மதம் சார்ந்த அருளாளர்கள் இயற்றிய பக்தி பாடல்களை விட அதிகமான தத்துவ தெய்வங்களான எல்லா தெய்வங்கள்  பற்றியும். தத்துவ நாயன்மார்கள் பற்றியுமான கருத்துக்களையும் பாடல்களாக எழுதி படைத்து இயற்றி உள்ளார். மக்கள் அப்பாடல்களை இடைவிடாது பாடுவதும் போற்றவும் செய்தனர்*


 *எல்லா ஆலயங்களிலும் வள்ளலார் பாடல்கள் ஒலித்தன.* 


*வள்ளலாரின் மாற்றம்!* 


*வள்ளலார் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  உண்டாக்குகிறார்.*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார்? என்பது சிறுவயதில் இருந்தே வள்ளலாருக்குத் தெரியும்.* வள்ளலாரின் உண்மை உலக மக்களுக்குத் தெரியாது. 


தருமச்சாலை வழியாகத்தான் இறைவனைக் காண வரவேண்டும் என்று வள்ளலாருக்கு ஆணையிடுகிறார்!


ஆணையை ஏற்று 

*1865 ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று ஒரு தனி மார்க்கத்தை தோற்றுவிக்கிறார்.*


*ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் புதிய வழியான புதிய மார்க்கத்தை   தோற்றுவிக்க ஆண்டவர் ஆணை பிறப்பிக்கின்றார்.*


*ஜீவர்களுக்கு ஜீவர்களால்  உண்டாகும் துன்பங்களை போக்குவதால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொள்ளமுடியும்  அருளைப் பெற முடியும். எனவே  ஜீவகாருண்யமே சிறந்த வழி என்றும். ஜீவகாருண்ய ஒழுக்கமே சிறந்த ஒழுக்கம் என்றும் மக்களுக்கு தெரிவிக்கவே முதன் முதலில் வடலூரில் 23-05-1867 ஆம் ஆண்டு பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாளில் தருமச்சாலையை நிறுவினார்கள்*


*வள்ளலார் தருமச்சாலையைத் தோற்றுவித்து அங்கே வருகின்ற  ஆதரவு அற்றவர்கள் மற்றும்  ஏழை எளிய மக்களின் பசிப்பிணயைப் இடைவிடாது போக்கிக் கொண்டு்ம் வருகின்றது.* 


*மேலும் பசியோடு வருபவர்கள் யாராக இருந்தாலும் சாதி சமயம் மதம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் பசியைப் போக்கிக் கொண்டு வருவதே   தனிச் சிறப்பு அம்சமாகும்.*  


*மேலும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற ஒரு நூலை தெளிவான விளக்கத்துடன் எழுதி வெளிப் படுத்துகின்றார்*

*அந்த நூலில் கேள்வியும் நானே.பதிலும் நானே என்ற பாவனையில் அவரே கேள்விகேட்டு அவரே பதில் சொல்வது போல் அமைந்து இருக்கும்* 


*கடவுள் வழிபாடு !*


*அதில் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும் எழுதியுள்ளார். அதன் உள்அர்த்தம் என்னவென்றால் ஜீவகாருண்யம் செய்யாமல் கடவுளை வழிபாடு செய்பவர்கள் அறிவு விளக்கம் இல்லாதவர்கள் என்பது பொருளாகும்*


*மேலும் ஒரு தெளிவான விளக்கத்தையும் தருகின்றார் வள்ளலார்!*


*ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் ஞானம்.யோகம்.தவம்.விரதம்.ஜெபம்.தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளுக்குச் சிறிதும் பாத்திரம் ஆகார்கள்.*


*அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கப்படாது.ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோஜனம் இல்லாத மாயா ஜாலச் செய்கைகளே யாகுமென்று அறிய வேண்டும் என்று தெளிவுப். படுத்துகின்றார்*


*மேலும் அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு.*


*ஜீவகாருண்யம் என்பது ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் அல்லது ஆன்மாக்களின் தயவு*


*ஆதலால் ஒருமைக் கரணமாகிய  சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும்.சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் போல் என்று அறிய வேண்டும் என்ற எளிமையான விளக்கத்தை தெரிவிக்கின்றார்*


*மேலும் ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் என்றும்*


*ஜீவகாருண்யம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும் .அதனால் உபகாரசத்தி மறையும்.உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும் என்கிறார்*


*மேலும். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பதையும் புதிய கோணத்தில்  தெளிவு படுத்துகிறார்*.


சமய மதவாதிகளின் எதிர்ப்பு ! 


*இந்த உண்மையை வெளிப்படுத்திய காரணத்தினால்.சமய மதங்களின் எதிர்ப்பான கொள்கைகள் என்பதை அறந்துகொண்டு   சமய மதவாதிகள் வள்ளலார் மீது வெறுப்பை காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள்.*


*வள்ளலார் எழுதிய அருள் நூலுக்கு  திருஅருட்பா என்ற  பெயரைச் சூட்டினார்கள் அவருடைய அனுக்கத் தொண்டர்கள்.*


அதனால்  *அருட்பா மறுட்பா போராட்டம் மஞ்சகுப்பம் நீதிமன்றம் வரை கொண்டு சென்றார்கள்  இறுதியில் வள்ளலாரே  வெற்றி பெற்றார். அவர் எழுதிய நூலிற்கு திருஅருட்பா என்பதே சரியானதாகும் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வரலாறு  அனைவரும் அறந்ததே தெரிந்ததே.* 


சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ! 


*ஆரம்பத்தில் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்றும்.சமரச வேத தருமச்சாலை என்றும் வைத்த பெயரை மாற்றம் செய்கிறார்* 


 *1872 ஆம் ஆண்டு இயற்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வெளிப்படுத்தும் விதமாகவும் ஆண்டவர் வந்து அருள் வழங்கும் இடமாகவும் தேர்வு செய்து.*

 *வடலூர் மக்களிடம் 80 காணி இடம் பெற்று தருமச்சாலைக்கு அருகிலே  சத்திய ஞானசபையைத் தோற்றுவிக்கின்றார்.*


*ஞானசபை தோற்றுவித்த பிறகு ஞானசபை விளக்கப் பத்திரிகையின் வாயிலாக பெயர் மாற்றம் செய்கின்றார்.*


இன்றுமுதல் *சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்*


*சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்*


*சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும்*  


*பெயர் மாற்றம் செய்து இவ்வுலகிற்கு ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்து புதிய ஆன்மீக பாடதிட்டத்தை கொண்டு வருகிறார்* 


*சாகாதகல்வி!*


*வள்ளலாரின் கொள்கையிலே முதன்மையானது முக்கியமானது சாகாக்கல்வி என்பதாகும். சாகாக்கல்வி கற்று அருளைப்பெற்று மரணத்தை வென்று  வாழ்வதே  சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*

*சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படையானதும் முதன்மையானதும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் ஜீவகாருண்ய ஒழுக்கமாகும் என்பதை உலகிற்கு காட்டியவர் வள்ளலார்.*


*25-05-2022 ஆண்டு வைகாசி 11 ஆம் நாள்  தருமச்சாலை தோற்றுவித்து 156 ஆண்டுகள் ஆகிறது. வள்ளலார் ஏற்றிவைத்த தருமச்சாலையின் அடுப்பு அணையா அடுப்பாக  தொடர்ந்து மக்களின் பசிப்பிணியை போக்கிக்கொண்டு வருகிறது.*


*இந்நாளை சன்மார்க்க அன்பர்கள் தருச்சாலை விழாவாக போற்றி மகிழ்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.* 


*சுத்த சன்மார்க்க சங்க கொள்கைகள் !*


1. கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! 


2. அவரை உண்மை அன்பால் வழிபட வேண்டும்!


3. சிறு தெய்வ வழிபாடு கூடாது !


4.தெய்வங்கள் பெயரால் உயிர்பலி கூடாது !


5.புலால் ( மாமிசம் ) உண்ணலாகாது ! 


6. சாதி சமயம் மதம் போன்ற எவ்வித வேறுபாடுகளும் கூடாது ! 


7.எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும்! 


8.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டில் திறவுகோல் ! 


9.புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாது ! 


10.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது ! 


11.கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.


12. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது ! மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது ! 


13.எதிலும் பொது நோக்கம் வேண்டும் ! 


*மேலே கண்ட கொள்கைகளை கடைபிடிப்பவர்களே சுத்த சன்மார்க்கிகள் ஆவார்கள்* 


சுத்த சன்மார்க்கத்திற்கு

அடிப்படையானதும் முதன்மையானதும்  வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த *சமரச சுத்த சன்மார்க்க சத்திய  தருமச்சாலை* என்னும் 

ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்*

 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


 அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு