அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 6 ஜூலை, 2021

குழந்தை பாக்கியம் உண்டானது !

 *குழந்தை பாக்கியம் உண்டானது*!

புதுச்சேரிக்கும் மஞ்சகுப்பத்திற்கும் இடையில் சுங்கம் வசூல் செய்யும் ரெட்டிச்சாவடியில் அமீனாக பணிபுரிந்தவர் *மாயூரம் சிவராமய்யர்* என்பவராகும்.

அவருக்கு நிறையசொத்து பெரிய பங்களாவீடு பொருள் நிறைந்தவர்.வசதி வாய்ப்புக்கள் நிறைய இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாக்குறையால் அவரும் அவரதுமனைவியும் மிகவும் வருந்தினர்.

மனவிக்கு *கிரகதோஷம்* உண்டு என ஜோதிடரும் மற்றும்  பலர் சொல்லவும் பலபல பரிகாரங்கள் செய்தும் குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை.

வடலூர் வள்ளலாரிடம் சென்று உங்கள் குறையை சொல்லுங்கள் என அன்பர்கள் சொல்லவும் சிவராமய்யரும் அவர்மனைவியும் வடலூருக்கு வந்து *வள்ளலாரிடம் விண்ணப்பித்தனர்*

*அன்னசத்திரம் கட்ட சொல்லியது*

பண்ருட்டிக்கும் வடலூருக்கும் மத்தியில் *பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள கன்றகோட்டைப் புலவனூரில் ஒருசத்திரம் கட்டி அன்னதானம் செய்யுங்கள்* என்று ஆணை இட்டார் வள்ளலார்.

*அவ்வாறு செய்தால் ஒரு அழகான  ஆண்மகன் பிறப்பான் என்றார் வள்ளலார்*.

வள்ளலார் சொல்லியவாறு சிவராமய்யரும் மனைவியும் *சத்திரம் கட்டி அன்னதானத்தை மகிழ்ச்சியுடன் சிறப்பாக செய்தார்கள்.*

*வள்ளலார் சொல்லியவாறே அழகான ஆண்குழந்தை பிறந்தது வாரிசு இல்லாக்குறை தீர்ந்தது*.

*வள்ளலாரை சோதிக்க வந்த சாஸ்திரிகள்!*

ஒருநாள் சாஸ்திரிகள் நால்வர் *சாமவேத்த்தில்* உள்ள ஒரு குறிப்பிட்ட பாகத்தில்  கேள்விகேட்டு

வள்ளலார்ரைச் சோதிக்க எண்ணி வடலூர் வந்து சேருகின்றனர்.

அச்சமயம் வள்ளல்பெருமான்.  *சாமவேதத்தில் அவர்கள் எண்ணிய பாகத்தையே பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார்.*

சாஸ்திரிகள் வள்ளலாரின் பூரண ஞானத்தை அறிந்து வியந்து பாராட்டி இன்பக்கடலில் மூழ்கினர். *என்ன புண்ணியம் செய்தோமோ*  என  ஆனந்தம் அடைந்தனர்.  பின்பு வணங்கி ஆசிபெற்று சென்றனர்.

*வள்ளலார்பாடல்!*

*அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்*

*ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்*

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றேஎந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

*தப்பேது நான்செயினும் நீபொறுத்தல்* *வேண்டும்*

*தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே*.!

*வள்ளல்பெருமான் அவர்கள் சாதி சமயம் மதம் என்ற பேதம் இல்லாமல் தன்னைத் தேடிவரும்  மனிதர்கள் அனைவருக்கும்*

*எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமலும்.சித்து வேலைகள் செய்யாமலும் முறையான செய்யத்தகுந்த வழியைக்காட்டி நன்மைசெய்து*.

*துன்பம் தொலைத்து  இன்பம் அளித்து அனுப்புவதே குறிக்கோளாகவும் லட்சியமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்*

அதேபோல் எல்லா உயிர்களிடத்தும்  அன்பு தயவு கருணைகாட்டி *உயிர்இரக்கமே வாழ்க்கையின் முழுமூச்சாக கொண்டு எவ்வித பேதமும் இல்லாமல் தம்உயிர்போல்  நேசித்து பாராட்டி வாழ்ந்துள்ளார்*.

ஆதலால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு *பூரண அருள்வழங்கி ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி முத்தேக சித்தியை வழங்கினார்*.

மேலூம் *மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து பேரின்ப சித்திப்பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்*

உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களாகிய நாம் வள்ளலார்போல் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக