*போட்டோவிற்குள் அடங்காத வள்ளலார்!*
வள்ளலார் புகழ் தமிழ்நாடு எங்கும் புகழ்பெற்று விளங்குகின்ற காலம்.
வள்ளலார் திருஉருவத்தைப் புகைப்படம் எடுக்க விருப்பம் கொண்ட சென்னை அன்பர் புகழ்பெற்ற புகைப்படக்காரர் *மாசிலாமணிமுதலியார்* அவர்கள் புகைப்பபடம் எடுத்தார் வள்ளலார் திருஉருவம் விழவில்லை.
மீண்டும் எட்டுமுறை தொடர்ந்து புகைப்படம் எடுத்தார்.
*வள்ளலார் திருமுகமும் திருக்கரங்களும் திருவடிகளும் புகைப்படத்தில் விழாமல்* *வெள்ளைவேட்டி மாத்திரம் விழுந்ததைக்கண்டு* *அதிர்ச்சியுடன் அற்புதத்தைக்* *கண்டு மனம்* *நெகிழ்ந்து**போனார்*.
*வள்ளலாரின் அருள் உடம்பு (ஓளிஉடம்பு) ஆதலால் புகைப்படத்தில் விழவில்லை. என்பதை உணர்ந்த வள்ளலாரின் மாணாக்கர்கள் வேலாயுதனார் இரத்தினம். போன்ற அன்பர்களும் மேலும் மக்களும் வள்ளலாரைப் போற்றி புகழந்து கடவுளாகவே துதிக்க மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்*.
*பொன்னான உருவத்தை மண் உருவமாக்கியது!*
வள்ளலார் மீது பேரன்புகொண்ட குயவன் ஒருவன் பண்ணுருட்டியில் வாழ்ந்துவந்தான் அவன் வள்ளலாரின் திருஉருவத்தை மண்ணால் அமைத்து உரிய வர்ணங்களைத் தீட்டி பாதுகாப்பாக கொண்டுவந்து *வடலூர் தருமச்சாலையில் இருந்த வள்ளலாரிடம் கொடுத்தார். வள்ளலார் அந்த மண்பொம்மையை பெற்றுக்கொண்டு தருமச்சாலைக்கு வெளியே வந்து *பொன்னான மேனி மண்ணாயிற்றே* என்றுகூறி இருகையையும் விட்டுவிட்டார்.
*அந்த மண்பொம்பை கீழே விழுந்து தூளாகியது*.
*பின்பு வள்ளலார் உருவம் செய்வதை நிறுத்திவிட்டனர்*.
வள்ளலார் சித்திபெற்ற பிறகு மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவன். வேறு ஒரு வள்ளலார் உருவம் அமைத்தான்.அந்த உருவத்தில் இருந்து தான் பலவிதமான உருவங்கள் புகைப்படங்கள் எடுத்து வழக்கத்தில் வரத்தொடங்கியது.
*என்னை வணங்க வேண்டாம் என்றவர் வள்ளலார்!*
*சன்மார்க்கிகள் சொன்ன பேச்சை கேட்கவே மாட்டார்கள் என்பது வள்ளலாருக்கு முன்கூட்டியே தெரியும்*
வள்ளலார் சொல்லியதை செவிச் சாய்க்காமல் தங்கள் தங்கள் விருப்பம்போல் சன்மார்க்க சங்கங்களில் சமய மத வழிபாடுகள் போன்று *வள்ளலார் உருவத்தை வைத்தும் விபூதிபட்டை அடித்தும் மாலைபோட்டும் படையல் வைத்தும் தீபாராதனை காட்டியும் வணங்கியும் வழிபாடுசெய்து வருகிறார்கள்*.
*சாதி சமயம் மதம் போன்ற ஆச்சாரங்கள் வேண்டாம் என்று சொன்ன வள்ளலாருக்கே விபூதி பட்டையை அடித்து வழிபாடு செய்துவருகிறார்கள்.*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வழிபடுங்கள்*
*உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே*! அவரை வணங்காமல் என்னை தெய்வமாக வணங்காதீர்கள் என்று பேருபதேசத்திலும் பாடலிலும் தெளிவாக சொல்லி உள்ளார்.
*பேருபதேசத்தில் சொல்லியது*
*தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வம் எனச் சுற்றுகின்றார்கள்*.
*ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினால் அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்*.
என்று *நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன்*. *இருக்கின்றேன்*. *இருப்பேன் என தெளிவாக சொல்லி புரிய வைக்கின்றார் வள்ளலார்*.
மேலும் சன்மார்க்க அன்பர்களுக்கு பாடல் வாயிலாகவும். சொல்லுகின்றார் !
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் *உமது*
*தாள்வணங்கிச்* *சாற்றுகின்றேன்* *தயவினொடும் கேட்பீர்*
என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
*எல்லாம்செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்*
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
*புந்திமயக்கம் அடையாதீர்* பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் *சுத்தசிவம் ஒன்றே*
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!
என்ற பாடல்வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டும் வணங்குங்கள் என்று சத்தியம் வைத்து சொல்கின்றார்.
*புதியவர்கள் வருகை*
பழைய சன்மார்க்கிகள் அனைவரும் சாதி சமயம் மதம் சார்ந்தவர்கள்.
*ஆதலால் ஒருவரும் சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதியானவர்கள் அல்ல என்பது தெளிவாக தெரிகின்றது*
எனவே அருள்பெறும் வாய்ப்பையும் மரணத்தை வெல்லும் வாய்ப்பையும் இழந்துகொண்டே உள்ளார்கள்.
இனிமேல் வரக்கூடியவர்கள் சாதி சமயம் மதம் அற்ற வள்ளலாரின் சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து அருளைப்பெறும் தகுதியுடையவர்களாக வந்துகொண்டே உள்ளார்கள்.
*அருள்பெறும் வாய்ப்பை கண்டிப்பாக பெறுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்*.
*இனி சுத்த சன்மார்க்க காலம். சுத்த சன்மார்க்கத்திற்கு எவ்விதப்பட்ட தடைகளும் கிடையாது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் உலகம் முழுவதும் வள்ளலார் கொள்கைகள் நிறைந்து விளங்கும்*.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருவருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக