பாம்பிற்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்மு !
*பாம்பிற்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு!*
பாம்புக் கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி.
*வள்ளலார் பெயரைக் கேட்டாலே* பாம்பு பயப்படும் நிலை உண்டாயிற்று.
ஒருநாள் சென்னைக்கு அருகில் உள்ள *வியாசர்பாடிக்கு* நண்பர்களுடன் சென்று மாலை நேரத்தில் சொற்பொழிவு செய்துவிட்டு திரும்பும்போது.
*இரவில் பெரிய பாம்பு ஒன்று இவர்களை நோக்கி வரவே*. கூட இருந்தவர்கள் அனைவரும் பயந்து ஒவ்வொரு பக்கமாக ஓடினர்.
வள்ளல்பெருமான் எவ்வித பதட்டமும் இன்றி கருணையுடன் பாம்பை நோக்கினார். *பாம்பு வள்ளலார் காலைச் சுற்றிக்கொண்டு சிறிதுநேரம் வேண்டியது*.
யாருடைய கண்களுக்கும் தெரியாமல் செல்லும்மாறு வள்ளலார் கூறினார்.
யாருக்கும் ஊறு செய்யாது விலகிச் சென்றது.
*வாழை இலைமீது இருந்த பாம்பு*
கூடலூர் அப்பாசாமி செட்டியார் கிடங்கில் விசேடமாய் பேயன்வாழை உண்டு.பேயன் வாழை பிடிக்கும் என்பதால் அங்கு வள்ளலார் சென்றபோது இலையின் மீதுள்ள பாம்பு ஒன்று *வள்ளலார் உச்சியில் தீண்டவே சிறிது இரத்தம் வந்தது. வள்ளலார் விபூதி வைத்து அப்பினார்*.
அப்பாசாமி செட்டியார் மற்றும் அன்பர்கள் என்னவென்று வள்ளலாரைக் கேட்க *சர்ப்பம் ஒன்று தீண்டியது* அது மரணம் அடைய காலம் நெருங்கியதால் சிறிது தீண்டியது என்றார். அங்கனமே
போய்ப் பார்த்தபோது சர்ப்பம் இலைமீது மடிந்து வெளுத்து கிடந்தது.
*வள்ளலார் மீது ஆணை சொன்னது*
குறுஞ்சிபாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் செட்டியார் ஒருவர் வடலூர் வந்து வள்ளலாரைத் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை குளக்கரையில் கலாச்செடி அருகே காலைக் கடனுக்காக உட்கார ஒரு சர்ப்பம் செட்டியாரைத் தீண்ட படம் எடுத்தது. *உடனே இராமலிங்கத்தின் மேல் ஆணை* என்றார் அப்பால் அந்த பாம்பு இரை எடுக்க செல்லாமல் புற்று வாயிலில் வாயைத் திறந்தபடியே அங்கேயே அப்படியே இருந்தது.
எப்போதும்போல் செவ்வாய்க்கிழமை வள்ளலார் சொற்பொழிவு செய்யும் நேரம் செட்டியார் வடலூர் வந்தார்.
வள்ளலார் உடனே *பிச்* *ஐயோ* என்ன செய்துவிட்டீர்.
*மூன்று நாட்களாக ஓர் உயிர் பட்டினியோடு இருக்கிறது உடனே சென்று *ஆணையை விடுதலை செய்* என்று கட்டளையிட்டார்.
அவ்விதமே சென்று செய்ய பாம்பு புற்றில் நுழைந்து சென்றது.
*கனவில் வந்த வள்ளலார்.*!
கோட்டகம் என்னும் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தான் என்பவருடைய சொப்பனத்தில் ( கனவில்) வள்ளலார் தோன்றி நாளை *அரவம் தீண்டி மூன்று நாள் மயக்கம் உண்டாகும்.*
*மருந்து கொள்ள வேண்டாம் பின்பு குணமாகும் என்று தெரிவித்துள்ளார்*.
அங்கனமே வள்ளலார் சொல்லியவாறே நடந்துள்ளது.பின்பு குடும்பத்துடன் வடலூர் வந்து அன்னதானம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள்.
*வள்ளலார் பாடல்* !
பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
தீம்பலா வாழை மாத் தென்னை சிறந்தன
ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
தோம்பல் என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.!
*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைந்து வாழ்ந்த கருணைக்கடல் வள்ளல்பெருமான் ஒருவரே* *அவருக்கு நிகர் அவரே!*.
உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே !
*உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே*
*உயிர்நலம் பரவுக என்று உரைத்தமெய்ச் சிவமே*! ( அகவல்)
*வள்ளலாரைப்போல் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் தயவு கருணையுடன் வாழ்ந்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மிடம் தொடர்பு கொள்வார்*
அதன்பிறகுதான் நம்முடைய *அன்பெனும் பிடியுள்* அகப்பட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு