*வழி தப்பி போனவர்களுக்கு வழிகாட்டிய அற்புதம்* !
*வள்ளலாரைத் தேடி வடலூர் வருபவர்களுக்கு எந்த துன்பம் வந்தாலும் அவற்றை நீக்கிக் கொண்டே இருந்தார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். இப்போதும் தீர்த்துக் கொண்டே இருப்பார் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கவேண்டும்*
*வயதான கிழவிபோல் வந்தது*
பெங்களூரில் போஸ்டுமாஸ்டராக இருந்த *வேணுகோபால்பிள்ளை என்பவர்*. ஒருநாள் தாய் தம்பியர்களுடன் வடலூர் சென்று வள்ளலாரைச் சந்தித்துவிட்டு பின் சிதம்பரம் போவதாக எண்ணி வண்டியில் சென்றுள்ளார்கள்.
பின்னலூருக்குச் செல்லும் போது வழிதவறிப் போய்விட்டார்கள்.
மாலைநேரம் ஒரு அணைக்கட்டு குறுக்கிட்டதால் பெரிதும் நிலைகலங்கினர்.
*அச்சமயம் ஒரு வயதான கிழவி தோன்றி* தன்னுடன் வரும்படி அழைத்துச்சென்று அணைக்கட்டை தாண்டி *இதோ அந்த கிராமம் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.*
*ஆச்சரியம் அந்த கிராமம் வடலூர் என்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தனர்*.
வள்ளலாரைச் சந்தித்தபோது வழியில் நடந்ததை சொன்னார்கள்.
*எல்லாம் ஆண்டவர்செயல் நல்லதே நடக்கும் என்றார்*. பின்பு அவர்களை தங்கவைத்து காலையில் உணவு படைத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
*துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை*
*அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)
*சிறுவனைப் போல் வந்தது*
நாகூரிலிருந்து சுவாமிநாத செட்டியார் மற்றும் அன்பர்கள் சிலர் வடலூருக்கு வந்து தரிசித்துவிட்டு ஊருக்கு இரவில் திரும்பி உள்ளார்கள்.
அவர்கள் போகின்ற தடம் திருடர் பயம்உள்ள தடம் என்பதால்.
அதுசமயம் 16.பதினாறு வயதுடைய சிறுபிள்ளை போல் வண்டியின் பின்புறத்தே பாதுகாப்பாகச் சென்றுள்ளார்.
*வண்டியில் உள்ளோர் ஏன் பின் தொடர்ந்து வருகிறீர்கள் என கேட்க.தம்ஊர் மருதூர் எனச்சொல்லி மறைந்தனர்.*
வண்டிஉடன் பின்வந்தவர் மருதூரார் என்பவர் வேறுயாரும் இல்லை *வள்ளலாரே* என்று அறிந்து.அதுமுதல் ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் வடலூர் வந்து ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு அவ்வன்பர்கள் அன்னதானம் செய்து வருகின்றனர்.
*வள்ளலார் எந்த சித்து விளையாட்டும் செய்யவில்லை*.
*வள்ளலாருக்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே செய்த அற்புதமாகும்.*
எங்கெங் கிருந்து உயிர் ஏதெது வேண்டினும்அங்கங்கு இருந்தருள் அருட்பெருஞ் ஜோதி!
எங்குறு தீமையு மெனைத் தொடராவகைகங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே! ( அகவல்)
*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே* ! (வள்ளலார் பாடல்)
*வடலூர் செல்வோம் நல்லவரம் பெறுவோம்*.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக