அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 28 ஜூன், 2021

பாம்பிற்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்மு !

 *பாம்பிற்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு!*


பாம்புக் கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி.

*வள்ளலார்  பெயரைக் கேட்டாலே* பாம்பு  பயப்படும் நிலை உண்டாயிற்று. 


ஒருநாள் சென்னைக்கு அருகில் உள்ள *வியாசர்பாடிக்கு* நண்பர்களுடன்  சென்று மாலை நேரத்தில் சொற்பொழிவு செய்துவிட்டு திரும்பும்போது.

*இரவில் பெரிய பாம்பு ஒன்று இவர்களை நோக்கி வரவே*. கூட இருந்தவர்கள் அனைவரும் பயந்து ஒவ்வொரு பக்கமாக ஓடினர்.


வள்ளல்பெருமான் எவ்வித பதட்டமும் இன்றி கருணையுடன் பாம்பை நோக்கினார். *பாம்பு வள்ளலார் காலைச் சுற்றிக்கொண்டு சிறிதுநேரம் வேண்டியது*.

 யாருடைய கண்களுக்கும் தெரியாமல் செல்லும்மாறு வள்ளலார் கூறினார்.

யாருக்கும் ஊறு செய்யாது விலகிச் சென்றது.  


*வாழை இலைமீது இருந்த பாம்பு*


கூடலூர் அப்பாசாமி செட்டியார் கிடங்கில் விசேடமாய் பேயன்வாழை உண்டு.பேயன் வாழை பிடிக்கும் என்பதால் அங்கு வள்ளலார் சென்றபோது இலையின் மீதுள்ள பாம்பு ஒன்று *வள்ளலார் உச்சியில் தீண்டவே சிறிது இரத்தம் வந்தது. வள்ளலார் விபூதி வைத்து அப்பினார்*.


அப்பாசாமி செட்டியார் மற்றும் அன்பர்கள் என்னவென்று வள்ளலாரைக் கேட்க *சர்ப்பம் ஒன்று தீண்டியது* அது மரணம் அடைய காலம் நெருங்கியதால்  சிறிது தீண்டியது என்றார். அங்கனமே   

போய்ப் பார்த்தபோது சர்ப்பம் இலைமீது மடிந்து வெளுத்து கிடந்தது. 


*வள்ளலார் மீது ஆணை சொன்னது*


 குறுஞ்சிபாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் செட்டியார் ஒருவர் வடலூர் வந்து வள்ளலாரைத் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.


ஒரு ஞாயிற்றுக்கிழமை  விடியற்காலை குளக்கரையில் கலாச்செடி அருகே காலைக் கடனுக்காக உட்கார ஒரு சர்ப்பம் செட்டியாரைத் தீண்ட படம் எடுத்தது. *உடனே இராமலிங்கத்தின் மேல் ஆணை* என்றார் அப்பால் அந்த பாம்பு இரை எடுக்க செல்லாமல் புற்று வாயிலில் வாயைத் திறந்தபடியே அங்கேயே அப்படியே இருந்தது.


எப்போதும்போல்  செவ்வாய்க்கிழமை வள்ளலார் சொற்பொழிவு செய்யும் நேரம் செட்டியார் வடலூர் வந்தார். 


வள்ளலார் உடனே *பிச்*  *ஐயோ* என்ன செய்துவிட்டீர்.

*மூன்று நாட்களாக ஓர் உயிர் பட்டினியோடு இருக்கிறது உடனே சென்று *ஆணையை விடுதலை செய்* என்று கட்டளையிட்டார்.

அவ்விதமே சென்று செய்ய பாம்பு புற்றில் நுழைந்து சென்றது.


*கனவில் வந்த வள்ளலார்.*!


கோட்டகம் என்னும் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தான் என்பவருடைய சொப்பனத்தில் ( கனவில்) வள்ளலார் தோன்றி நாளை *அரவம் தீண்டி மூன்று நாள் மயக்கம் உண்டாகும்.*

*மருந்து கொள்ள வேண்டாம் பின்பு குணமாகும் என்று தெரிவித்துள்ளார்*.


அங்கனமே வள்ளலார் சொல்லியவாறே நடந்துள்ளது.பின்பு குடும்பத்துடன் வடலூர் வந்து அன்னதானம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள்.


*வள்ளலார் பாடல்* ! 


பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன

தீம்பலா வாழை மாத் தென்னை சிறந்தன

ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்

தோம்பல் என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.! 


*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைந்து வாழ்ந்த கருணைக்கடல் வள்ளல்பெருமான் ஒருவரே* *அவருக்கு நிகர் அவரே!*.


உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே !

 

*உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே*

*உயிர்நலம் பரவுக என்று உரைத்தமெய்ச் சிவமே*! ( அகவல்)


*வள்ளலாரைப்போல் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் தயவு கருணையுடன் வாழ்ந்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மிடம் தொடர்பு கொள்வார்* 


அதன்பிறகுதான் நம்முடைய *அன்பெனும் பிடியுள்* அகப்பட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக