*சொல்லுவோம் கேட்கத்திறம் உண்டோ!*
வள்ளலார் மேட்டுகுப்பத்தில் அமரந்திருந்தபோது ஒருநாள் *வையாகரணி தார்க்கீகியாகிய* இரண்டு *வித்வான்கள் வள்ளலாரைச் சந்தித்து *திருவாசகத்தில் முதல் அகவலுக்கு உரைசொல்ல வேண்டும் என கேட்க*
அதற்கு வள்ளலார் *சொல்லுவோம் கேட்கத்திறம் உண்டோ* என்று கூறினார்.யாவரும் சரி என்றார்கள்.மாலை நேரம்
வெளியில் வந்து அனைவரையும் அமரவைத்து சொற்பொழிவைத் தொடங்கினார்.
*பாடல்!*
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க !
என்ற வரிகளுக்கு ஒவ்வொரு வரிக்கும் தகுந்த விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.
முதல் ஒரு வரிக்கு விளக்கம் சொல்ல *இரண்டுமணி நேரம் ஆயிற்று. முதலில் ஒருசாரார் தூங்கிவிட்டார்கள்.*
இரண்டாவது வரிக்கு விளக்கம் சொல்ல *மூன்றுமணி நேரம் ஆகியது. விளக்கம் கேட்க வந்தவர்களும் மற்றமுள்ளவர்களும் தூங்கிவிட்டார்கள்*.
மூன்றாவது வரிக்கு விளக்கம் சொல்லும்போது *நான்குமணி நேரமாகியது.அதற்குமேல் உணரமுடியாமல் தொழுவூர் வேலாயுதனாரும் தூங்கிவிட்டார்கள்*.
*மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்*!
அனைவரும் தூங்கிவிட்ட பின்னும் வள்ளலார் தனிமையில் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
வேலாயுதனார் விழித்து எழுந்து பார்க்கிறார் அனைவரும் தூங்கிவிட்டார்கள்.தூங்கியது தெரியாமல் வள்ளலார் பேசிக்கொண்டே உள்ளார் என நினைத்து. *அய்யா அனைவரும் தூங்கிவிட்டார்கள் என்றார்* வேலாயுதனார்.
*பிச்* என்று கோபமாக சொன்னார் இதுசமயம் *மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் கேட்டுக்கொண்டு உள்ளார்கள்* அவர்களுக்காக பேசிக்கொண்டுள்ளேன் *அவர்கள் விழித்துக் கேட்டுக்கொண்டு உள்ளார்கள் என்று விளக்கினார்.*
*அதற்குமேல் அருள் சார்ந்த மேல்நிலை அனுபவங்களை வேலாயுதனாரும் உணர்ந்தகொள்ள முடியாதவர்* என்பதை தெளிவுப்படுத்தி புரிய வைத்தார் வள்ளலார்.
ஆண்டவர் அருள் பெற்றவர்கள் எழுதிய அருள் வாசகத்திற்கு அருள்பெறும் தகுதி உடையவரகள் மட்டுமே அதன் விளக்கத்தை எளிதில் புரிந்து அறிந்து தெரிந்து மேல்நிலைக்கு செல்லமுடியும். என்பதை வள்ளலார்.
*சொல்லுவோம் கேட்கத் திறமுண்டோ* என்று சொல்லி புரியவைத்தார்.
வந்த வித்வான்கள் தூங்கி எழுந்து மவுனமாகி வள்ளலாரை வணங்கி *நீங்கள் முழுமையான அருள்பெற்ற மகாஞானி* நாங்கள் சாதாரண வித்வான்கள். என்பதை உணர்ந்து போற்றி புகழ்ந்து வணங்கி விடைபெற்று சென்றார்கள்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.
அருளாளர்கள் அருட்பாடல்களின் விளக்கம் உலக அறிவுக்கும் பொருந்தும் அருள் அறிவுக்கும் பொருந்தும்.
ஆனாலும் *அருள் அறிவால் அறிவதே உண்மை விளக்கமாகும்*.
*வள்ளலார்பாடல்*
அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்கனுபவ மாகின்ற தென்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்*திருவருள் உருவம்* என்றறியாயோ மகளே.!
அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
கனுபவ மாகின்ற தென்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்*திருநட இன்பம்* என்றறியாயோ மகளே.!
என்னும் பாடல் வாயிலாக தெளிவுப்படுத்துகின்றார்.
*ஆன்ம அறிவைக் கொண்டு அருள்அறிவை தொடர்பு கொண்டால் அனுபவம் உண்டாகும்* பின்பு
*அருள் அறிவைக் கொண்டு கடவுள் அறிவைத் தொடர்பு கொண்டால் கடவுளின் திருநடனமும் அதன் இன்பமும் அனுபவிக்கமுடியும்.*
*வள்ளலார் பாடல்*!
சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
*வெல்லுகின்ற வார்த்தைஅன்றி* *வெறும்வார்த்தை என்வாய்*
*விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்*
செல்லுகின்ற படியேநீ காண்பாய் இத்தினத்தே
தேமொழி அப் போதெனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடி நான்
உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக