செவ்வாய், 22 ஜூன், 2021

தாசில்தார் அதிகார போதையை அடக்கிய வள்ளலார் !

 *தாசில்தார் அதிகார போதையை அடக்கிய வள்ளலார்* 


மஞ்சகுப்பம் தாலுக்கா தாசில்தாரராக பணிசெய்தவர் வெங்கடசுப்பு அய்யர். அவர் அரசு பணிக்காக  செல்லும் போது அவர் முன்பு  சக்கிலி வீரையன் என்பவர் *(சன்மார்க்கிகள் சாதி பெயர் சொல்லக்கூடாது தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக நடத்தி உள்ளார்ர்கள்)*  வளைந்த கொம்பு ஊதிக்கொண்டே முன்னாடி செல்வது வழக்கம். 


*வடலூரில் வள்ளலார் அறிவுசார்ந்த  ஆன்மீக சொற்பொழிவு செய்வது பிரபலமாக பேசப்பட்டு வந்த காலம்*. உயர்ந்தவர் தாழ்ந்தவர். ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் வள்ளலாரின் சொற்பொழிவு கேட்க வடலூரை நோக்கி மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.


 *தாசில்தார் வெங்கடசுப்பு அய்யர் அடிக்கடி வள்ளலாரின் சொற்பொழிவு கேட்க மஞ்சகுப்பத்தில் இருந்து  வடலூர் வருவது வழக்கம்.*


ஒருநாள் அவர் வண்டியில் வருகின்ற போது அவருக்கு முன்னாடி வளைந்த ஊதுகொம்பை ஊதிக்கொண்டே சக்கிலி வேகமாக வரவேண்டியதாயிற்று. *பசியின் வேதனை அந்த சக்கிலியால் தாங்க முடியவில்லை.*

*பசியால் உடம்பு முழுவதும் நடுங்கிக்கொண்டே வடலூர் வந்து சேர்ந்தான்*.


தாசில்தார் வண்டியைவிட்டு இறங்கி வள்ளலார் சொற்பொழிவு செய்யும் இடத்திற்கு எப்போதும்போல்  சென்றார். தாசில்தாரை அமரச்சொல்லும் வள்ளலார்

கொஞ்சநேரம்  கண்டும் காணாமல் இருந்தார்.


*தாசில்தார் என்ன காரணம் என்பது புரியாமல் பதட்டமாக இருந்தார்.*


பின்பு வள்ளலார் தாசில்தாரைப் பார்த்து சொல்லுகிறார்.


*இந்த வாழ்வு உமக்கு எத்தனை நாளைக்கு இருக்கும்* கொம்புக் காரனைப் போகவேண்டிய ஊருக்கு முன்னமே அனுப்பி அவ்வூருக்குச் சிறிது தூரத்தே ஊதினால் போதாதோ? என்று உயிர் இரக்கத்தோடு தாசில்தாரிடம் சொன்னார்.

தாசில்தார் நடுங்கி போய்விட்டார்.


சரி சரி கொம்புகாரன் பசியோடு இருக்கிறான் அவனுக்கு முதலில் பசியைப் போக்கிவிட்டு வாருங்கள் என்றார். தாசில்தார் பதில் சொல்ல முடியாமல் அவனை அழைத்துக் கொண்டு சென்று பசியைப் போக்கிவிட்டு வள்ளலார் முன் வந்து அமர்ந்தார். 

சொற்பொழிவு நிறைவு பெற்றது.


உயர்ந்த குலம் உயர்ந்த பதவி என்ற பெயரில் அதிகார ஆதிக்கம் ஏழை எளிய மக்களை எந்த அளவிற்கு துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதை கீழ்வரும் பாடலில் தெரிவிக்கின்றார்.


*வள்ளலார் பாடல்* !


*நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்*

கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்


*படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன்* சுத்தசன் மார்க்கம்

விடுநிலை உலக 

நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.!


என்னும் பாடலின் வாயிலாக  தன்னுடைய வேதனையை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்.


*வள்ளலாரை பார்த்து தாசில்தார். அய்யா இனிமேல் இதுபோன்ற  தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்*.

*என்னை மன்னித்து விடுங்கள் என்றார்*. எல்லோரையும் சமமாக இரக்கத்தோடு பாவிக்க வேண்டும்  என்று அறிவுரை வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார்.


*அன்றில் இருந்து தாசில்தார் அதிகார போதையில் இருந்து மீண்டார்*


*வள்ளலார் பாடல்* ! 


உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே! ( அகவல்)


மேலும்...


எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்

*பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே*

ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் என நடுக்குற்றேன்

இட்ட இவ்வுலகில் *பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.*! 


இவ்வுலகில் பசியுடன் எவரும்  எவ்வுயிரும் இருக்க கூடாது என்பதே வள்ளலாரின் உயர்ந்த உயிர் இரக்க கொள்கையாகும்.

சாதி சமய மதம் பேதமற்ற ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காகவே  *வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்துள்ளார்*. 


*பசி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக்கருவி.*

எனவே நம்முடைய ஒவ்வொருவரின் இல்லமும்  எண்ணமும் பசிப்பிணியைப் போக்குவதற்காகவே இருக்க வேண்டும். அவற்றிற்கு வள்ளலார் *ஜீவகாருண்யம் ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார்*.


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்* என்பார் வள்ளலார்.


*ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற பக்தி வழிபாடு தியானம்.தவம்.யோகம் யாவும் பிரயோசனம் இல்லாத வெற்று மாயா ஜாலங்களேயாகும் என்பார்*.


எனவே *ஜீவகாருண்யம் இயற்கையாக  இருக்க வேண்டும்*. *அதுதான் இயற்கையான கடவுள் வழிபாடாகும்*.

*அதுவே இயற்கை உண்மை ஆண்டவரிடம் அருள் பெறும் தூய்மையான நேர்வழியாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு