வியாழன், 8 ஆகஸ்ட், 2019

பிரான்ஸ் நாட்டு மக்களுக்காக !




முன்னுரை !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு விண்ணப்பம்.!

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய அனைவருக்கும் வந்தனம்.

பிரான்ஸ் நாட்டு சமரச சுத்த  சன்மார்க்க சத்திய சங்கத்தின் அன்பர்களின் வேண்டுகோளின்படி .திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள் உலக மாந்தர்களுக்கு வழங்கிய அருள் கொடையாகிய திருஅருட்பாவின் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய கொள்கைகளையும். கருத்துக்களையும் வள்ளலார் வாழ்ந்து காட்டிய வரலாறுகளையும். இந்த  சிறிய நூலின் வாயிலாக  தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

வள்ளலார் எழுதிய  அருள் நூல்கள் ஆறுதிருமுறைகளாகும்..

முதல் ஐந்து திருமுறைகள் வரை சமய மதம் சார்ந்த தெய்வங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் தழுவி  பாடப்பெற்று தன் கைப்பட எழுதி வெளியிட்டதாகும்..

ஆறாம் திருமுறை சாதி.சமயம் மதம் கடந்த இறை அருள் ஞான நூலாகும்..இதுவரை உண்மையான கடவுள் யார் என்பது  தெரியாமல் இருந்த உலக மனித சமுதாயத்திற்கு. இயற்கை உணமைக் கடவுளைப் பற்றியும். அருள் பெரும் வழிப்பற்றியும்.மரணத்தை வெல்லும் ஞானத்தில் ஞானத்தைப் பற்றியும்   தெரியப்படுத்தியும்.வெளிப்படுத்தியும்.சொல்லிய வண்ணம் வாழ்ந்தும் காட்டிய அருள் ஞானத்தின் திருஉருவே.கருஉருவே அருள் ஞானத்தின் பெட்டகமே ஆறாம் திருமுறை நூலாகும்.

வள்ளலாரின் நெருங்கிய அன்பர்கள் வள்ளலார் எழுதிய சமய மத தெய்வங்களின் மேல் பாடிய பக்திப் பாடல்களை நூல் வடிவில் வெளியிட அனுமதி கேட்கிறார்கள்  வள்ளலார் சம்மதிக்கவில்லை. அவர்களின் அன்பான வேண்டுகோளைத் தள்ளவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல்  எல்லாம் வல்ல இறைவன் செயல் .எது நடந்தாலும் நன்மைக்கே என்று ஒப்புதல் அளித்து விடுகிறார்.

வள்ளலார் மனித தேகத்தில் வாழ்ந்த காலத்தில் நான்கு திருமுறைகள் 1867 ஆம் ஆண்டு வள்ளலாரின் ஒப்புதலோடு வெளியிடப்படுகின்றன.

முதல் நான்கு திருமுறைகள் வெளிவந்த ஏழாண்டுகளுக்குப் பின் 1874 ஆம் ஆண்டு வள்ளலார் சித்திப் பெற்று ஊன  உடம்பை ஒளி உடம்பாக மாற்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன் கலந்து விடுகின்றார்..

1880 ஆம் ஆண்டு ஐந்தாம் திருமுறை வெளியிடப் படுகின்றன...

ஆறாம் திருமுறை !

வள்ளலாருக்கு இறைவன் அருளிய உண்மை சம்பவங்கள் அனைத்தும்
சாதி.சமயம்.மதம் கடந்த திரு அருட்பாடல்களே ஆறாம் திருமுறையாகும்.

வள்ளலார் மனித தேகத்தில் எழுதியது ஐந்து திருமுறைகள்..அருள் தேகத்தில் இறைவன் சொல்ல வள்ளலார் எழுதியது ஆறாம் திருமுறையாகும். அதில் தான் *நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயன் வார்த்தை என்றும் * *உண்மை உரைக்கின்றேன்* என்றும் வெளிப்படையாக சொல்லுகின்றார்..  .ஆறாம் திருமுறை எழுதிய இடம் வள்ளலார் சித்திப் பெற்ற மேட்டுக்குப்பம் என்னும் சிறிய ஊரில் அவர் தங்கி இருந்த சிறிய அரையில் தனிமையில் எழுதியதாகும்.

ஆறாம் திருமுறை வள்ளலார் சித்தி பெற்ற பின் 1885 ஆம்  ஆண்டு அணுக்கத் தொண்டர்களின் பெரும் முயற்சியால் தொகுக்கப் பெற்று வெளியிடப் பெறுகின்றன.

ஆறாம் திருமுறையில் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்னும் உண்மையான மெய்பொருளை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி.மகா உபதேசம் செய்கிறார்.அதில் அக்கடவுளைத் தொடர்பு கொள்ளும் மகாமந்திரத்தை கடவுள் அறிவிக்க.தாம் வெளிப்படுத்துகின்றார்...

அந்த மகா மந்திர வாக்கியம்தான்...

அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை!!!
அருட்பெருஞ்ஜோதி !!!!

என்னும் மகா மந்திரச் சொல்லாகும்.

ஆறாம் திருமுறையில் தன்னை இவ்வுலகிற்கு அனுப்பியவர்.மெய்ப்பொருளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான்  என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றார்.

பாடல்...

அகத்தே கருத்து புறத்து

நான் இதுவரை ஐந்து திருமுறைகளில் வணங்கிய தெய்வங்களும்.பாடிய பாடல்களும்.எழுதிய கருத்துக்களும் உண்மைக்குப் புறம்பானவை என்றும்.அப்போது எனக்கு அற்ப அறிவாக இருந்தது என்பதையும் வெளிப்படையாக ஆறாம் திருமுறையில் மகா பேருபதேசத்தில் வெளிப்படுத்துகின்றார்...

தான் எழுதியது குற்றம் உடையது.அற்ப அறிவால் எழுதியது என்று சொல்லும் அளவிற்கு .மெய்ப்பொருளைக் கண்டு கொள்கிறார். மேலும் சொல்கிறார் நான் வணங்கிய தெய்வங்களோ நான் பாடி எழுதிய பக்தி தோத்திரங்களோ என்னை மேலே ஏற்றி விடவில்லை.

என்னை மேலே ஏற்றிவிட்டது யாதெனில்.உயிர்கள் மேல் வைத்திருந்த அன்பு.தயவு.கருணை தான் என்னை மேலே ஏற்றி விட்டது..என்பதை வெளிப்படுத்துகின்றார்...

எனவே சாதி.சமய.மதங்களையும் அவற்றின் கொள்கைகளையும் பின்பற்ற வேண்டாம் அவற்றில் உண்மை இல்லை.  இப்போது கடவுள் எல்லா உண்மைகளையும்.வெளிப்படையாக வெளிப்படுத்தி உள்ளார்.

வேதம்.ஆகம்ம் புராணம்.இதிகாசம்.சாத்திரங்கள் எல்லாம் உண்மைக்கு புறம்பாக சொல்லப்பட்டுள்ளன.எனவே அவைகளில் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார்.

இனி வருகின்றது சுத்த சன்மார்க்க காலம்.ஞானசித்தர் காலம்....

சுத்த சன்மார்க்கப் பெரும்பதி வருகை !

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.
தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மேன்மேலும் வழங்கும்.

பலவகைப்பட்ட சமய பேதங்களும்.சாத்திர பேதங்களும் .சாதி பேதங்களும்.ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.*அது கடவுள் சம்மதம்*

இது 21 மாத்த்திற்குமேல் ...இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய.சாத்திர புராணங்களில் வந்த்தாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கரத்தர்கள் .மூர்த்திகள்.கடவுளர்.தேவர்.அடியார்.
யோகி.ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல..

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்.எல்லாத் தேவர்களும்.எல்லாக்கடவுளரும்.
எல்லாத் தலைவர்களும்.எல்லா யோகிகளும்.எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற  தனித்தலைமைப் பெரும்பதி தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.

இது உண்மையாயின் அந்த பதியின் அருளை நான் பெறுவேன்.பெறுகின்றேன்.பெற்றேன்.
என்னை அடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையும் இல்லை.பெறுவீர்கள்.பெறுகின்றீர்கள்.பெற்றீர்கள் அஞ்சல் வேண்டாம் என்று 12-4-1871 ஆம்  நாள் வெளிப்படையாக வெளியிடுகிறார்...

எனவே வள்ளலார் அவர்கள் எழுதி வைத்துள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை.பிரான்ஸ் நாட்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் அன்பர்களின் பெரு முயற்சியால்.இச்சிறிய நூல் வெளியிடப்படுகிறது...

பிரான்ஸ் நாட்டு மக்கள் இந்த நூலை படித்து பயன் அடைந்து  மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்...

திருஅருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகளில் முக்கியமான கருத்துக்களை பாமர்ர்கள் முதல் படித்தவர்கள் வரை எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவில்.திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக..

*வள்ளலார் அருள் மொழிகள்* என்ற தலைப்பிலும். வள்ளலார் காட்டிய *வழிப்பாட்டு முறையும் ஒழுக்க நெறியும் * என்ற தலைப்பிலும்..

மலேசிய நாட்டின்  வள்ளலார் அழைக்கின்றார் என்ற மாநாட்டில் ..அருள்திருமதி டாக்டர் லிலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் 4-10-2013. ஆம் ஆண்டும் 2014 ஆண்டும் வெளியிடப்பட்டது.

அடுத்து சமாதி வற்புறுத்தல் என்ற தலைப்பில் 3 அது நூலாக ஆராய்ச்சி மையத்தின் சார்பாக வெளியிடப்பட்டது

பிரான்ஸ் நாட்டு சன்மார்க்க அன்பர்களின் வேண்டு கோளின்படி..*வள்ளலார் கண்ட மெய்பொருள் அருட்பெருஞ்ஜோதி* என்னும் தலைப்பில் நான்காவது நூலாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

வள்ளலார் காட்டிய கொள்கைளில் தன்னை முழுமையாக  இனைந்து வாழ்ந்து கொண்டு வருபவரும் .என்னை ஊக்கப்படுத்தியும்.இந்நூல் வெளிவருவதற்குத் துணை புரிந்து உதவிய எனது அன்புத் துணைவியார் அருள்திருமதி அமுதா கதிர்வேல் அவர்களுக்கும் என்னுடைய குடும்பத்தார் அனைவருக்கும்  சன்மார்க்க சான்றோர்கள். மற்றும் அனைவருக்கும்  எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்புரிய வேண்டிக் கொள்கிறேன்.

திருஅருட்பாவை ஆராய்ச்சி மையத்தின் சார்பாக வெளியிடப்படும் நூல்களை  சிறந்த முறையில் அழகாக அச்சிட்டுத் தந்த ஈரோடு சகூரா கிராப்பிக்ஸ் உரிமையாளர் திரு.C.S.ரமேஷ்குமார் அவர்களுக்கு அன்பான பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..மேலும் கணினி தட்டச்சு செய்து கொடுத்த திருமதி ரேவதி அவர்களுக்கும்.பிழைதிருத்தம் செய்து கொடுத்த தினத்தந்தி நிருபர் திரு. செல்வின் அவர்களுக்கும் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கனம்
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு