வியாழன், 8 ஆகஸ்ட், 2019

ஆன்மாவின் திரைகள் விளக்குவது எங்கனம் !

செவ்வாய், 20 ஜனவரி, 2015


ஆன்மாவின் திரைகள் எப்படி நீங்கும். !


ஆன்மாவின் திரைகள் எப்படி நீங்கும். !
நம்முடைய ஆன்மாவை மாயா திரைகள் என்னும் அஞ்ஞான திரைகள்.அறியாமை என்னும் திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளது.ஆதனால் ஆன்மாவை நாம் பார்க்க முடிவதில்லை.
நம்முடனே இருந்து இடைவிடாது நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மா மற்றும் உயிர் ஒளியையே பார்க்க முடியவில்லை என்றால் கடவுளை எப்படி காணமுடியும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் ஆன்மாவில் குப்பைகள் போல் திரைகளாகப் பதிவாகிக் கொண்டே இருக்கும் குப்பைகளை எப்படி நீக்குவது என்று இதுவரையில் யாரும் தெளிவாக சொல்லவில்லை.குப்பைகள் என்னும் பதிவுகளைத்தான் நல்வினை.தீவினை என்று சொல்லப் படுகின்றன.தீவினையை அகற்றி நல்வினையை சேர்க்க வேண்டும்.தீவினையை அகற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் வள்ளலார் சொல்லித் தருகின்றார்.

இருள் இருக்கும் இடத்தில் அருள் வராது ஒளி வராது.எனவே இருளை அகற்ற வேண்டும்.இருளை அகற்ற புற வழிபாடோ.புறச் செயல்களோ எதுவும் தேவை இல்லை..

வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி யுள்ளார் .
ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தால் மட்டுமே அந்த அறியாமை என்னும் குப்பைகளை.ஆன்மாவில் இருந்து நீக்க முடியும் என்கிறார் .ஜீவ காருண்யத்தால் ஆன்மா நெகிழ்ச்சி மகிழ்ச்சி உருக்கம் அடையும் .அந்த ஆன்ம நெகிழ்ச்சியால் உஷ்ணம் உண்டாகும்.அதற்கு சுத்த உஷ்ணம் என்று பெயர். அந்த உஷ்ணத்தால் ஒவ்வொரு திரைகளையும் எரித்து கரைத்து வெளியே தள்ளிவிடும்.என்கிறார்.
ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள் இருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள வெளிப்படுவது எப்படி என்று அறிய வேண்டில்.
தயிருக்கும் கட்டைக்கும் கடைதலால் நெகிழ்ச்சி உண்டாக உண்டாக அதன் உள் இருக்கின்ற வெண்ணையும் நெருப்பும் வெளிப்படுவது போல் வெளிப்படும் என்று அறியவேண்டும்.
அதேபோல் ஆன்மாவும் பரமான்வாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள வேண்டும்.
வெண்ணையும் நெருப்பும் வெளிப்படவே அவற்றின் உண்மைத் தன்மை அனுபவமாகிப் பூரணமாவது போல் கடவுள் இன்பம் பூரணமாகும் என்று அறிய வேண்டும்.
ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது வெளிப்படும் என்று அறியவேண்டில்.
பசி,கொலை, பிணி,ஆபத்து,தாகம்,பயம்,இன்மை,இச்சை இவைகளால் ஜீவர்கள் துன்பப்படும் போது அந்த துன்பத்தை அனுபவிக்கக் கண்டபோதும் .கேட்டபோதும் ,அறிந்தபோதும் அந்த துன்பத்தை போக்குகின்ற போதுதான் ஆன்மாவை மறைத்து கொண்டு ,குவிந்து இருக்கும் குப்பைகளை அகற்ற முடியும்.

அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் பதிவு செய்துள்ள வரிகள் !

திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே
அரசுரக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி !

தோற்ற மா மாயைத் தொடர்பறத்து அருளி
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி !

சுத்த மா மாயைத் தொடர்பறுத்து அருளை
அத்தகைய காட்டும் அருட்பெருஞ்ஜோதி !

எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே
 அனுக்கிரகம் புரி அருட்பெருஞ்ஜோதி !

என்னும் வரிகளிலே ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் நீங்கியதை தெரியப்படுத்துகின்றார்.

மேலும் திருக்கதவும் திறத்தல் என்னும் தலைப்பில் பாடல் !

திருக்கதவும் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்ஜோதித் திருவுருக் காட்டாயோ

உருக்கி அமுது ஊற்றெடுத்து என் உடம்பு உயிரோடு உளமும்
ஒளி மயமே யாக்குற மெய் உணர்ச்சி யருளாயோ

கருக்கருதாத் தனி வடிவோய் நின்னை என்னும கலந்தே
கங்குல் பகல் இன்றி என்றுங் களித்திடச் செய்யாயோ

செருக்கு கருதாதவர்களுக்கு அருளும் சித்தி புரத்தரசே
சித்த சிகாமணியே என் திருநடநாயகனே !

என்னும் பாடலிலே ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் எல்லாம் நீக்கி அருட்பெருஞ்ஜோதி திருவுருவைக் காட்ட வேண்டும் என்று வேண்டி வேண்டி வேண்டுகோள் செய்து விண்ணப்பமும் செய்கிறார். வள்ளலார்.

திரைகளை நீக்குவது எங்கனம் !
உலக உயிர்களின் மேல் அன்பு,தயவு,கருணைக் கொண்டு ஆன்மநேய உரிமைக் கொண்டு துன்பத்தை போக்க வேண்டுமே அப்படி போக்கினால் மட்டுமே ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்க முடியும்.
வேறு எந்த வழியாலும் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்க முடியாது என்பதை வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்து உள்ளார் .
உயர்ந்த அறிவு படைத்த மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும்.இறைவனால் படைத்த உயிர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் செய்யாமல்.உயிர் இரக்கத்தோடு வாழ வேண்டும்.இறைவனிடத்தில் இடைவிடாது அன்பு செலுத்த வேண்டும். உயிர்களுக்கு உபகாரம் செய்வது ஜீவகாருண்யம்.கடவுளிடம் அன்பு செலுத்துவது சத்விசாரம் என்பதாகும்.

உயிர் இரக்கமும் அன்பும் ஆன்மாவில் பதிவாகி பூரணமாக வேண்டும் அந்த பூரணத்திற்கு கருணை என்று பெயர். ஆன்மாவில் கருணை நிறைகின்ற போது இறைவன் கருணைக் காட்டுவார்.
எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி ! 
கருணையும் சிவமும் பொருள் எனும் காட்சியும் பெறுக! என்னும் வரிகள் மூலம் அறியலாம்.
ஜீவகாருண்யத்தால் ஆன்மாவில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றினால் மோட்ச வீட்டின் திறவுகோல் பெறலாம்.சத்விசாரத்தால்  கோட்டைக்குள் சென்று இறை அருளைப் பெற்று .பஞ்ச பூத ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழலாம்.

இந்த இரண்டு வழியான ஒழுக்கங்களைக் கடைபிடித்தால் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகி அருட்பெருஞ்ஜோதி உண்மைக்  கடவுளைக் காணலாம் ஆன்மாவைக் காண்பதே கடவுளைக் காண்பதாகும்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு