மழையில் நனையாத வள்ளலார்.!
மழையில் நனையாத வள்ளலார் !
ஒரு நாள் பெருமழை பெய்த்து.மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முயாத அளவிற்கு பெரு மழை பெய்து கொண்டு இருந்த்து .வள்ளலார் உடன் இருந்தவர்கள் அனைவரும் முழுவதுமாய் நனைந்து விட்டார்கள்.வள்ளலார் மீது மட்டும் மழையினால் ஒரு துளி மழையும் படாமல் இருந்தார் .
அந்த காட்சியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு போய் விட்டார்கள்.
அதன் உண்மை என்ன? வள்ளலார் மீது மட்டும் ஏன் மழைத்துளிப் படவில்லை.என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் எழுதி வைத்துள்ளதை கவனிக்க வேண்டும்.பசித்தவர்களுக்கு பசியாற்றுவிப்பதே விரதமாக்க் கொண்ட ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருந்தாது.மண்ணும் சூடு செய்யாது.பெருமழை பெருங்காற்று.பெரும்பனி.பேரிடி.பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்க மாட்டாது என வள்ளலார் எழுதி வைத்துள்ளார்கள்..
நாமும் ஜீவ காருண்யம் என்னும் பணியை சிரமேற்க் கொண்டு பசிப்பிணியைப் போக்கிக் கொண்டுதானே வருகிறோம் ஏன் நாம் அந்த உபாதைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்பதை தீர்க்கமாக விசாரம் செய்ய வேண்டும்.
அதுதான் உளவு ...உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ் ஜோதி என்பார் அகவல் வரிகளில். வள்ளலார்..
அந்த உளவு என்ன ?
ஜீவகாருண்யம் என்னும் பரோபகாரம்..சத்விசாரம் .இந்த இரண்டு வழிகளால் தான் அருள் பெற முடியும்.
அருள் பெறுவது தான் உளவு. ஏன் அருள் பெற முடியவில்லை. ஜீவகாருண்யமே விரதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ..நாம் விரதமாகவா ?செய்கிறோம். என்பதை சிந்திக்க வேண்டும். பசியாற்றுவிப்பது ஒரு சாங்கியம் போல் அதாவது ஆச்சார சங்கற்ப விகற்பம் போல் செய்து வருகிறோம்.தயவோடு கருணையோடு எவரும் பசிப்பிணியைப் போக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
வள்ளலார் சொல்லுவார்...எங்கே கருணை இயற்கையில் விளங்கின அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !என்பார்.கருணை என்பது இயற்கையாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் கடவுள் கொள்கையில் உண்மையாக கடைபிடிக்க வேண்டும்.கருணை உள்ள கடவுளைத் தொடர்பு கொள்ளாமல் .கண்ட கண்ட தெய்வங்களைத் தொடர்பு கொண்டு வருகிறோம்..அதனால் அருள் கிடைக்கவில்லை..
வள்ளலார் உண்மைக் கடவுளைத் தொடர்பு கொண்டார் .கடவுளிடம் உண்மையான அன்பு என்னும் காதல் கொண்டார் . உயிர்கள்மேல் உண்மையான தயவும்.இரக்கமும் கொண்டார்.ஆகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயற்கை உண்மை அறிவையும்.இயற்கை உண்மை விளக்கத்தையும். இயற்கை உண்மை இன்பத்தையும்..வாரி வழங்கினார்..
இதைத்தான் வள்ளலார் அருள் பூரணமாக ்முழுமைப் பெறல் வேண்டும் என்கிறார்
வள்ளலார் அகவல் வரிகள்.!
அருள் உடம்பு...
அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே ! என்கிறார்..
வள்ளலார் பூரண அருள் பெற்றதால் அவர் உடம்பு அருள் உடம்பாயிற்று..அருள் உடம்பை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு எந்த சத்திகளாலும் தொட முடியாது .நெருங்க முடியாது.
அருளைப கொடுக்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் மட்டுமே ! வள்ளலார் அருட்பெருஞ் ஜோதி யிடம் தான் அருளைப் பெற்றார்.
ஆதலால் தான் மழை வள்ளலார் மீது படவில்லை.மழை மட்டும் அல்ல பஞ்ச பூதங்கள் எதுவும் அவரைத் தாக்க முடியாது .அவர் உடம்பு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் போல் அருட்பெரும் அருள் உடம்பு..தனிப்பெருங்கருணை கொண்டது...
வள்ளலார் பாடல் !
காற்றாலே புவியாலே ககனம் அதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே யிழிவென நீர் நினையாதீர் என் தந்தை அருட்பெருஞ் ஜோதி இறைவனைச் சாற்வீரே !
என்று தெளிவாக மேலே கண்ட பாடலில் தெரியப் படுத்தி உள்ளார்..
அருள் உடம்பை எந்த தீய மாயா சத்திகளாலும் நெருங்க முடியாது.தொடமுடியாது.
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்கத்தின் கொள்கைப்படி நாம்.வள்ளலார் போல் வாழ்ந்தால் சிச்சயம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அருள் பெற்று எதனாலும் அழிக்க முடியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழலாம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழக !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு