வள்ளலார் பெற்ற பேறு !
வள்ளலார் பெற்ற பேறு !
வள்ளலார் மற்ற ஞானிகள் போல் ஒருவர் என்றும்...வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மறபில் ஒருவர் தான் என்றும் .வாய் கிழிய வாதமும். தேவை அற்ற விதண்டாவாதமும் செய்கின்ற அன்பர்கள் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....
வள்ளலார் மற்ற அருளாளர்கள்.யோகிகள்.ஞானிகளை விட எந்த எந்த வகையில் உயர்ந்தவர் என்றும்..அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே..வள்ளலாருக்கு எந்த எந்த வகையில் அருளும் ஆற்றலும்..பதவியும் கொடுத்துள்ளார் என்பதை..கீழே கண்ட அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளில் சொல்லி உள்ளார் என்பதை...
படித்து தெரிந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
அருட்பெருஞ் ஜோதி அகவலை பாடம் படிப்பது போல்.தினமும் பாராயணம் செய்தால் மட்டும் போதாது...
மெய்ப்பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்....
உயிர் தந்தை என்ற தலைப்பில் 1113 ஆவது வரிகளில் இருந்து படியுங்கள்....
,
558. துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
559. எல்லா நன்மையு மென்றனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே
560. நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே
561. அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
562. புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே
563. அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே
564. இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே
565. ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே
566. எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
567. தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
568. தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே
569. தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே
570. தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே
571. தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
572. தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே
573. தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே
574. தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
575. தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
576. சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
577. மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
578. உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
579. துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
580. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
581. எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே
582. இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே !
மேலே கண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை நன்கு பொருமையாக படியுங்கள்.
இறுதியாக அருட்பெருஞ்ஜோதி அகவலை நிறைவு செய்யும் போது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்.வள்ளலார் உடம்பில் என்னவாக எப்படி அமர்ந்து கொண்டு செயலாற்றிக் கொண்டு உள்ளார் என்பதை தெளிவாக விளக்கங்கள் கொடுத்து தெரியப் படுத்துகின்றார் என்பதை...ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள அன்பர்களே ...படித்து அறிந்து.தெரிந்து.புரிந்து கொள்ளுங்கள்....
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணைக் கொண்டு் எளிய தமிழில் தான் எழுதி வைத்து உள்ளார் .
பொருமையாக படியுங்கள்...
திருஅருட்பா அனைத்திற்கும் தலைமை பீடமாக உள்ளது .அருட்பெருஞ் ஜோதி திருஅகவல்..
அகவலில் இல்லாத தகவலே வேறு எங்கும் இல்லை..எல்லாவற்றையும் அருள் நிலையோடு .அருள் ஆற்றலோடு ஐயம்.திரிபு.மயக்கம் இன்றி உள்ளது உள்ளபடி உலக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார்...
இனியும் மற்ற அருளாளர்களோடு .
வள்ளலாரை இணைத்து பேசாதீர்கள்...மேலும் கீழே உள்ள அகவலைப் படியுங்கள்.
778. சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
779. மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
780. வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
781. என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
782. உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
783. சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
784. சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
785. அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
786. ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
787. அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
788. வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
789. உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
790. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
791. மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
792. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
793. சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
794. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
795. உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
796. சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை
797. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
798. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி !
மேலே கண்ட அகவல் வரிகளில் எல்லோருக்கும் புரியும்படி தெரிவித்துள்ளார்..
இறுதியாக வள்ளலாரே சொல்லுகின்றார்.
மூவரும் தேவரும் முத்தருஞ் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை !
என்று தெளிவாக விளக்கியும்.அறிவு தெளிவு இல்லாமல். அவரவர்கள் விருப்பம் போல் பேசி மக்களை குழப்பிக் கொண்டு இருக்காதீர்கள்.....
திரு அருட்பாவை உண்மை உணர்வோடு உயிர் இரக்கத்தோடு.உண்மை ஒழுக்கத்தோடு நன்கு படியுங்கள் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! உங்கள் அறிவில் புகுந்து விளங்க வைப்பார்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு