அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 15 செப்டம்பர், 2016

குரு என்பவர் யார் ?

குரு என்பவர் யார் ?

இந்த வாதம் முன்னமே நடந்து முடிந்தது .

அறியாமை என்னும் இருளைப் போக்குபவர் எவரோ அவர்தான்  குரு என்பவராகும் .

இந்த உலகத்தில் அறியாமையை போக்குபவர் எவரும் இல்லை .

அறியாமையை போக்குபவர் தகுதி என்ன என்பதை தெரிந்து கொண்டால் புரிந்து விடும் .

உலகில் உள்ள அறிவு சார்ந்த அருளாளர்கள் இறைவனைத் தான் குருவாக ஏற்று உள்ளார்கள் .

மனிதனை குருவாக ஏற்று உள்ளவர்கள் அனைவருமே மாண்டு போனார்கள் .குருவாக இருந்தவர்களும் ் மாண்டு போனார்கள் .

வள்ளலார் கொள்கைப்படிப் பார்த்தால,் மரணம் அடையாமல் வாழும் அருளாளர்களை குருவாக ஏற்றுக் கொள்ளலாம் .

அதற்கும் மேலாக நம்மைப் படைத்தவன் தான் குருவாக இருக்கும் தகுதி உடையவர் .அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர .

வள்ளலாரே என்னை வணங்காதீர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்குங்கள் என்கிறார் .

எல்லோருக்கும் குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் சிற்சபையின் கண் மனதை செலுத்துங்கள் என்றார் .

குருவைத் தேடிச் செல்லுங்கள் என்று எந்த இடத்திலும் வள்ளலார் சொல்ல வில்லை .

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்கள் !

மருட்பகை தவிர்த்து வாழ்வித்து எனக்கே அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !

அடுத்து :-
 ஆதியும் அந்தமும் இல்லதோர் அம்பலத்து ஆடும்

ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்

நீதி கொண்டு உரைத்தேன் இது நீவிர் மேலே ஏறும் வீதி

மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி !

நாம் மேலே ஏற வேண்டும் என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே குருவாக ஏற்றுக் கொள்வதுதான் சாலச் சிறந்தது . .

மற்றபடி அவரவர்கள் விருப்பம் எப்படியோ அப்படி செய்யுங்கள் .

அது உங்கள் விருப்பம் .

விரிக்கில் பெருகும் . . . . .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக