அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 15 செப்டம்பர், 2016

நம முடைய உடம்பு !

குரு என்பவர் யார் ?


மனமே குரு என்று மிக அழகாக பதிவு செய்து இருந்தார் . . . .

 நம்முடைய உடம்பில் மனம் என்பது ஒரு கருவி என்கிறார் வள்ளலார் .

அப்படி இருக்கும் போது கருவி குருவாக இருக்க முடியுமா ? நாம் வாழும் உடம்பு என்னும்  வீட்டின் தலைவன் யார் ? அவர்தான் ஆன்மா என்னும் உள் ஒளி என்பதாகும் .

மனம் என்னும் கருவியானது ,தன்னுடைய  தலைவன் யார் என்பது தெரியாமல் தன் விருப்பம் போல் வாழ்வதால் துன்பம், துயரம் ,அச்சம் ,பயம் ,மரணம் போன்றவை வந்து கொண்டே இருக்கின்றது .

இதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக குருவைத் தேடிக் கொண்டே இருக்கின்றோம் .

வெளியில் அலைமோதும் மனம்தான் குருவைத் தேடுகின்றது .

அப்படி இருக்கும் போது மனமே எப்படி குருவாகும் .

ஆன்மா என்னும் குருவின் இயக்கம்  இல்லை என்றால் கருவி என்னும் மனத்திற்கு வேலை இல்லை .

நம்முடைய உடம்பு நான்கு பிரிவுகளாக உள்ளது .

அகம் ,அகப்புறம் ,புறம் ,புறப்புறம் என்பதாகும் .

அகம் என்னும் ஆன்மா இல்லை என்றால் , அகப்புறம் என்னும் உயிர் இல்லை .புறம் என்னும் மனம் .புத்தி ,சித்தம் ,அகங்காரம் என்னும் சூட்சும  கருவிகள் இல்லை .புறப்புறம் என்னும் கண்,காது.மூக்கு,வாய் ,உடம்பு என்னும் கருவிகள் இல்லை .

ஆன்மா என்னும் உள் ஒளி இயங்கினால் மட்டுமே கருவிகளுக்கு வேலை உண்டு .

எனவே குருக்கள் இரண்டு வகையாக உள்ளது .

பொருள் கிடைக்க வழிகாட்டும் குரு ஒன்று .

அருள் கிடைக்க வழி காட்டும் குரு ஒன்று .

மனித தேகம் கொண்டவர்களுக்கு அருள் கிடைக்க வழி காட்டும் குருவே சிறந்த குரு .

உடம்பில் ஆன்மா என்பது  குரு .அந்த ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வழிகாட்டிய உண்மையான குரு, நம்முடைய வள்ளலார் .

புறக்குரு வள்ளலார் .அகக் குரு  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர .

அழியாமல் இருப்பது எதுவோ ,அதுவே குருவாகும் .

அழியாமல் வாழ்வதற்கு அழியாமல் இருக்கும் ஒளியைத் தொடர்பு கொண்டு வாழ்வாங்கு வாழவோம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக