அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர வள்ளலார் இடம் உமக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார்?
வள்ளலார் கேட்கும் வரம் !
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ,நான் கேட்கும் வரத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் கேட்கிறேன் ,
எல்லா அருளாளர்களும் விதியை நம்பினார்கள் .விதியை மாற்ற முடியாது என்றார்கள் .
விதியை மதியால் வெல்ல முடியும் என்பதை நான் உணர்ந்தேன் .விதியை மாற்றும் அருள் ஆற்றல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய உங்களால் மட்டுமே முடியும் என்பதும் தெரியும் .
நான் கேட்கும் வரம் இதுதான் !
மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவி யுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்
நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்க நல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் !
என்று இறைவனிடம் கேட்கின்றார் ,
வள்ளலார் போல் இறைவன் இடம் இப்படி வரம் கேட்டது உலகில் எவரும் இல்லை .
இந்தப் பாடலில் உள்ள விபரங்களை நன்கு கவனிக்க வேண்டும் .
அவருக்காக கேட்காமல் மண் உயிர்கள் முதல் உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் வரை ,அனுபவிக்கும் துன்பங்களைப் போக்க வேண்டும் என்பது தான் அவர் கேட்ட வரம் .
துன்பம் என்பது சாதாரண துன்பம் அல்ல .மரணம் என்னும் துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதாகும் .
துன்பங்களைப் போக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?
அருள் வேண்டும் ,
வள்ளலாரின் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையை, பொதுமையை உணர்ந்து இறைவன் அருளை வாரி வாரி வழங்கினார் .
மரணத்தை வென்றார் ,
அருள் ஆட்சியையும் பெற்றார்
அதனால்தான் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்கிறார் .
நாமும் பெறலாம் நல்ல தருனம் இதுவே . . . .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக