அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 15 செப்டம்பர், 2016

அறிய வேண்டியதை அறிய வேண்டும் !

அறிய வேண்டியதை அறியாமல்,அறிய வேண்டாததை அறிந்து கொள்வதால் , அவதிப்படுவது மனம் ,

மனம் மகிழ்ச்சியைத் தேடுகிறது .தேடுவது மனம் .அப்படி இருக்க மனம் எப்படி குருவாகும் .

தேடுபவர் குரு அல்ல .கொடுப்பவரே குரு .

மனம் என்பது பேய் பிடித்த குரங்கு என்கிறார் வள்ளலார் .குரங்கு குரு ஆக முடியுமா ?குரங்கை அடக்குபவனே குரு ...

குரங்கை அடக்க குரு தேவை ,அந்த குருதான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் .அவரே அதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர .

அவர் எங்கு உள்ளார் நம் சிரநடுவில் ஆன்ம ஒளியாக உள்ளார் .

ஒவ்வொருவருக்கும் அவரே அந்த ஒளியே குருவாகும் ,

இடைவிடாது தொடர்பு கொள்வோம் இன்பமுடன் வாழ்வோம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக