வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கடவுள் உண்டு ஆனால் உருவத்தில் இல்லை !


கடவுள் உண்டு ஆனால் உருவத்தில் இல்லை !
அன்புடையீர் வணக்கம்
கடவுள் இருக்கிறார் ஆனால் அவர் உருவமற்றவர் அருள் ஒளியாக உள்ளார் பல கோடி அண்டங்களையும் இயக்கம் ஆற்றலாக உள்ளதுதான் அருட்பெரும் ஜோதி என்பதாகும் .மனிதனால் கடவுளை படைக்கவோ உருவாக்க முடியாது,ஆலயங்களிலும்,மசூதி களிலும்,சர்ச்சுகளிலும், கடவுள் இல்லை,ஒவ்வொரு உம்பிலும் உயிர் ஒளியாக இருப்பதுதான் கடவுளின் சிறிய அனுக்கலாகும்.அதனால்தான் எந்த உயிர்களையும் அழிக்க மனிதனுக்கு உரிமை இல்லை.கடவுளின் பெயரால் உயிர்பலி செய்வது அறியாமையாகும் .உயிருள் இறைவன் இருப்பதால்,துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்வதே கடவுள் வழிபாடாகும்.அதனால்தான் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் .கடவுள் நம்மிடம் எதுவும் கேட்பதில்லை .கடவுளுக்காக எதையும் நாம் எதையும் செய்யத் தேவை இல்லை .இதை அறியாமல் மக்கள் உருவமான பொம்மைகளுக்கு,கோவில் கட்டி கும்பா அபிஷேகம் செய்து அபிஷேகம் ஆராதனை ஆட்டம் பாட்டம் எல்லாம் செய்வது கொண்டாடுவது அறிவு இல்லாத அறியாமையாகும் .இந்த உண்மைகளையெல்லாம் சொல்ல வந்தவர்தான் நம்முடைய வள்ளலார் என்பவராகும் .
அன்புடன் -கதிர்வேலு.

1 கருத்துகள்:

28 ஆகஸ்ட், 2011 அன்று 6:27 PM க்கு, Blogger Sivamjothi கூறியது…

Ayya Have you read this book. http://www.vallalyaar.com/?p=409

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு