திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மக்கள் கடமை !



மக்கள் கடமை !

இன்று அறுபத்து ஐந்தாவது சுதந்திர தின விழா உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.நாட்டுக்கு சிதந்திரம் கிடைத்து விட்டது நமக்கும் சுதந்திரம் கிடைத்து விட்டது,மக்களாகிய நாம் என்ன செய்யவேண்டும் .என்பதை நாம் சிந்திக்க வேண்டும் .சாதி மதம் சமயம் என்ற கொள்கையிலிருந்து நாம் விடுபட்டோமா?.அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம் பேசுகிறோம் கடைப் பிடிக்கிரோமா?என்றால் இல்லை .ஏழைப் பணக்காரன் என்ற நிலை மாறி விட்டதா?ஒருவன் கோபுரத்திலே ஒருவன் குடிசையிலே என்ற நிலை மாறிவிட்டதா> எல்லோரும் மனிதர்கள்தானே ஏன் இந்த நிலை .இதை மாற்றி சமநிலை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் .நாம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும் .பொருளாதார சமநிலையை உருவாக்க அனைவரும் பாடு படவேண்டும் .எல்லோரும் நமது சகோதரர்கள் என்ற நினைவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் .உலகம் அனைவருக்கும் சொந்தமாகும் ,உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் சொந்தமாகும் .அந்த பொருளை அனைவரும் சமமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை இந்த சுதந்திரநாளில் உணர்வை அனைவரும் மனதிலே அறிவிலே பதிவு செய்து கொள்ளவேண்டும் .இதுவே நாம் நாட்டுக்கு செய்யும் தியாகமாகும் .சாதி சமயம் மதம் போன்ற,மனித ஒற்றுமைக்கு விரோதமாக இருக்கும் அவற்றை குழி தோண்டி புதைத்து விட வேண்டும் .சுய நலமில்லாத பொது நோக்கம் அனைவரிடமும் உண்டாக வேண்டும் .இதுவே மனித இயற்கையான குணமாகும் .அதை இந்த சுதந்திரத் திருநாளில் ஒவ்வொருவரும் பின் பற்ற வேண்டுமாய உங்கள் அனைவரையும் சகோதர உணர்வோடு பணிவுடன் பதிவு செய்கிறேன் --அன்புடன் ஆனமநேயன் --கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு