அருட் பெரும் ஜோதி பாகம் ;-1
உலகத்தினிடத்தே பெருதற்க்கு மிகவும் அருமையாகிய மனித
தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும்
ஒழுகவேண்டுவதும் யாதெனில்;--
இயற்கைத்தானே விளங்க்குகின்றவராய் உள்ளவர் என்றும், இயற்கையில்த்
தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும் ,இரண்டும் படாத பூரண இன்பமானவர்
என்றும் எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும்
எல்லா சத்திகளையும் ,எல்லா சத்தர்களையும்,எல்லா கலைகளையும் ,எல்லா
பொருள்களையும் ,எல்லா தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும் ,எல்லா
செயல்களையும் ,எல்லா இச்சைகளையும் ,எல்லா ஞானம்களையும்,எல்லா
பயன்களையும் ,எல்லா அனுபவங்களையும் ,மற்றை எல்லாவற்றையும்
தமது திருவருட் சக்தியால்
1 ;---தோற்றுவித்தல்
2 ,;--வாழ்வித்தல்
3 ;---குற்றம் நீக்குவித்தல்
4,;---பக்குவம் வருவித்தல்
5 ;---விளக்கம் செய்வித்தல்
என்னும் ஐந்தொழில்கள் முதலிய் பெருங்கருணைத் தொழ்ல்களை
இயற்றுவிக்கின்றவர் என்றும், எல்லாம் ஆனவர் என்றும், ஒன்றும் அல்லாதவர்
என்றும் ,சர்வகாருன்யர் என்றும் ,எல்லாம் உடையராய் தமக்கு ஒருவார்றானும்
ஒப்பு ,உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை
அருட்பெரும் ஜோதியர் ,என்றும் ;---சத்திய அறிவால்
அறியப்படுகின்ற ,உண்மைக்கடவுள் ஒருவரே ,அகம் புறம் முதலிய எவ்விடத்தும்
நீக்கமின்றி நிறைந்து சுத்தமெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில்
அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகினறார்
என்று வள்ளலார் விளக்கமாக அருட்பாவில் பதிவு செய்துள்ளார்
என்று வள்ளலார் விளக்கமாக அருட்பாவில் பதிவு செய்துள்ளார்
ஆதலால் நாம் உண்மை கடவுலான் அருட்பெரும்ஜோதி கடவுளை
வழிபட்டு வாழ்ந்து வழிகாட்டுவோம்
நன்றி ;---மீண்டும் பூக்கும் ,,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு