செவ்வாய், 8 ஜூன், 2010

மாயை

மாயை ;காரணம்

மாமாயை ;காரியம் 

பெருமாயை;காரணகாரியம் 

காரணமில்லாமல் காரியமில்லை ,காரியமில்லாமல் காரணம் இல்லை ;காரணகாரியம் இல்லாமல் 
எதுவும் நடை பெறாது .காரணமும் ,காரியமும் ,காட்டுவித்தான் எனக்கு என்றார் வள்ளலார் ,
ஆண்டவர் ஆன்மாவை இந்த உலகத்த்ற்கு அனுப்பி வைத்ததின் நோக்கம் புறிந்த கொண்ட 
வள்ளலார் ,முதலில் தன் உடம்பு வந்த வழி முறையை யும், பஞ்ச பூதம்  வந்த வழிமுறை களையும் ,மாயை மாமாயை பெருமாயை போன்ற, செயல் பாட்டு முறை ரகசியங்களையும் ,
அறிந்து கொள்கிறார் ,இந்த பஞ்ச பூதங்களின் அமைப்பு முறை அனைத்தும் ,இயற்கையல்ல 
செயற்கை என்பதை அறிந்து கொள்கிறார்.
இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம் ,இயற்க்கை இன்பம் ,எது என்பதை அருளொளி முலம் 
அறிந்து கொள்கிறார்,
இயற்கைஉண்மை  என்பது என்றும் அழியாதது,அழியாத ஒன்றை தேடிய வள்ளலார் ,அருள்  
ஒளியை க்ண்டுபிடித்துவிடுகிறார் ,அதற்க்கு அருட்பெரும்ஜோதி ;என்று பெயர் வைக்கறார் 
மாயை ,மாமாயை ,பெருமாயை ,பஞ்சபூதங்கள்,அனைத்தும் செயற்கை யாகும், மனிதனால்
உருவாக்கிய தெய்வங்கள் அனைத்தும்,பொய்யானவை கற்பனை கதைகள,என்பதை 
திரு அருட்பாவில் தெளிவாக விளக்கி உள்ளார் ,
நாம் பொய்யான தோற்றங்களை உண்மை என்று நம்பி ,ஏமாந்து கொண்டு இருக்கறோம் 
உண்மையை உலகுக்கு எடுத்து சொல்ல ,அருட் பெரு ஒளியால் அனுப்ப பட்டவர்தான் 
வள்ளலார் ..உலக மக்கள் அனைவரும் சாதி ,மத ,பேதமில்லாமல் ,ஒற்றுமை உடன் 
உண்மையை அறிந்து ,தெறிந்து ஆன்மநேய ஒருமை பாட்டுடன் நலமுடன் வாழ்ந்து 
வழி காட்டுவோம்..

மீண்டும் பூக்கும் ;நன்றி 
  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு