*நீதி மன்றத்தில் நடந்தது என்ன !*
*திருஅருட்பா மருட்பா என்ற போராட்டம் வழக்கு சைவ சமயத்தாருக்கும் வள்ளலாருக்கும் நடைபெற்றது.*
*அதன் உண்மையை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்..!*
*வள்ளல்பெருமான் எழுதிய பாடல்களைத் திரட்டி பல அன்பர்களின் உதவியோடு வள்ளலாரின் அனுக்கத் தொண்டர்களில் முதன்மையானவர் திரு. வேலாயுதனார் அவர்கள் புத்தகமாக 1867 ஆம் ஆண்டு வெளியிட்டார்கள*.
*அதில் உள்ள அருள் நிறைந்த தெய்வீக கருத்துக்கள் அடங்கிய பாடல்கள் அனைத்தையும், பள்ளிக்குச் செல்லாத, ஆசிரியரிடம் பாடம் கற்காத, எந்த நூல்களையும் படிக்காத, எவற்றையும் பின் பற்றாத வள்ளல்பெருமான் அவர்கள் எழுதிய அருள் நிறைந்த பாடல்களைப் படித்து பார்த்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவலோடு புத்தகமாக வெளியிட்டார்கள்*
*அந்த அருள் நூலுக்கு திருஅருட்பா என்னும் பெயரே பொருத்தமானதாகும் என்பதை அறிந்த, பன்மொழிப் புலவரான உபயகலாநிதி பெரும்புலவர் என்று வள்ளலாரால் பெயர் சூட்டப்பட்ட "வேலாயுதனார்" அவர்கள் வள்ளலாரின் அனுமதி பெறாமலே புத்தகத்திற்கு,"திருஅருட்பிரகாச வள்ளலார்" அருளிய "திருஅருட்பா" என்னும் தலைப்பு வைத்து நூல் வெளியிட்டார்கள்*
*தமிழகம் முழுவதும் பரவியது!*
*திருஅருட்பா என்பதும், திருமுறை என்பதும் சைவ சமய நூல்களுக்கு மட்டுமே பொருத்தமானதாகும்.வள்ளலார் எழுதிய நூலுக்கு பொருத்தமானது அல்ல என்ற சலசலப்பு,பல கோணங்களில்,பல போராட்டங்கள் நடந்தன*
*தமிழ் படித்த சான்றோர்கள், அறிஞர்கள் இரண்டு பக்கமும் போதிய ஆதாரத்துடன் வாதமும் பிரதிவாதமும் துண்டு அறிக்கைகளின் வாயிலாக எங்குபார்த்தாலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தன* முடிவு தீர்ந்தபாடில்லை.
*நீதி மன்றம் செல்லுதல்!*
*வள்ளலார் பாடல்!*
மக்கள் சிந்திக்க வேண்டும்...!
*நான்காம் திருமுறை பாடல்!*
சுற்றது மற்றவ்வழி மாசூதது என்று எண்ணாத் தொண்டர் எலாங் கற்கின்றார் பண்டும் இன்றுங் காணார்
எற்றதும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால்
*கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே*
*கண்டதும் நின்னிடத்தே உட் கொண்டதும் நின்னிடத்தே*
பெற்றதும் நின்னிடத்தே இன்புற்றதும் நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே !
மேலும்...
ஏதும்அறி யாதிருளில் இருந்தசிற யேனை
எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
*ஓதுமறை முதற்கலைகள்* *ஓதாமல் உணர*
*உணர்விலிருந் துணர்த்தி* *அருள் உண்மைநிலை காட்டித்*
*தீதுசெறி சமயநெறி* செல்லுதலைத் தவிர்த்துத்
திருஅருண்மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான்மருளும்
போது மயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
போக்கி எனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.!
*ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீ தான்* என்பதெல்லாம் திருஅருட்பாவில் வள்ளலாரே எழுதிய அகச் சான்றுகள்
மேலும்
*ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி!* என்பன அகவல் வரிகள்.
*இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார். திருஅருட்பா என்பது இறைவன் சொல்ல சொல்ல வள்ளலார் எழுதியது* *ஆதலால் தான் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்பார் வள்ளலார்*
மேலும் சொல்லுகிறார்!
நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
நண்ணி எனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
*கோடு தவறாது* *உனை நான் பாடுதற்கு இங்கேற்ற*
*குணப் பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந் தருளே.!*
*என்பன போன்ற திருஅருட்பா சான்றுகள், இறைவனால் எழுதப்பெற்றது என்பதை கருத்தில் கொண்டு "திருஅருட்பா" என பெயர் சூட்ட காரண காரியமாக இருந்துள்ளன* *இவற்றை அறியாத சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் அருட்பா மருட்பா போராட்டத்தில்ஈடுபட்டு இருந்துள்ளார்கள்*
*திருஅருட்பவை முழுதும் படிக்காதவர்கள், படித்த பண்டிதர்கள், மற்றும் பகுத்தறிவாளர்கள் இன்றுவரை வள்ளலாரைப் பற்றிய செய்திகளை உண்மைக்கு புறம்பாக அவதூராக பேசிவருகிறார்கள்* அவர்களும் இக் கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
*ஆறுமுகநாவலர் வருகை !*
*யாழ்பாணத்தை சேர்ந்தவர் ஆறுமுக நாவலர் சிறந்த சைவ சமய பற்றுள்ள வெறியர்*
*சைவ சமயத்திற்கு எதிராக கருத்துகள் கூறும் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்மந்தர் போன்றோரின் பாடல்களுக்கு இணையாக இடம்பெறுதல் கூடாது என்று அவர் தீவிரமாக எதிர்த்துப் பேசினார். இராமலிங்கரின் பாடல்கள் அனைத்தும் அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள் என எழுதி,துண்டு பிரசுரங்கள் வாயிலாக நூல் வெளியிட்டதோடு, தனிப்பட்ட முறையில் வள்ளல்பெருமானைத் தாக்கி பல சொல்லம்புகள் வீசியுள்ளார்.*
*எதையும் கண்டு கொள்ளாமல் மறுப்பான பதில் சொல்லாமல் வள்ளலார் அமைதிகாத்து வந்துள்ளார். மேலும் நாவலருக்கு கோபம் அதிகரித்தது.கடலூரில் உள்ள மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் சைவ சமயவாதிகளின் உதவியோடு திருஅருட்பா மீது மருட்பா என்னும் வழக்குத் தொடர்ந்தார்.*
*வடலூர் தருமச்சாலையில் தங்கிஇருந்த வள்ளல் பெருமானுக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்தது அவற்றை வாங்க மறுத்துவிட்டார்.அருகில் இருந்த வேலாயுதம் அவர்களின் வற்புறுத்தலினால் பெற்றுக் கொண்டார்*
*நீதி மன்ற விசாரணை நாள் வந்தது !*
*தமிழ்நாட்டில் உள்ள படித்த அறிஞர் பெருமக்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்களும்,வள்ளலார் தொண்டர்களும் மற்றும் அவருடைய அபிமானிகளும் பொது மக்களும் நீதி மன்ற வளாகத்தில் குவிந்து விட்டார்கள்.*
*வழக்கு தொடுத்த ஆறுமுகநாவலரும் அவரது ஆதரவாளர்களும் வந்து அமர்ந்து கொண்டார்கள்,*
*நீதிபதியும் வந்து அமர்ந்து கொண்டார் வள்ளல்பெருமான் மட்டும் வரவில்லை.*
*இராமலிங்கம் இராமலிங்கம் என அழைப்பாளர் குரல் அழைக்கப்பட்டது திடீர்என வள்ளலார் உள்ளே நுழைந்தார், அவரைக் கண்டதும் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் வைத்தனர்.*
*தன் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதியும் தன்னை அறியாமல் எழுந்து நின்று அவரும் வணக்கம் வைத்தார்.நீதிமன்றம் சிறிது நேரம் ஏதும் புரியாமல் அமைதியான மவுனம் நீடித்தது. நீதிபதிக்கு ஒன்றும் புரியாமல் எழுந்தவர் சட்டென அமர்ந்து கொண்டார்*
நீதிபதி கேள்வி !
*வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரைப் பார்த்து நீங்கள் வழக்குத் தொடுத்தவர் இராமலிங்கம் வந்தபோது திடீரென பதட்டமுடன் எழுந்து நின்று வணக்கம் சொன்னது ஏன்? என்று கேட்டார்*
*அவர் எல்லோராலும் மதிக்கத்தக்கவர்,மரியாதைக்குறியவர் அதனால் மரியாதை திமித்தமாக எழுந்து நின்று வணக்கம் வைத்தேன் என்றார்.*
*அவற்றை அறிந்து ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள், நீங்களே எல்லோராலும் மதிக்கத் தக்கவர்,மரியாதைக்குறியவர் என்று ஒப்புக்கொள்வதால் அவர் எழுதிய திருஅருட்பா மறுப்பா அல்ல,அவை திருஅருட்பாதான் என்று தீர்ப்பு அளித்து வழக்கை வள்ளலாருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிவிட்டு நீதிபதி விடைபெற்று சென்று விட்டார்*
அடுத்த சம்பவம் மிகவும் முக்கியமானது! அதிசயமானது! அற்புதமானது!
உண்மையானது!
*நீதி மன்றத்தில் வள்ளலாருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியதை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் ஆனந்தம் பொங்க கரகோசம் எழுப்பி மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றார்கள்*
வள்ளலார் நீதி மன்றத்திற்கு எப்படி வந்தார் எவ்வாறு சென்றார் என்பது எவருக்கும் தெரியாது.
வடலூர் மக்கள் உண்மை வெளிப்படுத்தி விட்டார்கள்!
*வடலூரில் இருந்து நீதி மன்றத்தின் தீர்ப்பை காண வந்த மக்கள் வடலூர் சென்று தருமச்சாலையில் உள்ளவர்களிடம், வள்ளலார் நீதி மன்றத்திற்கு வந்தார், வெற்றிகண்டார் என்ற செய்தியை ஆனந்த கூத்தாடி சொல்லி மகிழ்ந்தார்கள்.*
*அவற்றை கேட்ட தருமச்சாலையில் உள்ள அன்பர்கள் வள்ளலார் காலையில் இருந்து இங்கேதான் எங்களுடன் இருந்தார்கள் அவர் எப்படி நீதி மன்றத்திற்கு வந்தார் என்று ஆச்சரியமாக சொல்லி பேசிக் கொண்டார்கள்,*
*அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கவனித்த வள்ளலார் உடனே பிச் என்று சொல்லி அவர்களை அழைத்து இங்கு நடந்ததை வெளியில் சொல்லாதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லி உள்ளார்.இருந்தாலும் நம் மக்கள் ரகசியத்தை காப்பாற்ற முடியாமல் வெளியில் சொல்லிவிட்டார்கள்*
*வாயடங்கி மனமடங்கி இருக்க மாட்டீர்கள் என வள்ளல்பெருமான் கண்டித்துள்ளார்.*
*நீதி மன்றம் சென்றவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*
*உலக வழக்கில் கவனம் செலுத்தாத வள்ளலார் நீதிமன்றம் செல்லவில்லை* *ஏன் என்றால்? திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லித்தான் வள்ளலார் எழுதியுள்ளாரேத் தவிர வள்ளலார் விருப்படி எதுவும் எழுதியது அல்ல.* *ஆதலால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் வடலூர் தருமச்சாலையிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தொடர்பு கொண்டு இருந்துள்ளார்.*
*ஆதலால் வள்ளலார் உருவத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நீதிமன்றம் சென்றுள்ளார் என்பதே உண்மையாகும்* *அதற்கு சாட்சி நீதிமன்றத்தில் நடந்த காட்சிகளே யாகும்*
*அகவல் தகவல் வரிகள்!*
அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருணலம் பரவுகென்று அறைந்த மெய்ச் சிவமே!
அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே!
அருள்பெறிற் துரும்புமோர் ஐந்தொழில் புரியும்
தெருளிது வெனவே செப்பிய சிவமே!
என்னும் அகவல் வரிகளில் காணலாம்.
மேலும் வள்ளலார் பாடல்!
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும்
தான்கொண்டிங் கென்பால் அன்பால்
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும்
களித்தளித்த தலைவன் தன்னை
முன்னையும் பின்னையும் எனக்கே முழுத்துணையாய்
இருந்த முழு முதல்வன் தன்னை
*அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.!*
என்னும் பாடல்கள் வரிகளில் நிறைய காணலாம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எலாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக