*60 வயதிற்கு மேற்பட்டவர்களின் விருப்பம்*!
முன் காலத்தில் சிறுவயதில் அம்மா அப்பா அரவணைப்பில் வளர்ந்து அண்ணன் அக்கா தங்கை தம்பி உற்றார் உறவினர்களிடம் சேர்ந்து விளையாடி வளர்ந்தோம்.
பின் பள்ளி கல்லூரியில் சேர்ந்து படித்து படிப்பிற்கு தகுந்த வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து அம்மா அப்பாவிடம். கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரும் காலத்தில்.
வயது 25 ஆயிற்று காலம் உள்ளபோதே பயிர்செய் என்பதுபோல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.
குழந்தைகள் பிறந்தவுடன் வேலைக்காரணமாகவும் சூழ்நிலைக் காரணமாகவும் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் போக ஆரம்பித்துவிடுகிறோம் குழந்தைகள் பிறந்து பொறுப்புக்கள் குடும்ப சுமைகள் வந்துவிடுகிறது.
அம்மா அப்பாவுடன் இருக்கும்போது வருமானம் குறைவாக இருந்தாலும் அப்பா அம்மாவின் அன்பினால் நாவிற்கு ருசியான தேவையான காய்கறிகள்.கீரைவகைகள் வித்தியாசமான உடம்பிற்கு தகுந்த உணவுவகைகள். பலவிதமான பலகாரங்கள் செய்துகொடுத்து நோய்வராமல் மருத்துவ செலவுகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் தன் குழந்தைகளை வளர்த்து வந்தார்கள்.
அம்மா அப்பாவிற்கு வயதாகிவிட்டது.
அவர்களால் முன்புபோல் வேலை செய்ய முடிவதில்லை.தங்கள் விருப்பம் போல் உணவு செய்து சாப்பிடவும் முடிவதில்லை
ஓய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.
*60 வயதாகிவிட்டால் உடம்பின் இயக்கம் குறைந்து விடுகிறது*.
மகனுடனோ மகளுடனோ இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.
அவர்கள் தன் மகனிடமோ மகளிடமோவிரும்புவது சொத்தோ பணமோ வசதி வாய்ப்புகளோ கிடையாது.
இப்போது நிறைய குடும்பங்களில் அன்பிற்கோ பாசத்திற்கோ பணத்திற்கோ பஞ்சமில்லை.
எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும் வயதானவர்களுக்கு பணிவிடை செய்யவோ! தகுந்த உணவு செய்து கொடுப்பதிலோ பின்வாங்குகிறார்கள்.அவர்கள் விருப்பத்தை கேட்டு உணவு செய்து கொடுப்பதற்கு இக்காலத்தில் யாரும் தயாராக இல்லை.
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வீட்டில் செய்வதைத்தான் முதியோர்கள் சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
அதுவே வயதானவர்களுக்கு பெரிய மன உளைச்சல் மன வேதனை மற்றும் மனவியாதியைத் தருகிறது.
தங்கள் மனவேதனையை குடும்பத்தில் சொன்னால் பிரச்சனை வரும்.நம்மால் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதால் வெளியில் யாரிடமும் சொல்வதில்லை. இதுதான் இன்றைய முதியோர்களின் கவுரமான மனநிலையாக உள்ளது.
*முதியோர் இல்லங்கள்!*
வெளியில் சொல்லமுடியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கும் *வசதியுள்ள முதியோர்கள் அனைவருக்கும் அரிய வாய்ப்பை ஆண்டவர் உண்டாக்கியுள்ளார் அதுதான் முதியோர் இல்லங்கள்.*
அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் சமூகசேவை மனப் பான்மையுடன் எல்லா நகரங்களிலும் நிறைய உள்ளன.
தனியாக தங்குவதற்கும் ரூம்(அறை) வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தனிபெட்மட்டும் போதும் என்றாலும் தங்கிகொள்ளலாம்
பணம் கொடுத்து தங்கவும் சாப்பிடவும் வசதியுள்ள முதியோர்கள் வசதியான இல்லங்களுக்கு சென்றுவிடுகிறார்கள் என்பது உண்மை.
அங்கு முதியோர்களுக்கு நேரம் தவறாமல் தகுந்த உணவு வகைகள் மருத்துவம் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி பாதுகாப்பான சர்வீஸ் வேலையாட்கள் நிறைந்த இடமாக உள்ளது.
தங்களுக்கு பிடித்த தேவைஉள்ள இல்லத்தை தேர்வுசெய்து தங்கி தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்கள்.
TV வசதி பேப்பர் வசதி போன்வசதி எல்லாம் உள்ளன
ஓய்வு நேரங்களில் உலக நடப்புக்களை முதியோர்களுடன் கலந்து பேசி பரிமாறிக்கொள்கிறார்கள்
மகன் மகள் பேரன் பேத்திகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் வாடகைக்கார் எடுத்து சென்று பார்த்துவிட்டு வந்து விடுகிறார்கள்.
முதியோர்களை கவனிக்க முடியாத அன்பும் பாசமும் உள்ள மக்கள் இதுபோன்ற முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர்களை தங்கவைப்பதே சிறந்த பாதுகாப்பான செயல்களாகும். இந்த முதியோர் இல்லங்களால் முதியோர்களுக்கு மனத் திருப்தியும் மனமகிழ்ச்சியும் கொடுக்கின்றது என்பதுதான் உண்மை.
விருப்பம் இல்லாமல் கவனிப்பு இல்லாமல் வீட்டில் அடைந்து கிடப்பதைவிட தங்கள் வயதுடைய முதியோர்களிடம் கலந்து உரையாடி மகிழ்வதே சிறப்புடையதாகும்.
*இந்த செய்தி எனது இனிய நண்பர் திருப்பூர் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர் சொல்லியது.*
பெயர் சொல்ல விரும்பவில்லை.
அவர் மகன் மகள் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள்.கோபித்துக் கொண்டோ குறை சொல்லியோ வரவில்லை என்கிறார். என்வசதிக்காக்
தேவைக்காக விருப்பத்தோடு இங்கு வந்து தங்கி உள்ளேன் என்கின்றார்.
மகன் மகள் பேரன் பேத்திகளை அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவேன் என்கிறார்.
அவர் ஈரோட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார்.
நல்ல பாதுகாப்பான வசதியுடன் கூடிய தனிரூமில் தங்கியுள்ளார்.
மகிழ்ச்சியுடன் உள்ளேன் என்கிறார்.
*நீங்களும் வந்துவிடுங்கள் என்று என்னை அன்புடன் அழைக்கிறார்*. இங்குள்ளவர்களுக்கும் சன்மார்க்கத்தை போதிக்கலாம் என்கிறார்.
வெளியில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம் ஆனால் சொல்லிவிட்டுத்தான் போகவேண்டும்
*வசதியுள்ள முதியோர்கள் கவலைப்பட தேவையில்லை.*
*பணம் இருந்தால் மனம் இருந்தால் இறுதிவரை மகிழ்ச்சியுடன் வாழலாம்*.
எல்லோருக்கும் கடவுள் எதாவது ஒரு நல் வழியைக் காட்டிக்கொண்டே இருப்பார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக