*சன்மார்க்க அன்பர்களுக்கு வேண்டுகோள்!*
*வள்ளலார் தோற்றுவித்த சங்கம் சாலை சபை மற்றும் சித்திவளாகம் யாவும் சாதி சமயம் மதங்கள் சாராத அமைப்புகளாகும்*.
மேலும் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும் அருள் பெறுவதற்கும் ஆன்மலாபம் அடைவதற்கும் தடையாக இருப்பது சாதி சமய மதங்களின் கொள்கைகளும் அவற்றின் வழிபாட்டு முறைகளும் அவற்றை பின்பற்றி வாழும் வாழ்க்கை முறைகள் யாவும் தடையாக இருக்கிறது.*
வள்ளலாரைப் போல் *சாதி சமய மதங்களைச் சாடியவர் உலகில் எவரும் இல்லை*.
*ஏன்? *அவ்வாறு சாடுகிறார் என்பதை சன்மார்க்க அன்பர்கள் அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்*.
*அவ்வாறு அறிந்து கொள்பவர்களையே சன்மார்க்கிகள் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்*.
*சாதி சமய மதங்களை ஆண்டவர் தோற்றுவிக்கவில்லை.சமய மதவாதிகளின் சூழ்ச்சியால் தோற்றுவிக்கப்பட்டதாகும்*.
ஆதலால்தான்
*சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென*
*ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)
*சாதியு மதமுஞ் சமயமுங் காணா*
*ஆதி யநாதியாம் அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)
என்று மிகத் தெளிவாக அகவல் வரிகளிலும்.நூற்றுக்கணக்கான அருட்பாடல்களிலும் சொல்லியுள்ளார்.நாம் தினமும் அகவல் பாராயணமும் அருட்பா பாடல்களும் படித்து வழிபாடு செய்கிறோம் சாதி சமயம் மதம் பொய் என்பதை உணர்ந்து *நாம் அவற்றைவிட்டு விலகி இருக்கிறோமா? சிந்திக்க வேண்டும்.*
*சாதி சமய மதங்களை பின்பற்றுபவர்கள் சன்மார்க்கத்தைப் பின்பற்ற தகுதியற்றவர்கள் என்கிறார்*
*ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள்!*
*மாயையால் சிக்குண்ட மாயாத் சித்தர்கள் என்னும் சமய மதவாதிகளால் தோற்றுவிக்கப்பட்டதுதான் சாதி சமய மதங்களாகும்*.
*அவற்றை பின்பற்றுவதால்தான் அறியாமை என்னும் மாயா திரைகள் ஆனமாவை தெரியவொட்டால் மறைத்துக் கொண்டுள்ளன என்பதை வள்ளலார் வெளிப்படையாக சொல்லுகிறார்.*
*வள்ளலார் பாடல்!*
*சாதி சமயச் சழக்கைவிட்டேன்* அருட்
சோதியைக் கண்டேனடி* - அக்கச்சி
சோதியைக் கண்டேனடி!
என்றும் மேலும்
சாதி
சமயங்களிலே
வீதி பலவகுத்த
சாத்திரக்
*குப்பைகள்* எல்லாம் பாத்திரம் அன்றெனவே
ஆதியில் என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால் இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
*ஓதிஉணர்ந் தோர்புகழும்* *சமரச சன்மார்க்கம்*
*உற்றேன்* *சிற் சபைகாணப் பெற்றேன்* மெய்ப் பொருளாம்
சோதி நடத்தரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச்
நிறைவை உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!
*ஆதியிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவித்தபடியே உண்மை நிலை அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்* என்றும்.சாதி சமய மதங்கள் யாவும் அசுத்தமான சாத்திரக் குப்பைகள் என்றும் அவற்றை இருக்கும் இடம் தெரியாமல் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்பதற்காகவே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* ஆண்டவர் அருளால் தோற்றுவித்தேன் என்கிறார்.
மேலும்ஒரு பாடலில் கடுமையாக சாடுகிறார்.!
*இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை*
*இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு*
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் *குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்*
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.!
*மேலே கண்ட பாடலை சன்மார்க்கிகள் ஊன்றி படியுங்கள்*
மக்களை இருளில் தள்ளிய சாதித் தத்துவ சாத்திர சமயமதக் குப்பைகளை.
*மழை இல்லாது வரண்டு கிடக்கும் புன்செய் நிலமான பூமியில் வெடித்து பிளந்து கிடக்கும் பள்ளத்தில் எருவாக்கி போட்டு வெளியே வராமல் புதைத்து விடுங்கள் என்கிறார்*.
மேலும் *மக்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்கிய சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரமம் ஆச்சாரங்கள் போன்ற பழக்க வழக்கங்கள் எல்லாம் குழியை வெட்டி மீண்டும் வெளியே வராமல் உள்ளே போட்டு புதைத்து மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள் என்று கடுமையாகச் சாடுகிறார்*.
இவ்வாறு சாதி சமய மதங்களையும்.
வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரங்கள் யாவையும் தரக்குறைவாக சாடியவர்கள் வள்ளலாரைப்போல் உலகில் எவரும் இல்லை.
இவ்வாறு எல்லாம் விளக்கமாக வள்ளலார் சொல்லியும் சன்மார்க்கிகள் காதில் வாங்காமலும் கடைபிடிக்காமலும் காற்றில் பறக்கவிட்டு விட்டு.சாதி சமய மதக் குப்பைகளிலே உருண்டு புரண்டு கொண்டே இருப்பது மிகவும் பாவமாகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது.
வள்ளலார் சன்மார்க்க சங்கத்தார்களுக்கு என்றே ஒருபாடலைப் பதிவு செய்கிறார்!
*சன்மார்க்க சங்கத்தீர்* *சிற்றடியேன் உமது*
*தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்*
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!
சன்மார்க்கிகளின் (தாளை) காலைத்தொட்டு வணங்கிச் சொல்கிறேன் தயவுசெய்து கேளுங்கள் என்கிறார்.
சன்மார்க்கத்தில் ஏற்றத்தாழ்வு.
உயர்ந்தவன் தாழ்ந்தவன்.சாதி சமய மதம் போன்ற வேற்றுமை என்பது எதுவும் கிடையாது.
*எல்லோரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடையவர்கள்* என்பதை சன்மார்க்கிகள் உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் புன்மார்க்கத்தவர்போல் வேறு வேறு தெய்வங்களும் கிடையாது உண்மைக்கு புறம்பான கடவுள் வழிபாடும் கிடையாது.
*கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்பதுதான் உண்மையான கடவுளாகும் என்று சத்தியம் வைத்து சொல்லுகிறார்.
சன்மார்க்கிகள் இதுவரை இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க வேண்டுமாறு தயவு செய்து வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
*இறுதியாக வள்ளலார் சொல்லுகிறார்*
எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மை யின்பத்தை அளித்து சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.
*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே*!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் *முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!
உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க!
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை!
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக