கொடி விளக்கம் !
*கொடி விளக்கம்*
*21-10-1873 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பகல் 8-00 மணிக்கு* *மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் முன்* *முதன்முதலாக சன்மார்க்கக் கொடி கட்டினவுடன்*
*மகாஉபதேசம் என்னும்* *பேருபதேசம் செய்கிறார்*
*இப்படி ஒரு வித்தியாசமான உபதேசத்தை உலகில் எந்த ஞானியும் வெளிப்படுத்தவில்லை*
அப்போது வள்ளலார் சொல்லியது
இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள்.
*இது கடைசி வார்த்தை என்கிறார்*
*அதுசமயம் இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டுஇராதீர்கள் என்று அழுத்தமாகச் சொல்லுகிறார்*.
*பலமுறை படிக்கவேண்டும்*
நாம் பேருபதேசத்தில் உள்ள உண்மையான வார்த்தைகளை கருத்துக்களை நாம் ஊன்றி கவனித்துப் பலமுறைப் படித்து அதில் உள்ள உண்மைகளை அறிந்து வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
*சுத்த சன்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்கள் எவற்றை எல்லாம் பின்பற்ற வேண்டும்* *எவற்றை எல்லாம் ஒதுக்கிவிட வேண்டும்*.
*என்பதை மிகச் சுருக்கமாக தெளிவாக பேருபதேசத்தில் விளக்கி உள்ளார்*.
*அதில் நமக்கு முக்கியமாக சொல்லிஉள்ளது*
*இயற்கை உண்மை பெருநெறி ஒழுக்கம் யாதெனில் *கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக* *என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது*
அவை யாதெனில்* *தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது* *என்று தெளிவுப்படுத்துகிறார்*.
*இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு முடிவான இன்பா அனுபவித்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தை*
*தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகா மந்திர வாக்கியத்தை எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய்அறிவின் கண் அனுபவித்து எழுந்த உண்மை அனுபவ ஆனந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய*
*ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன் குறிப்பிப்பேன்*
*நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே ஆண்டவர் முதற்சாதனமாக*
*அருட்பெருஞ்ஜோதி*
*அருட்பெருஞ்ஜோதி*
*தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி!*
*என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்*
*ஆண்டவர் எடுத்து கொடுத்த மகா மந்திர மகாவாக்கியத்தை மட்டுமே தினமும் இடைவிடாது தோத்திரம் செய்து கொண்டே இருந்தால் எங்குரு தீமையும் நம்மை தொடராமல் பாதுகாக்கப்படும்* என்கிறார்.
மேலும் *எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே*! ( அகவல்)
*எங்கெங்கு இருந்து உயிர் ரேதெது வேண்டினும்*
*அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)
*உலகிலே மிகச்சிறந்த உண்மை மகாவாக்கிய மகாமந்திரத்தால் அடையும் இன்பத்திற்கு அளவேயில்லை என்பதை நாம் சத்தியமாக அறிந்து தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்*
*மகா மந்திரத்தின் முழுமையான பயன் எப்போது நமக்கு கிடைக்கும் என்றால்?*
வள்ளலார் சொல்லுவதை சரியான முறையாக பின்பற்றினால் கிடைக்கவேண்டிய ஆன்மலாபம் நிச்சயம் கிடைக்கும்.
இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்*. ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் *தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்*.
மேலும்.
இதுபோல், *சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், *அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை*.
*மேலும், இவைகளுக்கு எல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன் என்று மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்*
நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல்!
*ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்*
*நாம் வள்ளலார் சொல்லியவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றி ஒருநாளாவது அல்லது ஒருமணி நேரமாவது சிந்தித்து விசாரம் செய்து கொண்டு இருந்து இருந்தால் வேறு பொய்யான தத்துவ தெய்வங்கள் மீது பற்று வருமா?*
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டும் விசாரம் செய்து சுத்த உஷ்ணத்தை உண்டாக்கி இருக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்.*
*வள்ளலார் பாடல்*
உண்மையுரைக் கின்றேன்
இங்கு வந்தடைமின் உலகீர்
உரைஇதனில் சந்தேகித்து உளறிவழி யாதீர்
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ் செய் வல்லான்
என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!
*மேலே கண்ட பாடலில் உண்மை உரைக்கின்றேன் என்று சொல்கின்றார் அதற்கு அர்த்தம் என்ன?* *மற்றவர்கள் எல்லாம் பொய் சொன்னவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்* மேலும் என்னுள் இருந்து இறைவன் இசைக்கின்றான் என்கிறார்.
ஆதலால்
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார் உருவில் வந்து மக்களின் நன்மைக்காக உண்மையை வெளிப்படுத்துகிறார்.*
மக்களை சுத்தப்படுத்தவே சுத்த சன்மார்க்கம் தோற்றுவிக்கப்பட்டது
கொடியேற்றுவிழாவில் இறுதியாக சொல்லுகிறார்.
*இதற்கு சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்க கொடி கட்டிக்கொண்டது அக்கொடி இப்போதுதான் கட்டிக்கொண்டது*
*அக்கொடி உண்மையில் யாதெனில் ?*
கட்டுரை நீளமாக உள்ளதால் அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு