வாழ்விக்க வந்த வள்ளல்.!
05-10-1873 ஆம் நாள் ஓர் புனித ஆன்மா தமிழ்நாட்டில் உதயமானது.
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு தமிழ்மாநிலம் கடலூர் மாவட்டத்தில்.சிதம்பரம் வட்டம் மருதூர் என்னும் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்த கிராம கணக்கராகிய இராமய்யா அவர் துனைவியார் சின்னம்மை என்னும் பெண்ணின் கருவறையில் ஓர் புனித பக்குவ ஆன்ம ஒளி நுழைந்து பத்தாவாது மாதத்தில் பஞ்சபூத உலகில் மனிதவடிவில் உதயமானது.
அந்த ஆன்மாவிற்கு இராமலிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது.அவருடைய ஆன்மா அருள் பூரணமாக(முழுமையாக) நிறைந்த பின் திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயர் நிலைபெற்றது.
ஆன்மீகம் என்ற போர்வையில் மனிதகுலத்தை மூடநம்பிக்கையால் உயர்ந்தகுலம்.தாழ்ந்தகுலம் என்றும்.உயர்ந்தசாதி.தாழ்ந்தசாதி எனவும் கடவுளால் கொள்கையான சாதி சமய மதங்களால் ஒதுக்கப்பட்டவர்கள். பிரிக்கப்பட்டவர்கள்.தீண்டத்தகாதவர்கள் எனவும் பலவகையான வேதம் ஆகமம். புராணம்.இதிகாசம்.சாத்திரங்கள் வாயிலாக கொடுமைப்படுத்திய சாதி சமய மதங்களின் கொள்கைகளை.முல்லை முல்லால் எடுப்பதுபோல் .புதிய பகுத்தறிவு சார்ந்த.அருள் அறிவு சார்ந்த.தனிமனித ஒழுக்கம் சார்ந்த பொதுவான தெளிவான ஆன்மீகத்தை தொடங்கி வைக்க இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளல்பெருமான் அவர்கள்.
பழைய ஆன்மீகத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் குழிதோண்டிப் புதைக்கவும்.இருக்கும் இடம் தெரியாமல் அகற்றவும் வந்தவர்தான் ஆன்மீக புரட்சியாளர் வள்ளலார் அவர்கள்.அறியாமையில் அவதிப்பட்டு அல்லல்பட்டு தாங்கமுடியாத துன்பத்தினால் அழிந்து கொண்டு கிடக்கும் அனைத்து உலக மனித சமுதாயத்தை அழியாமல் புதிப்பிக்க வந்த புத்துலக புனித சிற்பி தான் வள்ளலார்.
*போரிட்டு அழிந்து கொண்டுள்ளார்கள்!*
மனிதகுலம் ஒற்றுமை இல்லாமல் போரிட்டு அழிந்து கொண்டு இருக்கும் காரிய காரணத்தை ஆண்டவர் துணையால் கண்டுபிடித்தார் வள்ளலார்.
உலகில் எண்ணற்ற ஞானிகளும் சித்தர்களும் தோன்றினார்கள். அவ்வாறு தோன்றிய சில ஆன்மீக ஞானிகளால்.அருளாளர்களால்.சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது தான் சாதி.சமயம்.மதம் போன்ற ஆன்மீக கற்பனை கதைகளாகும்.அவற்றின் கொள்கை கோட்பாடுகளை வெளிப்படுத்த தோன்றியதுதான் பல சாதி சமய மதம் போன்ற பழைய நெறிகளாகும்.
அந்நெறிகளின் கடவுள் கொள்கைகளால் உண்மை தெய்வம் எது ? என்று உணராமல் அறியாமல் அருள் வழங்கும் தெய்வத்தை தொடர்பு கொள்ளாமல். ஒவ்வொருவரின் கருத்துகளின் வேறுபாட்டால் ஒற்றுமை குலைந்து விட்டது.சாதி வேற்றுமை.சமய வேற்றுமை.மத வேற்றுமை போன்ற பிரிவினை ஏற்பட்டு. போரிட்டு இறந்து வீண் போனார்கள்.போகின்றார்கள் என்னும் அடிப்படை உண்மையை இறைவன் உணர்த்த வள்ளலார் அறிந்து கொண்டார்.
வள்ளலார் பாடல் !
- பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
- பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
- பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
- பேதமுற் றங்கும்இங்கும்
- போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
- போகாத படிவிரைந்தே
- புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
- பொருளினை உணர்த்திஎல்லாம்
- ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
- என்பிள்ளை ஆதலாலே
- இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
- றெண்ணற்க என்றகுருவே
- நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
- நிறைந்திருள் அகற்றும்ஒளியே
- நிர்க்குணானந்த பர நாதாந்த வரைஓங்கு
- நீதிநட ராஜபதியே.!
மக்களை குறை சொல்வதை விட சாதி சமயம் மதங்களையும். அவற்றின் கொள்கைகளையும் அவற்றில் உள்ள சூதுவாதுகளையும் அடியோடு அகற்றிவிட்டு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர் வள்ளலார்.
அதற்கு தாம் *அருள் பெறுவதே சரியான வழி என்பதை அறிந்து கொண்டு அருள் பெறும் வழியைத் தேடினார்.
இந்த பஞ்சபூத உலகில் அருள் பெற்றால் மட்டுமே மக்களை தன்வசமாக மாற்ற முடியும் என்பதை அறிந்து அருள் பெற முயற்சி செய்தார். அருள் வழங்கும் கடவுள் யார் என்பதை கண்டுபிடிக்க படாதபாடுபட்டார்.
முந்தைய அருளாளர்களுக்கு அற்ப அருள் வழங்கிய தெய்வங்களைப் பின்பற்றி பல ஆயிரம் அருட்பாடல்கள் பாடினார் அவர்களைவிட உயர்ந்த கருத்து ஆழம் உள்ள பாடல்களை எல்லாம் பாடினார் துதித்தார் அழுதார் புலம்பினார். எந்த கடவுளும் அருள் வழங்கவில்லை.அக்கடவுள்களுக்கு அருள்வழங்கும் தகுதியும் இல்லை என்பதை தனது உயர்ந்த பகுத்தறிவைக் கொண்டு அறிந்து கொண்டார்.
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டுகொண்டார்* !
எல்லா ஆன்மாக்களுக்கும். எல்லா கடவுள்களுக்கும்.எல்லா உயிர்களுக்கும்.எல்லாக். கடவுள்களுக்கும். எங்கு எங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருள் வழங்கும் ஒரே கடவுள் தான் உள்ளார் என்பதை அறிந்துகொண்டார்.
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடம்* !
அவர் இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில்.இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய *அருட்பெருஞ்ஜோதி சொரூபராய்*. இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடனச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் பொருட்டுத்
திருவுளக் கருணையாற் செய்து அருள்கின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மைக் கடவுளைத் தெரிந்து கொண்டேன் என்கிறார்.
வள்ளலார் பாடல்!
அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என் அம்மையை என்அப்பனை என் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்யவல்ல தனித்தலைமைச் சித்த சிகா மணியை
மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்
கருணை நடம் புரிகின்ற கனகசபா பதியைக் கண்டுகொண்டேன் கலந்து கொண்டேன் களித்தே.!
என்னும் பாடல்வாயிலாக உண்மைக் கடவுளை கண்டுகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தேன் என்கிறார். கலந்து கொண்டேன் என்றால் அருள்பூரணத்தைபெற்று மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதியுடன் கலந்து நிலைத்து இருப்பதாகும்.மேலும் எவராலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒளி உடம்புடன் வாழ்கிறேன் என்பது பொருளாகும்.
இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.எல்லா அண்டங்களையும்.எல்லா உலகங்களையும். தோற்றுவித்தல்.இயக்குவித்தல்.அடக்குவித்தல்.மயக்குவித்தல்.தெளிவித்தலும் ஆகிய ஐந்தொழில்களையும் இயக்குகின்ற ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!
வள்ளலார் பாடல் !
ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்ன முடியாது அவற்றின் ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண்
- டம் சதாசிவ அண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர் தம் சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும் இவ் வண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக