வள்ளலார் தனிப்பிறவி !
*வள்ளலார் தனிப்பிறவி* *!
உலகில் தோன்றிய பல ஞானிகள் பூர்வ புண்ணியத் தொடர்பாலும். சுய சிந்தனை ஆற்றலாலும்.அபூர்வ அறிவாலும்.
நல்வினைப் பயனாலும்.
அனைவரும் ஆண் பெண் உறவாலும் அவதரித்தவர்கள்.
உலக உயிர்களின் நன்மைக்காகவும் மனிதகுல நல் வாழ்க்கைக்காகவும் இறைவன் அருளைப்பெற்று வாழ்ந்து மக்களுக்கு ஏதோ சிலபல நன்மை செய்தவர்கள் என்பதால் அவர்களை ஞானிகள் என்றும்.
அருளாளர்கள் என்றும் போற்றப்படுவார்கள்.
இறைவன் அருளைப்பெற்ற அருளாளர்கள் ஞானிகள் என்று போற்றப்படுபவர்கள்உலக மக்களுக்கு ஒரே கருத்தை.ஒரே கொள்கைகளை போதிக்கவில்லை.
ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துகளாகவே போதித்து உள்ளார்கள்.
ஒவ்வொருவரின் கருத்துக்கள் கொள்கைகளை மக்கள் மத்தியிலே கொண்டு செல்ல மதங்கள்.சமயங்கள்.சாதிகள் தோன்றின.அதனால் ஒற்றுமை இல்லாமல் மக்கள் பல பிரிவினைக்களுக்கு தள்ளப்பட்டார்கள்.
அவர்கள் போதித்த கொள்கைகளுக்கு வெவ்வேறான சாதி.சமயம்.மதம் போன்ற சாயம் பூசி .இந்துமதம்.
இஸ்லாம்மதம்.
கிருத்துவமதம்.
பவுத்த மதம் முதலிய மதங்களுக்கு தனித்தனி பெயர் சூட்டி உள்ளார்கள்.
கடவுளின் ஏகதேச அருளைப்பெற்று அருளாளர்கள் கடவுளின் பெயரால் போட்டி பொறாமை.வஞ்சகம்.சூது.வாது போன்ற சுயநலத்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உண்டாக்கி சண்டையிட்டு மாண்டுபோனார்கள் மாண்டுகொண்டும் உள்ளார்கள்.
இவற்றை தடுத்து நிறுத்தி ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.உண்மையானக் கடவுளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும்.அக்கடவுளை நேரடியாக தொடர்பு கொண்டு அருளைப்பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே.
இறைவனால் வள்ளல்பெருமானை இவ்வுலகிற்கு வருவிக்க உற்றார் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளலார் வருவிக்க உற்ற பாடல் !
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
*என்பிள்ளை ஆதலாலே*
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே*
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே.!
மேலும் ஒருபாடல் !
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனை இந்த
*உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே*.!
மேலும் ஒருபாடல் !
பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பவநெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி அறிந்திலர் *இறந்திறந் துலகோர்*
*செறிஇருள் அடைந்தனர்* ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு *பொதுநெறி எனும்வான்*
*புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்*
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!
மேலே கண்ட பாடல்கள் வள்ளலார் வருவிக்க உற்ற காரண காரியத்தை தெளிவாக தெரியப்படுத்துகின்றார்.
வள்ளலார் ஆண் பெண் உறவில் பிறக்கவில்லை.
சம்புபட்சம் (சம்புபக்ஷம் ) வாயிலாக பிறந்தவராகும்.
அதன் விபரம் வருமாறு..
. *பக்ஷபேதமும் சிருஷ்டியும்*
சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை.
பக்ஷமாவன--- *அணுபக்ஷம்,* *பரமாணுபக்ஷம்,* *சம்புபக்ஷம்*, *விபுபக்ஷம்,* *பிரகிருதிபக்ஷம்* ஆக 5. ஐந்து வகைப்படும்.
இவற்றில் சம்பு, விபு - இவ்விரண்டிற்கும் அபக்குவமில்லை. மற்ற மூன்றிற்கும் பக்குவ அபக்குவ முள. இதற்குப் பிரமாணம். *அடர்மலத்தடையால் தடையுறும்", "தடையுறாப் பிரமன்" என்னும் திருப்பாசுரங்களின்* உள்ளக்கிடையா லுணர்க.
மேற்படி பக்ஷ சிருஷ்டி விசித்திரங்களாவன:
அணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி ஒஷதிகளாலும் பௌதிகங்களாலும்.
ஆகார மூலமாய் ஸ்திரீ புருஷ சம்பந்தத்தோடு உண்டாக்குவது.
மேற்படி பக்குவ சிருஷ்டியாவது புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பது போல் தன் அஸ்தத்தால் ஸ்திரீயைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு தேகசம்பந்தஞ் செய்வித்து உண்டாக்குவது.
பரமாணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி தேகத்தைக் கரத்தால் பரிசித்து ஊன்றிப் பார்த்த உடன் கருத்தரித்தல்.
மேற்படி பக்ஷத்தில் பக்குவம் கண்ணால் பார்த்த உடனே புணர்ச்சியன்றிக் கருத்தரித்தல்.
*சம்புபக்ஷம் வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல்*.
பிரகிருதி பக்ஷத்தால் சங்கற்பித்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிண்டம் கீழ்த்தோன்றுதல்.
விபுபக்ஷசிருஷ்டி பார்த்தவுடன் திரண முதலானவற்றையும் நரனாகச் செய்வித்து அநேக விசித்திரங்கள் உண்டுபண்ணுவது. மேற்படி சிருஷ்டிகள் பல;
வேதாகமங்களிலேயும் பலபட விரிந்தன.
*வள்ளலார் சம்புபட்சத்தில் பிறந்தவர்...*
கடலூர் மாவட்டம்.சிதம்பரம் அருகில் உள்ள மருதூருக்கு சன்னியாசி உருவம் தாங்கிவந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இராமய்யா மனைவி சின்னம்மையிடம் பசிக்கு உணவு கேட்டு உண்டு பின். என்பசியை போக்கிய உமக்கு உலகில் உள்ளவர்கள் அனைவருடைய பசியையும் போக்க ஒரு ஞானக்குழந்தை பிறக்கும் என்று வாயால் சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார்.
அவர் வாயால் சொல்லிய தருணத்தில் சின்னம்மை கர்பமாகிவிடுகிறார். இறைவன் வாயால் சொல்லிய உடன் கருதரிப்பதற்கு பெயர் *சம்பு பட்சம்* என்று பெயர்.
அதனால்தான் *இறைவனால் வருவிக்க உற்றேன் அருளைப்பெற்றேன் என்கிறார்*.
பள்ளிக்கு போகாமல் உலகியல் கல்விக் கற்காமல் எல்லா அறிவும் எல்லா ஞானமும்.எல்லா அனுபவமும் இறைவனாலே கொடுக்கப்பட்டது.
எல்லா ஞானிகளையும் விட தனித்தன்மை வாய்ந்த தனிப்பிறவி வள்ளலார். *உண்மை உரைக்கவந்த உத்தமர்* .
திருஅருளாலே எழுதிய நூல் என்பதாலே *திருஅருட்பா* என்று பெயர் வழங்கப்பட்டது.
இராமலிங்கம் என்ற பெயர் முன்னால் தனது உண்மைத் தந்தையான இறைவனைக் குறிக்கும் சிதம்பரம் ராமலிங்கம் என்று தன் பெயரை எழுதுவார். உபகாரத் தந்தையாகிய இராமய்யா பெயரை எங்கும் எதிலும் பயன் படுத்தியது இல்லை.
*வள்ளல் பெருமானுக்கு முன்பிறவியும் இல்லை.பின்பிறவியும் இல்லை.கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் வள்ளலார்*.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார்.
வள்ளலாரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
எனவே மற்ற ஞானிகளுடன் வள்ளலாரை ஒப்பிட்டு பேசுவது அறியாமையின் செயலாகும்.
வள்ளலார் பாடல் !
உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
*எண்மையினான் எனநினையீர்* *எல்லாஞ்செய் வல்லான்*
*என்னுள்அமர்ந் திசைக்கின்றான்* *இதுகேண்மின் நீவிர்*
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!
என்னும் பாடலின் வாயிலாக உலக மக்களுக்கு பொதுவான உண்மையை *திருவருளால்* தெளிவாக சொல்லுகின்றார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு