*சுத்த சன்மார்க்கம்* !
*சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்*
*சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்*.!
மார்க்கம் என்றால் வழிகாட்டுதல் என்று பெயர்.
நல் வழிக்காட்டுதல் சன்மார்க்கம் என்றும்
தவறான வழிக்காட்டுதல் துன்மார்க்கம் என்றும் சொல்லப்படும்.
உலகம் தோன்றியதில் இருந்து மனிதர்களால் தோற்று விக்கப்பட்டது தான் பல வகையான துன்மார்க்கங் களாகும்.
துன்மார்க்கம் என்பது என்ன ?
*ஒன்றே குலம் ! ஒருவனே தேவன்*! என்பதை உணராத..அதன் உண்மை எதுவென்று அறியாத ஆன்மிகவாதிகள். கடவுளின் பெயரால். பலதரப்பட்ட சாதிகள் சமயங்கள் மதங்களைப் பிரித்து.கடவுள்களைப்பிரித்து. மனிதர்களை படுகுழியில் தள்ளியதற்கு பெயர்தான் துன்மார்க்கம் என்று வள்ளலார் சொல்லுகின்றார்.
வள்ளலார்பாடல் !
பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என் றிடும் ஓர்
பவநெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ
*புன்னெறி* தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராஜ என் சற்குரு மணியே.!
மேலே கண்ட பாடலில் முக்கியமான செய்தியை மக்களுக்குச் சொல்லுகின்றார்.
*செந்நெறியான உண்மை சுத்த சன்மார்க்கம்* அறியாததனால்.
சாதி சமய மதம் போன்ற துன்மார்க்கம் சார்ந்த நெறிகள் தோன்றின. ஆதலால் மக்கள் பிறந்து பிறந்து.இறந்து இறந்து இருளான வாழ்க்கையில் அழிந்துகொண்டு உள்ளார்கள்.
இந்நிலைமை உலகம் முழுவதும் *கொரோனோ* தொற்று போல் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களைப் பற்றிக் கொண்டுள்ளன.
இந்த தீராத தொற்று நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றவும் சுத்த சன்மார்க்கத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும். *இயற்கை உண்மை* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்* வருவிக்க உற்றவர் வள்ளலார்.
*உண்மை ஒழுக்க நெறியை உலகிற்கு தெரியப்படுத்த வந்தவர்தான் வள்ளலார்*.
*வள்ளலார் பாடல்* !
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் *சன்மார்க்க சங்கத்* தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் *அருளைப் பெற்றேனே*.!
வள்ளலார் இவ்வுலகத்திற்கு இறவனால் வருவிக்க உற்றவர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வள்ளலார் வந்ததும் முதல் வேலையாக பொய்யான துன்மார்க்கத்ததை ஒழித்து சுத்த சன்மார்க்கத்தை நிறுவ திட்டமிடுகிறார்.
காரணம் ... இன்று உலகம் முழுவதும் கொலை.கொள்ளை.கற்பழிப்பு.
தீவிரவாதம்.
பயங்கரவாதம்.
லஞ்சம். லாவண்யம்.
தவறான ஆட்சிமுறை.
உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பகடநாடகம்.வஞ்ச புகழ்ச்சி.ஒற்றுமையே இல்லாமல் வேற்றுமை .சுயநலம்.தற்புகழ்ச்சி.தவறான வியாபாரம்.தவறான கருத்துக்கள் போன்ற அனைத்து செயல்களுக்கும் அடிப்படைக் காரணம் சாதி சமய மதங்களே காரண காரியமாகும்.
எனவேதான்
*கடவுள் வழிப்பாட்டு முறையில் மாற்றம் செய்கிறார்*.!
உருவ வழிபாடான சரியை கிரியையான வழிபாட்டில் ஆன்ம லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை.அதனால் எந்த ஒரு பயனும் இல்லை.
மரணம்தான் முடிந்த முடிவாகும் என்கிறார்.
பக்தி வழிப்பாட்டு மார்க்கத்தினால் நம் உடம்பில் உள்ள புறம் புறப்புறமான மன உருக்கம்.மனநெகிழ்ச்சி.மனமகிழ்ச்சி மட்டுமே உண்டாகும்.
அவை ஜீவன் ஆன்மாவைத் தொடர்பு கொள்வதில்லை.
அகம் அகப்புறம்பான ஜீவன் ஆன்மாவை தொடர்பு கொள்ளும் வழியான *நல் யோகம் ஞானம் மார்க்கத்தை மக்களுக்கு போதிக்கிறார்*.
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறார்.
ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற பக்தி.தவம். தியானம்.யோகம் போன்ற யாவும் வெற்று மாயா ஜாலங்கள் என்று வெளிப்படையாக போட்டு உடைக்கின்றார்.
*ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் அருளும் அனுபவத்தால் தானாக விளங்கும் என்கிறார்*
ஜீவகாருண்யத்தால். ஆன்ம உருக்கம்.ஆன்ம நெகிழ்ச்சி. ஆன்ம மகிழ்ச்சி உண்டாகும்.ஆன்ம மகிழ்ச்சியால்தான் அருள் உண்டாகும் .அருள் உண்டானால் மரணத்தை வெல்ல முடியும் என்ற உண்மையை உலக மக்களுக்கு பறை சாற்றுகிறார்.
அன்பு.தயவு.கருணை.அருளை மட்டுமே போதிக்கின்ற மார்க்கம்தான் சுத்த சன்மார்க்கம்.
மக்கள் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமானால்.
துன்மார்க்கத்தை பின்பற்றாமல் தொலைக்க வேண்டாம்.அகற்ற வேண்டும்.
வள்ளலார் பாடல் !
*துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன்*
சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் -
என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி துன்மார்க்கத்தை தொலைத்து விட்டேன். உண்மை.நேர்மை.ஒழுக்கம் சார்ந்த தூய்மையான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* தோற்று வைத்து விட்டேன்.
ஆதலால் உண்மை தெரிந்து கொண்ட அறிவு சார்ந்த அருள் சார்ந்த வானாட்டார்கள் எல்லாம் புகழ்கின்றார்கள்.
ஏன் புகழ்கின்றார்கள் ?
*வள்ளலார்பாடல்*
துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. !
*வள்ளலார் காலத்திற்கு முன்னாடிவரை மரணம் என்பது இயற்கையானது என்றும்.ஆறிலும் சாவு.நூறிலும் சாவு என்று சொல்லிக்கொண்டு இருந்த உலகம்*.
வள்ளலார் வந்துதான் மரணம் என்பது இயற்கையானது அல்ல.செயற்கையானது என்று உறுதியுடன் கூறுகிறார். *தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்கள்* என்கிறார்.தவறு செய்வதால்தான் மரணம் வருகிறது என்கிறார். *பாவத்தின் சம்பளமே மரணம் என்பதாகும்*.
பிறப்பு இறப்பு இல்லாமல் நாம் வாழும் இந்த உடம்பையே அருள் ஒளிதேகமாக மாற்றி? மரணத்தை வெல்லும் வழியை வார்த்தையால் சொல்லி காட்டியதோடு அல்லாமல்.தன் உடம்பை *ஒளிதேகமாக* மாற்றி மரணத்தை வென்று வாழ்ந்துகொண்டுள்ளார் வள்ளலார்.
எனவே மேலே கண்ட பாடலில் *துஞ்சாதே நிலை* (மரணம் அடையாத நிலை ) ஒன்று சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே உள்ளது.
எஞ்ஞாத அருளாலே நான் பெற்றுக்கொண்டேன்.நீங்களும் என்போல் அடைவதற்கு எந்த தடையும் இல்லை.ஆதால் அஞ்ஞாமல் என்னோடு கலந்து ஆடுதற்கு வாருங்கள் என்று ஆன்மநேய உரிமையோடு அழைக்கின்றார்.
தடையற்ற மார்க்கமே சுத்த சன்மார்க்கம்.
நாம் விடவேண்டியதை விட்டால்தான் பெற வேண்டியதை பெறமுடியும்.
*துன்மார்க்கத்தை விட்டு சன்மார்க்கத்தை சார்வீர்* என் அன்புடன் அழைக்கின்றார்.
*வள்ளலார் பாடல்* !
துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே
தூக்கத்தை விடுகின்ற! துணைஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
எத்துணை கொள்கின்றீர் *பித்துல கீரே*.!
மேலே கண்ட பாடலில் *எளிய தமிழில்* துன்மார்க்கத்தை விட்டு வாருங்கள் என தெளிவாக சொல்லுகின்றார்.
*பிறப்பையும் இறப்பையும்* தவிர்த்து பேரின்ப வாழ்வில் வாழும் வழியைக் காட்டுவதே.சாதி.சமய.மதங்கள் அற்ற உண்மையான மார்க்கமே சுத்த சன்மார்க்கமாகும்.இந்த உண்மையை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்து உணர்ந்து அறிந்து.புரிந்து பின்பற்ற வேண்டும்.சுகமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.
*சாதி சமய மதங்களை விடாமல் சன்மார்க்கத்தை பின்பற்றுவதால் எந்த பயனும் கிடைக்கவே கிடைக்காது*.
வள்ளலார் பாடல் !
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன்என! உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே*.!
மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக