அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 12 ஜூலை, 2020

அரிய மருந்து !

*ஆபத்துக்களை காப்பாற்றும் அரிய மருந்து* !

இன்று உலகம் முழுவதும் கொரோனா கிருமிகளின் தொற்று அதிகரித்து மனித உடம்பில் பற்றி உயிர்போகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தொற்றை அழிக்க .விலக்க.
ஒழிக்க உலக சுகாதார மருத்துவக்கழகம் மருந்து தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன.

பல மருத்துவத் துறைகள் பலவிதமான பழைய புதிய மருந்துகளை சொல்லிக்கொண்டு உள்ளார்கள்.

உடம்பிற்கு எதிர்ப்பு சக்திகள் இல்லாத்தால் கிருமி தொற்று உடனே மனித உடம்பை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

எதிர்ப்பு சக்தி எப்படி வரும் எதனால் உண்டாகும்.மனித உடம்பிற்கு உண்டான எதிர்ப்பு சக்தியைப் பெறும் வழியை வள்ளலார் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே சொல்லி உள்ளார்.

*அதற்குப் பெயர் ஜீவகாருண்யம் என்பதாகும்*.

வள்ளலார் பதிவு செய்துள்ளது.

சூலை குன்மம் குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பே *நல்ல மருந்தாக* அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்கியத்தை உண்டு
பண்ணுமென்பது உண்மை.

 பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்துகொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், *அந்த சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டுபண்ணுமென்பது உண்மை*.

கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக்

கோடையில் வெயிலும் வருத்தாது,

மண்ணும் சூடு செய்யாது -

பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா -

விடூசிகை. விஷக்காற்று விஷசுரம். முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா -
அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் -

அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் -

சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் -

வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் -

சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் - துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ் செய்யப்படார்கள் -

*சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது*.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது

*தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத்தக்க தென்பது கடவுளாணை யென்றறிய வேண்டும்*

மேலே கண்ட உண்மைகளை உணர்ந்து தெரிந்து ஆதரவு அற்ற ஏழைகள்.முதியோர்.உடல் உறுப்பு குறைவு பெற்றவர்களுக்கு.

அவரவர்களால் இயன்ற அளவு உபகாரம் செய்தால் .அவற்றை அனுப்பவின்ற மனிதர்களின் ஆன்ம இன்ப மகிழ்ச்சியானது .
கருணை அலைகளாக சென்று. செய்பவர்களின் ஆன்மாவில் பதிந்து எதிர்ப்பு சக்தியை நிரந்தரமாக உருவாக்கும் என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி*!

எனவே *கொரோனோ தொற்று நம்மை தாக்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால்.
*ஜீவகாருண்யமே உயிரைப் பாதுகாக்கும் *அருமருந்தாகும்*.

*மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ளார்*.

சீவகாருணிய ஒழுக்க முடையவர்களாகிச் சீவர்களைப் பசி யென்கின்ற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் செய்கையை யுடைவர்க ளாயினும், தேவர், முனிவர், சித்தர், யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்களென்று *சர்வசக்தியை யுடைய கடவுள் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படுமென்று அறிய வேண்டும்*.

இதைவிட ஒரு உண்மையை எவராலும் சொல்லமுடியாது.

*மேலும் மருந்து சொல்கிறார்*.!

உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே!

 சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே!

 இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே!

 மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே !

 நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே !

என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே !

மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே !

சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே!

*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு* ! என்பதை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நன்மைகளும் நம்மை தேடிவரும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக