வியாழன், 14 மே, 2020

பசிப்பிணியைப் போக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் !

*பசிப்பிணியைப் போக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்*.!

உலகில் மண்ணாசை. பெண்ணாசை.பொன்னாசை போன்ற எல்லா ஆசைகளையும் விட்டுவிட்டு வாழ்ந்திடலாம். *பசி இல்லாமல் உணவு இல்லாமல் வாழவே முடியாது*.

உலகம் முழுவதும் இப்போதுள்ள இக்கட்டான கொரோனோ வைரஸ் தொற்றால் தடை உத்தரவு  நடந்து கொண்டு உள்ள காலகட்டத்திலும் ஏழை எளிய வேலை இல்லாத மக்களின் பசிப்பிணியை உணர்ந்து அறிந்து.

*இந்திய மக்களின் பசியைப் போக்கிக் கொண்டு வருகிறார்கள்*.

*யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது*.

ஆட்சியாளர்கள்.ஆட்சி அதிகாரிகள்  முதல் பல எதிர் கட்சியை சார்ந்தவர்களும்.
தொண்டு நிறுவனங்களும்.
வள்ளலார் கொள்கை சார்ந்தவர்களும்.தனிப்பட்ட ஜீவகாருண்யம் உள்ள சமுசாரிகளும்.

மற்றும் பலதரப்பட்ட தயவுள்ள.கருணை உள்ள மக்களும் அவரவர்களால் இயன்ற அளவு மக்களின் பசியின் கொடுமையை அறிந்து *பொருளாகவும்.உணவாகவும்* வழங்கி பசியைப் போக்கிக் கொண்டு வருகிறார்கள்.

இந்தியதேசத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால்  மக்களின் பசிக் குறிப்பு அறிந்து பட்டினி இல்லாமல்  மக்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றது மிகப்பெரிய அதிசயமாகும்.உண்மையாகும்.

*கொரோனோவால் உயிர் இழந்து இருக்கலாம் பசியால் மக்கள் உயிர் இழக்கவில்லை*.

மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் உயிர் இழந்தோர் என்னும் செய்தி இதுவரையில் வராமல் இருப்பதே இந்திய மக்களின் தொண்டு உள்ளங்களுக்கு கிடைத்த
ஏகோபித்த வெற்றியாகும்.

தம் உயிர்போல் மற்ற மனிதர்களின் உயிரும் ஒன்றுதான் என நினைந்து இடைவிடாது பரோபகாரம் செய்த மனித நேயத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது.

எனவே வள்ளலார் கொள்கையின் முதல் பணியான பசிப்பிணியைப் போக்கும் ஜீவகாருண்ய செயல்களை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி செயல்படுத்திக் கொண்டு வருகின்ற  இந்தியா மற்றும் அயல்நாட்டு மக்களின் அன்பு.தயவு. கருணை உள்ள அனைத்துதர *மக்களையும் தெய்வங்களாக நினைந்து வாழ்த்தி வணங்குகிறோம்*.

*உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்க வேணுமாய் வேண்டிக் கொள்கிறோம்*.

*வள்ளலார் பாடல்* !

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

மற்றவர்களின் பசியை அறிந்து பசியைப் போக்காதவர்கள்.யாருக்கும் உதவாத எட்டி மரம் போன்றவர்கள்.

எட்டி மரத்தில் பார்ப்பதற்கு  அழகான பழம் பழுக்கும்.ஆனால் அவற்றை உண்ண முடியாத அளவிற்கு கசப்பாய் கசக்கும்.

அதே போல் யாருக்கும் உதவாத எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும்.அவர்கள் பயனில்லாதவர்கள்.
அவர்கள்  உலகில் இருந்தால் என்ன ?.வாழ்ந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ? மேலும் அவர்களைப் பைத்தியகார்ர்களுக்கு சமம் என்கிறார் வள்ளலார்.

*எட்டி பழுத்தால் என்ன ? இய்யாதவன்( கொடுக்காதவன்) வாழ்ந்தால் என்ன* ? என்ற பழமொழியே தமிழகத்தில் உண்டு.

எனவே பசிப்பிணியைப் போக்குவதே பரம புண்ணியமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருவருட்பா ஆராய்ச்சி மையம்
வடலூர்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு