வியாழன், 7 மே, 2020

குடிகாரன் குடியை வெறுப்பானா ! ?

*குடிகாரன் குடியை வெறுப்பானா* ?

மதுவும் மாமிசமும் உண்ணும் பழக்கம் உடைய அரசு மதுவையும் மாமிசத்தையும் சாதாரணமாக ஒழிக்கமாட்டார்கள்.

நாட்டையும் நாட்டு மக்களும் துன்பம் துயரம் அச்சம் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழவைக்க வேண்டுமானால். மக்களை வழிநடத்தும் நல்ல அரசும்.நல்ல ஆட்சியாளரையும் தேர்ந்து எடுப்பது மக்களின் முக்கிய கடமையாகும்.

*மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி*.
*மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி*.

இந்த கொடூரமான ஆட்சி மாறவேண்டுமானால் ஆட்சியில் யாரை அமரத்த வேண்டும்? யார் ?  ஆட்சி செலுத்த வேண்டும் என்கிறார் வள்ளலார் .

*அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க* !

வள்ளலார் பாடல் !

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க -

தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக

நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து.!

*என்ற பாடல்வரிகளை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.சிந்தித்து செயல்பட வேண்டும்*.

எத்துணையும பேதம் இல்லாமல்.எல்லா உயிர்களையும் சாதி.சமய.மதம் போன்ற பேதமில்லாமல் எல்லா மக்களையும் தன் உயிர்போல் பாவிக்கும் குணமுடைய.ஆன்மீக அருளாளர்கள் நாட்டையும்  ஆட்சி அதிகாரங்களையும்  நல்வழி நடத்த  வேண்டும்.நடத்த முடியும்.

அப்போதுதான் எந்த குறைபாடும் நேராது..மக்களை பயமுறுத்தும் எந்த தீய சக்திகளும் மக்கள் பின் தொடராது. .இயற்கை செயற்கை போன்ற திடீர் ஆபத்துக்களும் நெருங்காமல் முன்கூட்டியே அவற்றை அப்புறப்படுத்தி மக்களை காப்பாற்ற முடியும்.

*எனவே ஆட்சி அதிகாரம் செய்யும் நல்ல பண்பு. ஒழுக்கம்.நீதி.நேர்மை.சத்தியம்.அகிம்சை.உண்மை உள்ள பண்பாளர்களை மக்கள் தேர்வு செய்து ஆட்சியில் அமர்த்த வேண்டும்*.

மக்களே ! அறிவை பயன்படுத்துங்கள். திருந்துங்கள். தேர்வு செய்யுங்கள்.
செயல்படுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு