ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

உண்மையான ஜீவகாருண்ய பணி !

உண்மையான ஜீவகாருண்ய பணி !

உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க சங்கங்கள். வள்ளலார் கொள்கையை சிரமேற்கொண்டு  பின்பற்றும் சன்மார்க்க தயவுடைய சான்றோர்கள் அனைவரும் உண்மையான ஜீவகாருண்ய பசிப்பிணி போக்கும் பணியை தங்களால் முடிந்த அளவு சிரமம் பாராமல் ஓய்வு இல்லாமல். சிறப்பாக  செய்து வருகிறார்கள். அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

இதுவே காலம் கருதி செய்யும் உண்மையான ஜீவகாருண்ய பணியாகும்.

உலகம் முழுதும் மக்களை பயத்தினால் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் பயங்கர ஆபத்தான கொரோனோ தொற்று வைரஸ் கிருமியின் கோர தாண்டவம் சொல்லொனா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தருணத்தில் அனைத்து நாடுகளிலும் தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளார்கள்.

இந்த கொரோனோ வரக் காரணம் என்னவென்று தெரியாமல். அறிவியல் கழக ஆராய்ச்சி யாளர்களும்.உலக சுகாதார மருத்துவக் கழக ஆராய்ச்சி யாளர்களாலும்.மற்றும் ஆன்மீக சிந்தனையாளர்களும்.அதன் தன்மை உண்மை கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கின்றார்கள்.

*இது ஒரு உயிர்க்கொல்லி வைரஸ்*.

இறைவனால் படைத்த உயிர்களை மனிதர்கள் கொன்று குவித்து உணவாக உண்டு மகிழ்கிறார்கள். இவை உலகம் முழுவதும் பல்லாயிரம் ஆண்டுகளாக வெரித்தனமாக தினமும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

சாதி.சமய.மதம் என்ற ஆன்மீக கொள்கைகளிலும்.
கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்து மாமிசம் உண்ணும் பழக்கத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பசினாலும்.வறுமையாலும் உயிர்களைக் கொன்று  உணவாக உண்ணும் பழக்கம் ஆரம்பகாலத்தில் உண்டாகியுள்ளது.

இறைவனால் படைத்த உயிர்களை கொன்று உண்பது பெரிய குற்றம் என்றும்.தவறான பழக்கம் என்றும் எந்த ஆன்மீக அருளாளர்களும் வெளிப்படையாக சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த அருளாளர்கள். *திருவள்ளுவர்*. *திருஅருட்பிரகாச வள்ளலார்* .இவர்கள் இருவரும் மட்டுமே உயிர்க்கொலை செய்வதும்.அதன் மாமிசம் உண்பதும் கொடிய பாவச்செயல் என்பதை வெளிப்படையாக சொல்லி உள்ளார்கள்.

ஏதும் அறியாத. வாயால் பேசி தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியாமல். மனிதர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாத அப்பாவி
*உயிர்களைக் கொன்று உண்பதால். மனித உயிர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த கொரோனோ தொற்று வைரஸ் மக்களை பயமுறுத்தி வருகின்றது. என்பதை அறிவுள்ள சான்றோர்கள் அறிந்து கொண்டு மக்களுக்கு போதிக்க வேண்டும்*.

*இதுவே சிறந்த மருந்தாகும்*! .

இதில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரேவழி உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலாலை உண்ணாமல் இருப்பதே சிறந்த மருந்தாகும்.

எனவேதான் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

*உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலாலை உண்ணாமல் இருப்பதே சிறந்த உயர்ந்த ஜீவகாருண்யமாகும்*

ஜீவன் என்றால் உயிர்.காருண்யம் என்றால் காப்பாற்றுவது.

*மற்ற உயிர்களைக் காப்பாற்றினால் தன் உயிர் காப்பாற்றப்படும்*.
என்பதே வள்ளலார் சொல்லியுள்ள ஜீவகாருண்யமாகும்*.

*எனவேதான் ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார்*.

ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற தியானம்.தவம்.யோகம்.வழிபாடுகள் யாவும் வெற்று மாயா ஜாலங்களே என்றார் வள்ளலார்.

மனிதர்களுக்கு வரும் துன்பங்கள் பசி.கொலை.பிணி.
தாகம்.இச்சை.எளிமை.பயம் போன்ற ஏழு வகையான துன்பங்களினால் ஜீவன் என்ற உயிர்களுக்கு துன்பம் உண்டாகி இறுதியில் மரணம் வருகின்றது.

வள்ளலார் ஜீவகாருண்யத்தை இரண்டாகப் பிரிக்கின்றார்.

*ஒன்று பர ஜீவகாருண்யம்*
*ஒன்று அபர ஜீவகாருண்யம்*.

பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளால் வரும் அபாயத்தை நிவர்த்தி செய்விப்பது சீவகாருணியத்திற்கு லக்ஷியமாக இருக்கவும்.

இவ்விடத்துப் பசியினாலும் கொலையினாலும் வரும் அபாயங்களை மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது தலைப்படும் காருணியம் என்று குறித்தது ஏன் என்று அறியவேண்டில்:-

சீவகாருணிய ஒழுக்கத்தில் பரசீவகாருணிய மென்றும் அபரசீவகாருணியம் என்றும் இருவகையாம். அவற்றில் *பசிநீக்கலும் கொலைநீக்கலும்* *பரசீவகாருணியம்*. *மற்றவை அபரசீவகாருணியம்*. ஆகலில், *பரசீவகாருணியம் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்று அறியவேண்டும்*.

அன்றியும், பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குவதற்குத் தண்­ணீர் கொடாமலிரார்கள். தண்­ணீர் கொடுப்பது பிரயாசமுமல்ல. தண்­ணீர் ஏரி, குளம், கால்வாய் முதலிய இடங்களிலும் இருக்கின்றது இதேபோல் உலக இன்பத்தை உண்டு பன்னுவது அபர ஜீவகாருண்யம் என்பதாகும்.

மனிதன் பசிப்பிணியைப் போக்குவதும்.உயிர்க்கொலை செய்யாமல் இருப்பது மட்டுமே ஜீவகாருண்யத்தின் முக்கிய வல்லபமாகும் செயலாகும்.

பசிப்பிணியைப் போக்குபவர்களுக்கும்.உயிர்க்கொலை செய்யாமலும் அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பவர்களுக்கு. *கொரோனோ* போன்ற கொடூர தொற்று தாக்குதலில் இருந்து மீட்கப்படுவார்கள்.

இதுவே ஜீவகாருண்யத்தின் முக்கிய வல்லபமாகும்.

என்வே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய. அன்புடைய சகோதர சகோதரிகளே *உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் சத்திய பிரமாணம் செய்து* கடைபிடியுங்கள் .இயற்கை பேரிடர் எதுவாக இருந்தாலும் இயற்கையாக காப்பாற்றப்படுவீர்கள்.

அதே நேரத்தில் பசியினால் துன்பப்படும் ஜீவர்கள் யாராக இருந்தாலும் பசிப்பிணியைப் போக்கி அவர்களை மகிழ்வித்து.அதனால் கிடைக்கும் ஆன்மலாபமான இறை அருளைப் பெற்று மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு