வெள்ளி, 31 ஜனவரி, 2020

வள்ளலார் ஜோதி தரிசனம் காட்ட சொன்னாரா ?

வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் காட்ட சொன்னாரா ?

கடவுள் வழிபாடு என்பது ஜீவகாருண்ய ஒழுக்கமே என்று அழுத்தமாக சொல்லி உள்ளார்.

மேலும் ஜீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறிய வேண்டும் என தெளிவான விளக்கத்தோடு ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும் என்றும்.அதனால் உபகார சக்தி விளங்கும் என்றும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் என்கிறார்.

ஜீவகாருண்யம் மறையும் போது அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்.அதனால் உபகாரசத்தி மறையும்.உபகாரசத்தி மறையவே எல்லா தீமைகளும் தோன்றும் என்று தெளிவான விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார்.

புண்ணியம் என்பது  எது ? பாவம் என்பது எது?

புண்ணியம் என்பது ஜீவகாருண்யம் ஒன்றே என்றும்.பாவம் என்பது ஜீவகாருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும் என்று அழுத்தமாக சொல்லுகின்றார்.

புண்ணியம் பாவம் என்பது கடவுள் தந்த விதி. என்னும் சமய மதங்களின் மூடத்தனமான கோட்பாட்டை உடைத்து எறிந்தார் வள்ளலார்.

கடவுள் அருளை எதனால் பெறக்கூடும்?  என்று அறிய வேண்டில்..

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்பதை அறிந்து தெரிந்து கடைபிடிக்க வேண்டும் என்கின்றார்.

அருளைப் பெற வேண்டிய அவசியம்
ஏன் ?

மனிதன் மட்டுமே அருளைப் பெற வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.

அருளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அருளாளர்கள் என்று பெயர்

இந்த உலகத்தில் அருளைப் பெறாமலே அருளாளர்கள் என்ற வேடத்தைப் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுபவர்களாக நிறைந்து உள்ளார்கள்.

மனித சமுதாயம் அவர்களை வேஷதாரிகள்.போலியானவர்கள் என்று அறியாமலே அவர்களின் பின் தொடர்ந்து அவர்களின் மூடநம்பிக்கைகளை கடைபிடித்து அறியாமையாலே அழிந்து கொண்டு கொண்டு உள்ளார்கள்.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு