பசி புரட்சி செய்தவர் வள்ளலார் !
பசியை வைத்து புரட்சி செய்தவர் வள்ளலார்.!
உருவத்தை வணங்கும் பக்தியினால் !
மன உருக்கம்
மனநெகிழ்ச்சி
மனமகிழ்ச்சி
உண்டாகும்.
பசியைப் போக்கும் ஜீவகாருண்யத்தினால்!
ஆன்ம உருக்கம்
ஆன்ம நெகிழ்ச்சி
ஆன்ம மகிழ்ச்சி
உண்டாகும்.
மேலே கண்ட இரண்டு வழிமுறைகளில் எது உயர்ந்தது ? எது தாழ்ந்தது ?
மன மகிழ்ச்சி யா ?
ஆன்ம மகிழ்ச்சி யா ?
மனமகிழ்ச்சி நிரந்தரம் இல்லை.
ஆன்ம மகிழ்ச்சி நிரந்தரமானது.
ஆன்மா மகிழ்ச்சி அடைந்தால் தான் ஆண்டவரும் மகிழ்ச்சி அடைவார்.
ஆண்டவர் மகிழ்ச்சி அடைந்தால் மட்டுமே அருள் பெற முடியும்.என்ற உண்மையை கண்டு அறிந்தவர் வள்ளலார்.
எனவே தான் பக்தி என்னும் உருவ வழிபாட்டால் எந்த பயனும் இல்லை.எந்த லாபமும் இல்லை என்றார்.
இறைவனால் படைத்த உயிர்களின் பசியைப் போக்குவதே கடவுள் வழிபாடு என்னும் உண்மையை அறிந்து உருவ வழிபாடு வேண்டாம் என்னும் உண்மை புரட்சியை மக்களுக்கு போதித்தார்.
பொய்யான கற்பனைக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களான கதாநாயகர்களை கடவுளாக படைத்து.ஆலயங்களை எழுப்பி. பக்தி என்னும் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சில ஆன்மீகவாதிகளின் கூட்டம் வள்ளலார் மீது அருட்பா மறுட்பா என்னும் பொய் வழக்கும் போட்டார்கள்.
கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் நீதி மன்றம் சரியான தீர்ப்பு வழங்கி வள்ளலார் வெற்றி பெற்றார்.வழக்குத் தொடுத்த பக்திவான்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டார்கள்.
அதன் பின்புதான் வள்ளலார்.உருவம் அற்ற.பக்தி அற்ற. ஒளி வழிப்பாட்டு முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி புரட்சி செய்கிறார்.
ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் ஆன்ம இன்ப லாபத்தைப் பெற்று கடவுள் அருளைப் பூரணமாக அடைந்து உண்மையானக் கடவுள் யார் ? என்பதை உலக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார்.
கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற *இயற்கை உண்மையான கடவுளைக் கண்டு களித்து ஒளி வழிப்பாட்டுக்காக வடலூரில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* தோற்றுவித்துள்ளார்.
*உருவ வழிப்பாட்டு பக்தியால் ஆன்ம லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை*.
உயிர் இரக்கமான ஜீவகாருண்யத்தால் மட்டுமே அருளைப் பெற்று *ஆன்ம இன்ப லாபத்தை* பெறமுடியும்.
ஆன்ம இன்ப லாபத்தால் மட்டுமே மனிதன் மரணத்தை வென்று.என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும் பேரின்ப லாபத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும்.
அறிவு சார்ந்த *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை* உடைய அன்பர்களே பக்தியா ? ஜீவகாருண்யமா ? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
வள்ளலார் பாடல் !
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.!
*மேலே கண்ட பாடல் மக்களின் அறிவுக் கண்களைத் திறந்த்தாகும்.*
உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணத்தால் செயலால் மட்டுமே நிறைவேறும்.வெற்றி பெற முடியும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு