வெள்ளி, 21 ஜூன், 2019

தண்ணீர் விரயம் ஆவதில்லை !

தண்ணீர் விரயம் ஆவதில்லை.!

தண்ணீர் எப்போதும் வீணாவதில்லை தண்ணீர் தடம்மாறுகிறது இடம் மாறுகிறது.உருமாறுகிறது.சேமிக்கப் படுகிறது.கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் போகிறது..

இயற்கை வழங்கும் எந்தப் பொருளும் இந்த உலகைவிட்டு வெளியே செல்லமுடியாது.

ஏதோ ஒரு ரூபத்தில் இருந்து இயங்கி சென்று கொண்டேதான் உள்ளன.

மனித குணமே மாற்றங்களுக்கு எல்லாம் காரண காரியமாக இருக்கின்றது..

மழையோ உலகம் முழுவதும் பொழிந்து கொண்டே தான் உள்ளது இடம் மாறி மாறி பொழிகின்றது. அவ்வளவுதான்..

நமக்கு தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டதே என நினைக்கிறோம்..அதே தண்ணீர் வேறு மாநிலங்களில். வேறு நாடுகளில் நிறைந்து வழிகின்றது.

இதற்கு எல்லாம் காரணம் என்ன ?

இயற்கை உண்மைகளையும் இயற்கை செயல்களையும்.இயற்கை உணர்வுகளையும் தெரிந்து அறிந்து வாழ மனிதன் தகுதி அற்றவனாக இருக்கிறான்..

மனித சட்டத்தினாலோ.திட்டத்தினாலோ எதுவும் முழுமையாக இயற்கையிடம் இருந்து பெறமுடியாது.

ஆயிரக்கணக்கான பொய்யான கடவுள்களை வேண்டினாலும் மழை வராது..

கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டியது யாவும்  இயற்கையால் கிடைக்கும்.

இயற்கை உண்மை வடிவினன் கடவுள் ! என்கிறார் வள்ளலார்.

இயற்கை உண்மை வடிவினன் இயற்கை விளக்கமாக. இயற்கை இன்பம் தருபவனாக செயல் பட்டுக் கொண்டுள்ளார்.

அவர்தான் அருட்பெருஞ்ஜோதி பேரொளியாக இந்த உலகத்தை இயக்கிக் கொண்டு உள்ளவராகும்.

அவரைப்பற்றி அறிந்து கொள்ளாமல்
இறைவன் யார் என்ற உண்மை அறியாது எவ்வளவு தான் வேண்டியும் பயன் இல்லை.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ! என்பதுதான் இயற்கையின் நியதி..

உண்மை ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையே மனித வாழ்க்கையாகும்.

எல்லா உயிர்களிடத்தும்.அன்பும்.தயவும்.
கருணையும்.இரக்கமும் கொண்டு வாழ்ந்தால்.கொடுக்க வேண்டிய காலத்தில் .கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டே இருப்பார்..

இயற்கை நேசிப்போம் இன்பமுடன் வாழ்வோம்.

இயற்கை உண்மை என்பது ஆன்மா.அது தன்னுள் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளது.அதுதான் உள் ஒளி என்பதாகும்.

அதுவே இயற்கை உண்மையாகும் அதுவே கடவுளின் ஏகதேசமாகும்..

அதுவே தன்னை அறிதலாகும்.

தன்னை அறிந்தால் தனக்கு ஒரு கேடில்லை என்பது சத்திய வாக்கு..

தன்னை அறிந்து இனபம் உற வெண்ணிலாவே ...ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே !

என்பார் வள்ளலார்.

தன்னை அறிந்து வாழ்ந்தால்.தண்ணீரும் வரும்.கண்ணீரும் வரும்.சுத்தமான பண்ணீரும் வரும்.என்றும் அழியாத அமுத மழையும் பொழியும்.

நாட்டில் பஞ்சம்.பட்டினி.வறுமை.பற்றாக்குறை என்றும் தலை தூக்கி ஆடாது...

எல்லா உயிர்குலமும் மகிழ்ச்சி யுடன் வாழும்வழி தானே கிடைக்கும்.

சிந்திப்பீர் செயல்படுவீர்..

இது அருள் வாக்கு !

அசட்டை செய்யாதீர்கள்.

ஒழுக்கம் நிறைந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்..

ஒழுக்கமும் அன்புமே உயர்வுக்கு வழி..

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் !

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் !

என்பது சான்றோர் வாக்கு....

தவம் என்பது தன்னை அறிதலே தவமாகும்.எதிர்பார்க்காமல் செய்யும் ஜீவகாருண்யமே தானம் என்பதாகும்.இந்த இரண்டும் இல்லை என்றால் வானம் மழை பொய்யாது என்பதாகும்.

உயிர் இனங்கள் வாழும் வகை அறியாமல் மாண்டுபோகும்.

எனவே மனிதனுக்கு.. தானமும் தவமும் மிகவும் முக்கியமாகும்.

நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் முழுவதும் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு