கடவுள் விளங்கும் இடம் !
*கடவுள் விளங்கும் இடம் !*
இந்த உலகத்தில் கடவுள் விளங்கும் இடம் தெரியாமல் மக்கள் ஆலயங்கள்.சர்ச்சுக்கள்.மசூதிகள்.புத்தகயா மற்றும் சிறிய பெரிய தெய்வங்கள் இருப்பதாக எண்ணி பற்பல இடங்களுக்குச் சென்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி மாறி மாறி அலைந்து கொண்டே உள்ளார்கள்...
தங்கள் குறைகள் முழுவதுமாக தீர்ந்த்தா ? என்றால் எப்போதும் தீர்ந்தபாடு இல்லை..
மக்கள் செல்லுகின்ற இடங்களில் கடவுள் இருந்தால் தானே வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்
பாவம் மக்கள் ! உண்மைக் கடவுள் இருக்கும் இடம் இயங்கும் இடம்.அருள் வழங்கும் இடம் எந்த இடம் என்று அறிந்து கொள்ளாமல் . அறியாமையில் வெளியில் தேடி அலைகிறார்கள் சுற்றுகிறார்கள்
என்பதை உணர்ந்த கருணையே வடிவமான வள்ளலார்..
மக்களுக்கு இயற்கை உண்மைக் கடவுள் இருக்கும் இடத்தை தெரிவித்து.அந்த கடவுளின் இயற்கை விளக்கத்தை வெளிப்படக் காட்டுவதற்காக
*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை .தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் வடலூர் என்னும் சிற்றூரில் எண்பது காணி நிலப்பரப்பின் மத்தில் தோற்றுவித்துள்ளார்*
அந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையானது எல்லா உலகுக்கும்.எல்லா மக்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகும்..
*சாதி சமயம் மதம் கடந்த்து*
எல்லா உயிர்களிலும் இறைவன் ஒளிமயமாய் விளங்குகின்றார் .அவர் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி யாக ஐந்தொழில் வல்லபத்தையும் இடைவிடாது செய்து கொண்டு இருப்பவர் என்பதை அறிந்தவர்.தெரிந்தவர்.அதனுடன் கலந்தவர் .கண்டவர் வள்ளலார் ஒருவரே.
வள்ளலார் பாடல் !
அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!
மேலே கண்ட பாடலில்... *எல்லாம் வல்லவராய் விளங்கும் தனிக்கடவுள் ஒருவரே என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதி யர் என்றும் ஆணித்தரமாக அறிந்து தெளிந்து மக்களுக்கு தெரிவிக்கிறார்..*
அந்தக் கடவுளை கண்டு அதனுடன் கலந்து கொண்டதையும் விளக்குகின்றார்...
இதோ வள்ளலாரின் அனுபவ பாடல் !
*கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்*
*கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்*
* *திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்*
*அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்*
*உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்*
*உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்*
*இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே*
*இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!**
மேலே கண்ட பாடல் எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவு செய்துள்ளார்.
இந்தப் பாடலில் ஒரு உண்மையைத் தெளிவாக விளக்கி உள்ளார்..உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டதால் அருள் முழுமைப் பெற்றேன் இடர் தவிர்கும் சித்தி எலாம் பெற்றேன் என்கிறார்...
*அதாவது மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் சித்தி வல்லபம் யாவும் பெற்றேன்* என்கிறார்.
சித்தி வல்லபம் பெற்றதால் தான் உண்மைக்கடவுளை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்த . ஆன்மநேய உரிமையுடன் *வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை தோற்றுவித்து* வழிபடவும் வணங்கவும் வழிவகை செய்துள்ளார்.. என்பதை. மனித தேகம் பெற்ற ஒவ்வொருவரும் அறிவு பூர்வமாக அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்..
மனிதர்களுக்கு வரும் தீமைகளை தீர்க்கும் ஒரே இடம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்...
*வடலூருக்கு வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை.வணங்கி வழிபாடு செய்பவர்களுக்கு எவ்விதமான துர்மரணமும் இதுவரை வந்த்தே இல்லை என்பது உலகம் அறியும்.*
இதுவே வடலூர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழிபாட்டிற்கும் மற்ற வழிபாட்டிற்கும் உள்ள வேற்றுமை ஒற்றுமையாகும்.
*மரணத்தை வென்று வாழ்வது பெரிய விஷயம் அதற்கு வள்ளலார் போன்றோரின் தகுதி பெற வேண்டும்*
*நாம் உயிர்நலம் உடல்நலம். குடும்பநலம் பெற்று என்றும் மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வள்ளலார் தோற்றுவித்த உண்மைக்கடவுள் விளங்கும் இடமான சத்திய ஞானசபை வழிபாடே சிறந்ததாகும்..*
இங்கு வந்து வந்து தரிசிப்பீர்களானால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்...
வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்...
சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும்,
பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே,
இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை
எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து
இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
என்னும் விண்ணப்பத்துடன் வேண்டி.. வந்து வந்து தரிசிக்க வேண்டும் என்று நமக்கு வள்ளலார் சொல்லிக் கொடுக்கின்றார்...
அப்படி தரிசித்து வந்தீர்களானால்
*கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல்.மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பு அடையலாம்.இது சத்தியம் சத்தியம் சத்தியம் இது ஆண்டவர் கட்டளை என்கிறார்*.
மேலும் சொல்கிறார்...
எல்லோருக்கும் தாய்.தந்தை.அண்ணன்.தம்பி.முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ ..
அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்...்இது ஆண்டவர் கட்டளை....
என்று உலக மக்களின் நலனுக்காக அன்புடனும்.தயவுடனும்.கருணையுடனும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வடலூருக்கு அழைக்கின்றார் வள்ளலார்...
மேலும் வந்தவர்கள். மற்றவர்களையும் அழைத்து வாருங்கள் என்கிறார் ஏன் ? என்றால் ..
வடலூர் உள்ள சத்திய ஞானசபையில் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து அருள்பாலிக்கின்றார்...
எனவே வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்பதை அழுத்தமாக.. உண்மையைச் சொல்லி அன்புடன் அழைக்கின்றார்.... ்
வள்ளலார் பாடல் !
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!
என்ற பாடல்வாயிலாக உண்மைத் தெய்வம் விளங்கும் இடத்தை தெளிவாக விளங்க வைக்கிறார்.....
மேலும் வள்ளலார் பாடல் !
உலகமெலாஒம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே
இலக எலாம் படைத்து ஆருயிர் காத்தருள் என்றது என்றும்
கலக மிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகம் மெனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே.!
உலகத்திற்கே திலகமாய் விளங்குகின்றது தான் உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலாரில் உள்ள சத்திய ஞானசபையாகும்....
உண்மையை உணர்ந்து வடலூர் வருகை புரிந்து உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கி வழிபட்டு பெற வேண்டியதை பெறுவோம்...
அன்புடன் வரவேற்கின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ...
வாருங்கள் வாருங்கள் வாருங்கள்...வந்தால் பெறலாம் நல்ல வரமே !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு